12-26-2005, 09:43 PM
Rasikai Wrote:<b>பந்திக்கு முந்து படைக்கு பிந்து</b>
அதாவது பந்திக்கு முந்து என்றால் ஏதாவது கொண்டாட்டங்களுக்கு செல்லும்
போது அங்கு சாப்பாடு பரிமாறும் நேரம் முதலிலேயே சாப்பாட்டுக்கு அமர்ந்து விட வேண்டும்.
பின்பு சாப்பிடுவோம் என்று இருந்தால் இறுதியில் சாப்பாடு
எல்லாம் முடிந்த நிலையில் அங்கு அரை குறையாகவே சாப்பாடு சாப்பிட வேண்டி வரும்.
படைக்குப் பிந்து என்றால் எப்போதும் சண்டைகள், அடிபாடுகள் நடக்கும் இடங்களில்
முந்தி அடித்துக் கொண்டு முன்னே செல்லக் கூடாது. அப்படி முன்னே சென்றால் உயிருக்கு
ஆபத்து நெரிடும். அப்படியான இடங்களில் பிந்தி நிற்பது நல்லது என நினைக்கிறேன்.
பந்தி படை இரண்டுமே போருக்கான இரண்டு வகை அணிகளை குறிப்பதாக தான் கேள்விப்பட்டேன். சரியாக ஞாபகம் வரவில்லை. ஆனால் இதில் வரும் பந்தி என்பதற்கு உணவு சம்பந்தப்பட்ட பொருள் அல்ல. அதாவது சாப்பிடும் போது கை முன் செல்லவேண்டும் எனும் பொருளும் வராது என நினைக்கிறேன்.

