12-28-2005, 10:54 AM
தூயவன் Wrote:sOliyAn Wrote:இளைஞர்களுக்கேற்ற தலைப்பு வரப்போவது போல தெரிகிறது.. ஆகவே.. நானும் களத்தில குதிக்க கொடுக்குக் கட்டிப்போட்டன்.. <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> இந்தமுறை மோதலோ மோதல் கருத்து மோதல்தான். :wink:
பாத்தியளோ!!
சோழியன் அண்ணா சைட் கைப்பில் தன்னை இளம்பெடியன் என்று சொல்லிப் போட்டார். ஆனாலும் இப்ப தலையில் கறுப்பு முடி புடுங்கின்ற அளவு நரைச்சுப் போட்டாமே? :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<b>மிக்க மகிழ்ச்சி... சோழியான் அண்ணா..! உங்கள் உற்சாகம் தரும் பதில் இங்கு இந்தப் பட்டிமன்றத்தை வெகு சிறப்பாக முன்னெடுக்க உதவும் என்று எண்ணி வாழ்த்துகின்றோம்..!</b> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> தூயவன்...
94 வயதில டிகிரி படிக்கிற இளைஞனும் இருக்கிறான் உலகில்..! 18 வயதில் சந்தியில் தூங்கும் மனிதனும் இருக்கிறான்..! இளைஞன் என்பதுக்கு வெறும் பிறந்ததில் இருந்தான காலம் என்பது அல்ல வரையறை...! அது சமூகத்தில் பலரின் தவறான கண்ணோட்டமும் கூட..! அறியாமையில் கூத்தடிக்கும் குணமல்ல இளைஞத்தனம்..! அத்தோடு...இதுதான் இளமை என்று எங்கும் காலம் குறித்து திடமான திட்ட வரையறையில்லை.!
ஒரு தடவை மனிதப் பருவங்கள் பற்றிய உளவியல் நூல் ஒன்றைப்படித்த போது..ஒரு தனி மனிதனின் ஆளுமையும் திறமையும் வெளிப்படும் அளவில் தான் அவனது இளமை என்பது தங்கி இருக்கிறது என்பதாக அது சொல்லி இருந்தது..! மனித வாழ்வுக்காலத்தில் ஆளுமையும் திறமையும் அதிகம் வெளிப்படுவது நாற்பதைத் தாண்டிய பிந்தான். அநேக நோபல் பரிசாளர்கள்.. அடங்குவதும் அதற்குள் தான்..!
அதுபோல் இளமை ஆணுக்கும் பெண்ணுக்கும் வேறுபட்டது. பெண்கள் ஆண்களை விட விரைவாக ஆளுமை முதிர்ச்சி கண்டுவிடுவார்கள்..! பிரச்சனை என்னவென்றால் அவர்கள் திறமையை வெளிப்படுத்த பின்னிற்பதுதான்..! ஆளுமை முதிர்ச்சி கண்ட வயதில் குறைந்த பெண்கள் அவர்களின் திறமையை வெளிப்படுத்த முயலும் போது அவர்களை வயது கூடியவர்களாக சமூகம் இனம் கண்டிடுமே என்று பயம் கொள்கின்றனர்..! அதனால் பல பெண்கள் தங்கள் இயல்பை குறிப்பா ஆண்கள் முன் தங்கள் இயல்பைத் தொலைத்து குழந்தைகள் போல பழகுவதை அவதானித்திருக்கிறோம்..! அது பெண்களின் உளவியல்..! நமக்கேன் வீண் வம்பு..!
இந்த இளமை இளைஞன் யுவதி என்ற தேடல் எமக்கு சிறுவயதில் இருந்தே ஆரம்பிச்சது..! வீட்டில் எப்பவும் ஒரு நியாயத்தைச் சொன்னால் "நீ சின்னப்பிள்ளை உனக்கு ஒன்றும் தெரியாது பேசாம இரு" என்று விடுவார்கள்..! நாம் என்ன சொல்ல வருகின்றோம் என்பதைக் கூட செவிமடுக்க மாட்டார்கள்..! அது பெற்றோரின் கூடிக் கதைப்பவரின் ஆளுமைக் குறைவையே காட்டுகிறது..! அவர்கள் இளைஞர்களா...சிறுவனாக இருந்தும் தான் சிந்தித்ததை துணிந்து சொல்ல முயன்றவன் இளைஞனா...???! அதுபோல்.. எனிப்படிக்க ஏலாது வயசு போட்டு என்று 25 வயதில் படிப்பை உதறுபவன் இளைஞனா..??! 95 வயதிலும் படிக்க வேணும் என்ற ஆர்வத்தை கொண்டவன் இளைஞனா..??! வெறும் உடற்தொழிற்பாடுகள், இனப்பெருக்கும் தகுதி சார்ந்ததல்ல இளமை என்பது..! தனி மனித ஆளுமையை திறனை வெளிப்படுத்தத் தக்க உளப் பலமே இளமைத்தனம்..! அதற்கு வயது வரையறையில்லை..! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

