12-28-2005, 06:25 PM
யாழ்ப்பாணத்தில் இரு இளைஞர்கள் இராணுவத்தால் சுட்டுக்கொலை
யாழ் பருத்தித்துறை வீதியின் - சங்கிலியன் வீதிச் சந்தியில், மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு இளைஞர்கள் இராணுவத்தினர் மீது கைக்குண்டுத் தாக்குதலை நடத்த முற்பட்டதாகவும், அதன்போது இராணுவத்தினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இரண்டு இளைஞர்களும் கொல்லப்பட்டதாகவும், கைக்குண்டு ஒன்றும், மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், யாழ் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் பின் ஆசனத்தில் அமர்ந்திருந்தவரே இராணுவத்தின் மீது கைக்குண்டு தாக்குதலை நடத்த முயற்சித்ததாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம இன்று மாலை 5 மணியளவில் நடைபெற்றுள்ளது.
இராணுவத்தினர் சடலங்களை யாழ் வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.
இறந்தவர்கள் உடனடியாக அடையாளம் காணப்படவில்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
சடலங்களையும், சம்பவ இடத்தையும் யாழ் மாவட்ட பதில் நீதவான் திருமதி சரோஜினி இளங்கோவன் சென்று பார்வையிட்டு விசாரணைகளை நடத்தியுள்ளார்.
இதேவேளை, யாழ்ப்பாணத்தில் உரும்பிராய், புன்னாலைக்கட்டுவன் ஆகிய இடங்களில் இராணுவத்தினர் மீது இன்று நடத்தப்பட்ட இருவேறு கைக்குண்டு தாக்குதல்களில் இரண்டு இராணுவத்தினர் காயமடைந்ததாக யாழ்ப்பாணத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வடமராட்சி புலோலி பகுதியில் நேற்று நடைபெற்ற கிளேமோர் கண்ணிவெடி தாக்குதலில் இறந்த இராணுவத்தினரின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளதாக இராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதல் சம்பவம் நடைபெற்ற பகுதியில் இராணுவத்தினர் மேற்கொண்ட சோதனை மற்றும் தேடுதல் நடவடிக்கைகள் காரணமாக அப்பகுதியில் மக்கள் நடமாட்டமும், வாகனப் போக்குவரத்தும் குறைந்து பதற்றம் நிலவியதாகவும் பருத்தித்துறை நகரில் கடைகள் பூட்டபட்டிருந்ததாகவும், அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
பிபிசி தமிழ்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>