12-29-2005, 05:11 AM
தினமலர் செய்தி
சென்னை: தமிழகத்தில் விடுதலை புலிகள் ஊடுருவியிருக்கலாம் என்ற அச்சத்தின் காரணமாக நாளை (30ம் தேதி) சென்னை வருவதாக இருந்த இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சேயின் விஜயம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், மாநிலம் முழுவதும் ஒரே நேரத்தில் அனைத்து இலங்கை அகதிகள் முகாம்களிலும் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். புலிகள் ஊடுருவியிருக்கலாம் என உளவுத் துறை தெரிவித்த தகவல்கள் அடிப்படையில் இந்த அதிரடி சோதனை நடப்பதாகக் கூறப்படுகிறது.
ஜனாதிபதி அப்துல் கலாமின் அழைப்பை ஏற்று, இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே, நான்கு நாள் அரசு முறை பயணமாக நேற்று முன்தினம் டில்லி வந்தார். அதிபரான பிறகு அவர் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் இது என்பதால் டில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நேற்று அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேசினார். இரு நாட்டு உறவுகள், விடுதலை புலிகளுடனான பேச்சுவார்த்தை, வர்த்தக விஷயங்கள், இலங்கையில் சமீபத்தில் நடந்து வரும் வன்முறை சம்பவங்கள் குறித்து அவர்கள் விரிவாக ஆலோசித்தனர்.
இந்தியா கவலை: இலங்கையில் இந்த மாதத்தில் தமிழ் எம்.பி., மற்றும் 45 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். திடீரென ஏற்பட்டுள்ள இந்த வன்முறை தாக்குதல்கள் குறித்து இந்தியா கவலை தெரிவித்துள்ளது. இது அந்நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் அமைதி முயற்சிக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என இலங்கை அதிபர் ராஜபக்சேவிடம் எடுத்துக் கூறப்பட்டதாக வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
முகாம்களில் சோதனை: அதிபர் ராஜபக்சே இன்று (29ம் தேதி) கேரளாவில் உள்ள கொச்சி செல்கிறார். பின்னர் இலங்கை செல்லும் வழியில் நாளை 30ம் தேதி அவர் சென்னை வருவதாக கூறப்பட்டது. இதற்காக தமிழகம் முழுவதும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
தமிழகத்தில் இலங்கைத் தமிழர்கள் முகாம்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளன. அங்கு போலீசார் தீவிர கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். வெளி மாநிலங்களில் இருந்து வரும் சந்தேகத்துக்கு இடமான நபர்களிடம் "கியூ' பிராஞ்ச் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முகாம்களில் உள்ள இலங்கை தமிழர்கள் இரண்டு நாட்களுக்கு எங்கும் செல்லக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் எட்டு இடங்களில் இலங்கை தமிழர்கள் முகாம்கள் உள்ளன. அங்கு இரண்டாயிரம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் "கியூ' பிராஞ்ச் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
சென்னை பயணம் ரத்து: இதற்கிடையில் இலங்கை அதிபர் ராஜபக்சேவின் சென்னை பயணம் ரத்து செய்யப்பட்டதாக நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த தகவலை வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் நவ்தேஜ் சார்னா டில்லியில் நேற்று உறுதி செய்தார். தமிழகத்தில் விடுதலை புலிகள் ஊடுருவி இருக்கலாம். அவர்கள் அதிபர் ராஜபக்சே மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அவரது சென்னை பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், ரத்துக்கான காரணத்தை கூற வந்தேஜ் சார்னா மறுத்து விட்டார்.
நார்வே கோரிக்கை : இலங்கையில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது குறித்து அமைதிக்கான முயற்சியில் ஈடுபட்டு வரும் நார்வே நாடு கவலை தெரிவித்துள்ளது. இது குறித்து நார்வே வெளியுறவு அமைச்சர் எரிக் சோல்ஹிம் கூறுகையில்," இலங்கை அரசும், விடுதலைப்புலிகளும் 2002ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி செயல்பட முன்வர வேண்டும்,' என கோரிக்கை விடுத்துள்ளார்.
க்ட்ட்ப்://ந்ந்ந்.டினமலர்.cஒம்/2005Dஎc29/fப்னெந்ச்2.அச்ப்