12-27-2005, 12:34 AM
varnan Wrote:தல என்னதான் நீங்கள் சொல்லுகிறீர்கள்?
போர் நிறுத்த நேரம் படை நகர்வு சாத்தியம் இல்லையா? "இது அவர்களின் தனி பட்ட பிரச்சினை..நாங்கள் இதில் தலை இட மாட்டோம்.. அதோட யரோடயும் தனியாக ஒப்பந்தம் செய்து கொள்ள மாட்டோம் என்று கண்காணிப்பு குழுவே சொன்னது நினைவில்லையா? ஏன் சாத்தியம் இல்லை என்று சொன்னீர்கள்? விளங்கவில்லை
கிழக்கில் படைகள் இல்லை என்பது எல்லாருக்கும் தெரிந்தது...... திருமலையிலும் பெரும் எண்ணிக்கையில் இருந்ததாக இல்லை... வன்னியில் அதுவும். மணலாறு தாண்டிப் போராளிகள் வரவேண்டிய தேவை. ஜெயந்தன் படையணிதான் பிரதேசத்தை மீட்டது.... அப்போது படையணி வன்னியில் நிலை எடுத்து இருந்தது..... கிட்டத்தட்ட 4000 போராளிகள் மீட்க்கப்படாத பிரதேசத்தில் இருந்தனர்.... அப்போ மீட்புப்படைக்கு சாத்தியமான கள நிலமை இருந்திரக்காது அங்கு மரபுவளிப் போர் புரிவதுக்கு சாத்தியம் இல்லை... அதற்கான தந்திரோபாய நகர்வு தேவைப்பட்டது...... தரை அமைப்பைப் பார்த்தால் வெருகல் ஆற்றுப்பகுதி முன்னேறித்தாக்க ஏது இல்லாதபகுதி..... சேதம் இல்லாமல் தாக்குவது சாதாரண விடையம் இல்லை..
அதனால் தான் சொன்னேன்... மக்களில் ஆதரவு இல்லாமல் உள் நுளைந்து தாக்குதல் நாடாத்தமுடியாது.... அதுவும் கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர்களுக்கு தெரியாமல்.... மக்களிற்கு தெரியாமல் படையணிய பின்புறமாய் தரையிறக்கலும் நிலை எடுத்தலும் சாத்தியம் இல்லாத ஒண்று.... மக்களின் பங்களிப்பு கட்டாயம் தேவைப் பட்டிருக்கும்.....
::

