12-29-2005, 09:28 PM
குறுக்காலைபோய் குளப்புறதுக்கு மன்னிக்கவும். இணைய ஊடகத்தால் நன்மையில்லை சீரழிந்து தான் போகிறார்கள் என்று வாதிடப்போகிறவர்களை நினைத்தால் பரிதாபமாக இருக்கு.
தனியே பட்டிமன்ற வாதத்திற்காக என்று இல்லாமல் உண்மையிலும் இளைஞர்களும் யுவதிகளும் சீரழிகிறார்கள் என்ற நிலைப்பாடு கொண்டவர்கள்:
-1- அச்சடிக்கும் தொழிநுட்பம் வழர்ந்து எழுத்துக்களும் படங்களும் கொண்ட பத்திரிகைகள் சஞ்சிகைகள் புத்தகங்கள் வெளிவரத் தொடங்கிய காலத்தில் இருந்தால் அச்சடிக்கும் தொழிநுட்பம் ஆபாசத்தை பிரதி பண்ணி இலகுவாக பகிர வழிவகுக்கிறது என்று சொல்லியிருப்பார்களா?
-2- புகைப்பட தொழில்நுட்பம் பாவனைக்கு வந்த காலத்தில் இருந்திருந்தால், வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத வக்கிரத்தை ஆபாசத்தை பரப்பி பகிர்ந்து சீரழிக்கிறது என்று வாதிட்டிருப்பார்களா?
-3- தொலைக்காட்சி தொழில்நுட்பம் பாவனைக்கு வந்த ஆரம்ப காலத்திலிருந்திருந்தால் ஆபாசம் கட்டுப்பாடு இன்றி வானலைகளில் வந்த எல்லோரையும் கெடுத்து குட்டிச்சுவராக்கிறது. எம்மை சுற்றியுள்ள வானலைகளில் ஆபாசம் இருக்கு என்றதை நினைக்கவே ஏதோ செய்கிறது என்றிருப்பார்களா?
-4- தொலைபேசி பாவனைக்கு வந்த ஆரம்ப காலத்திலிருந்திருந்தால் ஆபாசங்களை நேருக்கு நேர் சந்திக்காமலே உடனுக்கு உடன் அன்னியேன்னியமான முறையில் பகிர வழிகோல்கிறது என்று தொலைபேசியை வீடுகளில் தடை செய்ய வேண்டும் என்று வாதிட்டிருப்பார்களா?
மொத்தத்தில் எந்த வழிதேடித்தரும் தொழில்நுட்பத்தையும் (enabling technologies) அதைப்பாவிப்பவர்களின் கையில்தான் நன்மையும் தீமையும் உண்டு. எந்த ஊடகத்தை எடுத்தாலும் வயதுக்கு மற்றும் பக்குவத்திற்கு ஏற்ற மாதிரி ஆணும் பெண்ணும் பாவிக்கிறார்கள். எதனால் கவரப்படுகிறார்களோ தூண்டப்படுகிறார்களோ வசீகரிக்கப்படுகிறர்களோ அதையே கிடைக்கும் எல்லா ஊடக மற்றும் தொடர்பாடல் முறையினாலும் தொடர்கிறார்கள். அந்த வகையில் புலத்திலோ அல்லது எங்கு இருப்பவர்களுக்கோ இணையத் ஊடகம் விதிவிலக்கல்ல.
இந்த விவாத தலைப்பானது பட்டி மன்றம் சூடுபிடிக்க முதலே முடிவு தெரிந்த நிலமையில் இருக்கிறது போலவே தெரிகிறது. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->