12-28-2005, 10:27 PM
யாழில் இராணுவம் துப்பாக்கிச் சூடு - இரண்டு மாணவர்கள் பலி
யாழ். நல்லூருக்கு அருகே, பருத்தித்துறை வீதியில் அமைந்துள்ள முத்திரைச்சந்தியில் காவலில் நின்ற சிறீலங்கா இராணுவத்தினர், அப்பகுதியில் NP துயு- 5773 என்ற இலக்கமுடையமோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த இருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் இருவரும் கொல்லப்பட்டுள்ளனர்.
இன்று புதன்கிழமை மாலை 5 மணியளவில் அப்பகுதியில் பயணித்த இரு சாதாரண மாணவர்களே இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இருப்பினும், இவர்களது மோட்டார் சைக்கிளை நிறுத்தும்படி கட்டளை பிறப்பித்தபோது, நிறுத்தாது சென்றதால் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாக இராணுவம் கூறியுள்ளதுடன், அவர்களிடமிருந்து கிரனைட் ஒன்றையும் மீட்டதாகக் கூறுகிறது.
அப்பகுதியில் இந்த சம்பவத்தை நேரில் கண்டவர்களின் தகவல்களின்படி, இவர்கள் இருவரும் எந்த ஆயுதத்தையும் வைத்திருக்கவில்லை என்பதுடன், இவர்களை நிறுத்தும்படி இராணுவம் பணிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர். இN த வேளை இன்று யாழ்ப்பாணத்தில் இடம் பெற்ற இருவேறு கிரனேற் வீச்சு சம்பவங்களில் இரண்டு ராணுவத்தினர் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த மாணவர்கள் இருவரது உடல்களையும் யாழ்மாவட்ட நீதிபதி சரோஜினி இளங்கோவன் அவர்கள் யாழ் வைத்தியசாலையில் பார்வையிட்டுள்ளார்.
சங்கதி

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>