12-28-2005, 05:06 AM
ஒரே வயிற்றில் பிறந்தோம்
ஒரே உடுப்பை போட்டோம்
ஒரே கோப்பையில் சாப்பிட்டோம்
ஒரே படுக்கையில் படுத்தோம்
ஒன்றாய் வளர்ந்தோம்
ஒன்றாய் படித்தோம்
எச்சில் கடி கடித்து
ஏப்பம் விட்டு சாப்பிட்டோம்
இவ்வளவும் எமக்கு அறியாப் பருவத்தில்
வாழ்க்கையை புரியத்தொடங்கினோம் - தனி
வழி போக தொடங்கினோம்
காலிற்கு கட்டு போடும் வயதும் வந்தது
தனி குடித்தனம் போனோம்
அத்துடன் எல்லை சண்டையும்
பக்கென்று வந்தது
உன் மகளின் கலியாண கோலத்தை
என் மகள் மதிலால் ஏட்டி பார்க்கும் அவலம்
அக்கா என்று ஆசையுடன் அழைக்க வேண்டியவர்கள்
கோபக்காரார் என்று எரிசலுடன் பார்க்கிறார்கள்
இன்று நீ யாரோ நான் யாரோ
வீதியில் போகும் போது முகம் பாராத
நாங்கள் கோட்டில் பார்க்கின்றோம்
எல்லை சண்டைக்காக
பெற்றவர்கள் உயிருடன் இருந்திருந்தால்
பித்து பிடித்திருக்கும் நம் நிலை பார்த்து
ஒருவருக்கு ஒருவர் துணை என்று
பாசத்தை ஊட்டி வளர்த்தவர்கள் அவர்கள்
எதிரிகளாய் நாம் நிற்கின்றோம் இன்று
கனவிலும் எதிர்பார்த்து இருப்பார்களோ இந்த நிலையை?
**** அண்மையில் யாழ்ப்பாணத்தில் இரு சகோதரார்களுக்கிடையில் நடந்த சம்பவம் ஒன்று மனதை உலுக்கியது. அதன் வெளிப்பாடு தான் இது. பிழைகள் இருந்தால் சுட்டிக்கட்டவும்*******