12-29-2005, 02:13 PM
rajathiraja Wrote:அது எனக்கு எஙகள் நாட்டின் வேற்றுமயில் ஒற்றுமையை குறிபபதாக நான் எடுத்து கொள்கிரேன். அதாவது இந்திய தேசியம். தமிழ் தேசியம் புதிதாக உள்ளது அதான் கேட்டேன். தவறா?
தவறில்லைத் தோழரே நீங்கள் கேள்வி கேட்பது நல்லது ,கேள்வி கேட்டால் தான் படிக்க முடியும்.உங்கள் கருத்தாடலை நான் கவனித்த மட்டில் உங்கள் அரசியல் அறிவின் மட்டுப்படுத்தல் தான் உங்கள் கருத்துக்களின் ஆளம் கட்டுப் படுகிறது என்பது விளங்குகிறது.
தொடர்ந்து தேடுங்கள் நீங்கள் கேட்பவை பார்ப்பவை மட்டும் தான் சரி என்று நிறுத்தி விடாதீர்கள்.உங்கள் தேடல் ஈற்றில் எங்கு போய் முடியும் என்றும் எமக்குத் தெரியும்.காரணம் நாம் எமது வரலாற்றுத் துயரத்தால் நீண்ட நட்களின் முன்னரே தேடலைத் தொடக்கினோம் இபோது இங்கு வந்து நிற்கிறோம். நாம் எமது வாழ்விற்காக போராடத் துணிந்தோம் அதற்காக அரசியல் கற்றோம் இன்னும் பலதைக் கற்றோம் போராடுவதற்காக.அந்தப் பிரச்சினைகள் உங்களை அழுத்தவில்லை அதனால் நீங்கள் கற்கவில்லை.ஆனால் இப்போது முயற்சிக்கிறீர்கள் அது நன்று,வரவேற்கத்தக்கது .அத்தோடு எங்கள் வரலாற்றுத் துயரத்தையும் வேதனையையும் புரிந்து கொள்ளுங்கள்.

