12-28-2005, 08:32 AM
லக்கிலுக்,
உங்களைத்தடை செய்வதற்குமுன் உங்களை எதிர்த்து எழுதியவர்களில் நானும் ஒருவன். மீண்டும் வருவதில் மகிழ்சி ஆனால் தயவு செய்து எமது பிரச்சினைகளை விளங்கி கருத்தாடுங்கள். உங்களுக்கு இலங்கைத்தமிழர்களின் பிரச்சினை என்ன என்று அதிகம் தெரியாது என உங்களது கருத்தாடல்களிலிருந்து தெரிந்துகொண்டேன். உங்களுக்கு ஏதும் தெரியவேண்டுமென்றால் நீங்கள் இங்குள்ள கள உறவுகளைக்கேட்கலாம். இதனால் எமக்குளுள்ள தப்பபிப்பிராயங்களை குறைக்கலாம். உங்களது தலைவர்கள் உங்களுக்கு பெரிது ஏற்றுக்கொள்கிறேன் அதேபோல்தான் இலங்கைதமிழர்களுக்கும் ஒரு தலைவன் இருக்கிறான். வருடக்கணக்கில் தன் இனத்திற்காக தன் நலம் மறந்து பாடுபடுகிறான். எனவே நீங்கள் யாரும் எதிர்த்து விசயம் தெரியாமல் எழுதும்போது இங்குள்ளவர்களுக்கு நிச்சயமாக கோபம் வருவதில் நியாயமுண்டு ஏனெனில் நாம் பட்ட துன்பத்தை நீங்கள் கனவிலும் கண்டிருக்கமாட்டீர்கள். நான் உங்களது சில எழுத்துக்களை பார்த்ததிலிருந்து - (மற்றைய இணையங்களிலிருந்து) நீங்கள் கொஞ்சமாவது தமிழின்மேல் பற்றுள்ளவர் என்பதை அறிகிறேன் அனால் சில தப்பான கருத்துக்களால் எல்லாம் மாறிவிட்டது. நாம் தமிழர்கள் தமிழ் சகோதரர்கள் என்பதை மனதில் வைத்து கருத்தாடுவீர்களென நம்புகிறேன்.ஏனெனில் நான் பார்த்தவரையில் அனேகமான இந்திய சகோதரர்கள் பக்கத்திலுள்ள ஒரே மொழி பேசும் சகோதரர்களை நம்பாமல் மற்றவ்ரகள் என்ன சொன்னாலும் நம்பி அதுதான் இலங்கையில் நடப்பதாக ஒரு மாயையில் இருக்கிறார்கள். இது மாற்றப்படவேண்டும்.
நான் பழையதை கிளறவில்லை எனவே பழையவைகளை மறந்து புதிதாக எமது பிரச்சினையை விளங்கிய தமிழனாக எழுதுவீர்களென நம்புகிறேன்.