Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
"துடிதுடிக்கும் தொப்புள் கொடி உறவுகள்"
#3
மகிந்தவை வரவேற்கும் இந்திய அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்: தொல். திருமாவளவன்
[செவ்வாய்க்கிழமை, 27 டிசெம்பர் 2005, 06:57 ஈழம்] [புதினம் நிருபர்]
ஈழத் தமிழர்கள் மீது அறிவிக்கப்படாத போரை நடத்தும் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவை வரவேற்கும் இந்திய அரசைக் கண்டித்து எதிர்வரும் 30 ஆம் நாள் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் தொல். திருமாவளவன் அறிவித்துள்ளார்.


சென்னையில் தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை:

இலங்கை அரச தலைவராக மகிந்த ராஜபக்ச பொறுப்பேற்ற நாள் முதல் ஈழத் தமிழ் மக்கள் மீது அறிவிக்கப்படாத போரை தொடங்கியுள்ளார்.

கடந்த வாரம் சிறிலங்கா கடற்படையினர் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தர்சினி என்ற தமிழ்ப்பெண்ணை பாலியல் படுகொலை செய்து கிணற்றில் தூக்கி வீசியுள்ளனர்.

இப்படுகொலையை கண்டித்து தமிழர்கள் எழுச்சியுற்ற போது யாழ்ப்பாணம் நகரில் உள்ள தமிழர்களைக் கைது செய்யும் நடவடிக்கையில் சிங்கள இராணுவம் ஈடுபட்டது.

அண்மையில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திற்குள் புகுந்த சிங்கள ராணுவம் அங்கிருந்த மாணவர்களையும், துணைவேந்தர்களையும், கொடூரமாக தாக்கியுள்ளது.

இச்செயல் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய குற்றம் என்பதோடு மனித நேயத்திற்கு எதிரான வன்கொடுமை செயலாகும்.

இந்நிலையில் தமிழ் ஈழத்தில் தமிழினத்திற்கு எதிரான அரசு வன்கொடுமைகளை கட்டவிழ்த்துள்ள சிங்கள அரச தலைவர் ராஜபக்ச இந்திய அரசு உறுதுணையோடு தமிழ் இனத்தை நசுக்க முயற்சிப்பது வேதனைக்குரியதாகும்.

இவ்வாறான சூழலில் தமிழினப்பகைவர் ராஜபக்சவுக்கு இந்திய அரசு வரவேற்பு கொடுப்பது இந்திய எல்லைக்குள் வாழும் 8 கோடி தமிழர்களையும் அவமதிக்கும் போக்காகும்.

எனவே தமிழ்நாட்டு தமிழர்களின் உணர்வுகளை மதிக்கும் வகையில் சிங்கள அரச தலைவர் ராஜபக்சவை இந்திய அரசு நமது நாட்டு மண்ணுக்குள் நுழைய அனுமதிக்க கூடாது.

இதை வலியுறுத்தி வருகிற 30 ஆம் நாள் அன்று காலை 10 மணியளவில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் விடுதலை சிறுத்தைகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

http://www.eelampage.com/?cn=22881
"
"
Reply


Messages In This Thread
[No subject] - by Nellaiyan - 12-27-2005, 10:46 PM
[No subject] - by Nellaiyan - 12-27-2005, 10:48 PM
[No subject] - by Nellaiyan - 12-27-2005, 10:59 PM
[No subject] - by Mathuran - 12-27-2005, 11:17 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)