12-18-2003, 02:26 PM
டிசம்பர் 17, 2003
பழ. நெடுமாறன் ஜாமீனில் விடுதலை
சென்னை:
பொடா வழக்கில் கைதாகியுள்ள தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் உள்ளிட்ட 4 பேரை ஜாமீனில் விடுதலை செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசியதாகக் கூறி தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன், தாயப்பன், பாவாணன், சுப வீரபாண்டியன் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
தங்களை ஜாமீனில் விடுதலை செய்யக் கோரி நெடுமாறன் உள்ளிட்ட 4 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு செய்திருந்தனர். இந் நிலையில் தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்புகளுக்குத் தார்மீக ஆதரவு தருவது பொடா சட்டப்பட்டி குற்றமாகாது,
ஒரு ஆண்டுக்கு மேல் பொடா சட்டத்தின் கீழ் கைதாகி சிறையில் இருப்பவர்களுக்கு ஜாமீன் வழங்குவதில் சாதாரண நடை¬முறைகளே கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று நேற்று முன்தினம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதன் அடிப்படையில் நெடுமாறன் உள்ளிட்ட நான்கு பேரையும் உயர் நீதிமன்ற நீதிபதிள் சிர்புர்கர் மற்றும் தணிகாச்சலம் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் ஜாமீனில் விடுதலை செய்ய உத்தரவிட்டது.இவர்கள் மீது வேறு வழக்குகள் இல்லை என்பதால் இவர்களை சிறையில் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.
கொள்கை அடிப்படையில், இவர்கள் விடுதலைப் புலிகளைஆதரித்துப் பேசியது குற்றமா, இல்லையா என்பதை நீதிமன்றம் ¬முடிவு செய்யும் என்று கூறிய நீதிபதிகள் நான்கு பேரையும் விடுதலை செய்ய உத்தரவிட்டனர்.
நான்கு பேரும் ரூ.50,000க்கு இரு நபர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். நால்வரும் சென்னையை விட்டு வெளியே செல்லக் கூடாது என்றும், வழக்கு விசாரணைக்குத் தேவைப்படும்போது நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
தமிழகத்தில் பொடா சட்டத்தின் கீழ் கைதாகி ஜாமீனில் விடுதலையாகி வெளியே வரும் ¬முதல் நபர்கள் நெடுமாறன் உள்ளிட்டவர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட 15 மாதங்களாக இவர்கள் சிறையில் வாடி வந்தனர்.
Thanks thatstamil.com

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>