12-29-2005, 09:40 PM
குறுக்காலபோவான் ஏன் எப்பவும் குறுக்கால போறீங்கள்?? நீங்கள் வாதத்தில் பங்கு பற்ற விரும்பினால் உங்கள் பெயரை பதிவு செய்து இருக்கலாம். மற்றது நீங்கள் சொன்ன கருத்துக்களை வாதம் முடிந்த அப்புறம் சொல்லி இருக்கலாம். மற்ற அணியினர் வாதத்தை வைக்க முதல் அவர்களை சோர்வடையச் செய்யகூடிய கருத்துக்களை தயவு செய்து வைக்க வேண்டாம் எனத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். தயவு செய்து பட்டிமன்றத்தில் பங்கு பற்றாதோர் பட்டிமன்றத்தில் பங்குப்ற்றுவோரை உற்சாகம் ஊட்டக் கூடிய கருத்துக்களை முன்வைக்கவும். அவ்வாறு இல்லாத கருத்தை பட்டிமன்றம் தீர்ப்பு சொன்ன பிறகு வைக்கவும் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
<b> .. .. !!</b>

