12-18-2003, 12:00 PM
சதாமில் தொடங்கி ஆய்வுகளுக்கு வந்து, அத பற்றிய அலசல்களாக மாறி பின்னர் அது அடி பிடியாக உருவெடுத்து பின்னர் சற்று ஓய்ந்து திரும்பி அப்படியே கிழக்காலை போய் இந்தியாவுக்கை நிண்டு சொறிஞ்சுபோட்டு பிறகு தலையை பிச்சபடி இப்ப கொசுக்கடியிலை வந்து நிக்கிகுது. இதின்றை தலைப்பு சதாம் கைதுக்குப் பின்... நான் தலைப்பை சதாம் கைதுக்கு பின் நடை பெற்ற கொசுக்கடி எண்டு மாற்றும் படி தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன்.
சரி நானும் கொசுக்கடிக்கு போகாமல் விசயத்தக்கு வாறன் நேற்று சதாம் கைதுக்குப்பின் தலைப்பை மதிவதனனன் வைத்த நோக்கத்தை பாரத்தால் அந்த ஆய்வை பற்றிய விமர்சனத்தையே வைத்திருக்கிறார். அப்ப நானும் கொஞ்சம் அந்த விசயத்தை பற்றி வேறமாதிரி கதைப்பம் எண்டு நினைக்கிறன். தயவு செய்து ஆரும் வில்லங்கத்துக்கு வந்திராதையுங்கோ.
உந்த ஆய்வு, அலசல், அறிவிப்பு எல்லாம் இப்ப கண்டபடி எங்கடை புலமபெயர் வானொலி தொலைக்காட்சி எல்லாத்திலையும் நடக்குது. அதிலை சிலது கேட்கலாம், சிலது ரசிக்கலாம் சிலதை கேட்டால் சிரிப்பு வரும், ஆனால் சிலதைக் கேட்டால் வாயாலை மூக்கலை ரத்தம் வாற மாதிரி இருக்கு. உந்த அலசல், ஆய்வு வியாதி வெளி நாட்டு தொலைக்காட்சி, மாற்றும் வானொலியைப் பார்த்து தான் நம்மடை அக்களும் செய்ய வெளிக்கிட்டம். ஆனால் இந்த வெளி நாட்டு வானொலி, தொலைக்காட்சியிலை வாற ஆக்கள் 99வீதம் தாம் பேச வந்த அந்த விடயத்தில் அறிவுபூர்வமான செழுமையை கொண்ட ஒரு நபராகவே அல்லது குழுவாகவோ இருப்பர்கள். ஆனால் நம்மடை ஆக்களிலை ஒரு 5வீதத்தை தவிர மிச்சம் முழுக்க அரை வேக்காடு ஆய்வாளர்களும் அலசலர்களும் தான். தொரணத்துக்கு நாம் கதைக்க வந்த இந்த ஈராக் பற்றிய விடயத்திற்கு வருவம், சதாம் பற்றிய ஆய்வு மற்றும் அலசல்கள் செய்த நம்மடை ஆய்வாரள்களில் எத்தனை பேர் சதாமின் வாழ்க்கை வரலாறு பற்றிய வெளிவந்த நு}ல்களில் ஒன்றையாவது படித்தவர்கள்? ஒரு சிறிய வறிய குடும்பத்தில் பிறந்து இன்று உலகை இவ்வளவு து}ரம் ஆட்டிப்படைத்த சதாமின் வாழ்க்கை வரலாற்றைத்தான் விடுவம் புறைந்த பட்சம் அமரிக்கா மற்றும் ஏனைய ஐரோப்பிய நாடுகள் ஈராக்குடன் வைத்திந்த உறவகள் பற்றிய விடயங்களை ஆய்வு செய்து, வளைகுடா யுத்தம், ஈரானிய யுத்தம், மற்றும் நசீர், சதாம், அரபாத் உறவு போன்ற பல்வேறு தனிப்பட்ட உறவு விடயங்களை படித்தறிந்து அதை அடிப்படையாக வைத்து அய்வு அலசல் செய்யாது, வெறுமனே இணையத்தளங்களி உள்ள ரைம்லைனையும் அதில் ஒர நுனிப்புல் மேய்ந்து விட்டு ஆய்வு செய்யும் அலசல் வீரர்கள் தான் தற்போது அதிகளிவில் நமது வானொலிகளையும் தொலைக்காடசியையும் அலங்கரித்து வருகிறார்கள். சரி அந்தளவு ஆராட்சி தான் வேண்டாம், தினசரி வாற தரமான பத்திரைகையை முழமையாக வசித்தாலே ஓரளவு பேசவந்த விடயம் பற்றிய அறிவை வழர்க்க முடியும், ஆனால் இதை தொடர்ச்சியாக செய்யவேண்டும். சில ஆய்வாளர்கள் அது கூட செய்வதில்லை. பீ.பீ.சியலை வாற ரைம்லைனை கொண்டு வந்து வைச்சுப்போட்டு கேள்விப்பட்டது அவர் சொன்னது இவர் சொன்னதை வைச்சுத்தானே இப்ப அலசல், ஆய்வு எல்லாம் வருகுது. இணையத்தளத்தல் வரும் தகவல்கள் ஆழமானவை அல்ல. மெலெழுந்தவாரியான தகவல்களே அதில் வரும். உதாரணத்திற்கு ஒரு வியடம். சதாம் கைது செய்ததை அடுத்து இணையத்தளத்தில் நான் வாசித்த செ;ய்திகளை விட பத்திரிகையில் வெளி வந்த செய்திகள் தான் அதிகம். கிட்டத்தட்ட 16, 17 பக்கங்களை நிரப்பிய இந்த செய்திகள் அழமான செய்தியை தந்ததோடு அதை மிக அழகாக விபரித்தும் இருந்தார்கள். ஆனால் இணையத்தளங்கள் சம்பவங்களை மட்டும் சொன்னதே தவிர அது பற்றி ஆய்வையோ, அலசல்களையோ இலவசமாகத் தரப்போவதில்லை. ஓசியில் விசயம் கொண்டு நடத்தும் நம்மடை ஊடகங்களிலை பணம் கொடுத்து அறிவை வழர்க்கும் அய்வாளர்கள் இல்லாமல் இல்லை. அனால் வீதாசாரம் மிகவும் குறைவு. நமது ஊடகங்களில் இந்த அய்வகள், அலசல்கள் செய்பவர்கள் கலாநிதிகளாக இருக்க தேவையில்லை, குறைந்த பட்ச தொடர்ச்சியான வாசிப்பை கொண்டவர்களாகவாவது இருக்க வேண்டும் என்பது தான் நமது ஏக்கம். இவர்கள் வெளிவிடும் கருத்தக்கள் மக்களின் மனதில் நிச்சயம் தாக்கங்களை ஏற்படுத்தும். ஆனால் ஆழமான தேடலுடன் உண்மையான மற்றும் நேர்மையான செய்திகளை வைத்து ஆய்வுகள், அலசல்கள் வந்தால் மட்டுமே அது நியாயமான தாக்கமாக இருக்கும். வெறும் மேலெழுந்தமான அறிவை மட்டும் உள்வாங்கி செய்யப்படும் ஆய்வுகள் மற்றும் அலசல்கள் நிச்சயம் மக்ககளின் மனதை ஏமாற்றுவதுடன் விரைவில் மக்களிடமிருந்து நிராகரிக்கபடவும் செய்யும்.