12-26-2005, 08:56 PM
cannon Wrote:"அவளைத் தொடுவானேன், பின் கவலைப்படுவானேன்" அப்படி இந்த ஆயுதங்களை லேபர் பிரித்தானியாவில் ஆட்சிக்கு வந்ததன் பின் இலங்கை அரசினால் கொள்வனவு செய்யப்பட்டது. இந்த ஆயுத மகிமையை "இக்பால் அத்தாஸ்" தனது "சிற்றுவேசன் றிப்போட்டில்" ஒன்றில் இலங்கை இராணுவத்திற்கு கிடைத்த அற்புத பொக்கிஸம் என்றும், இலங்கை இராணுவம் இதை ஓரிரு முறை பாவித்ததாகவும், அதன் பலன் அற்புதம் என்று ஆகா, ஓகோ என புகழ்திருந்தார். அப்படியான ஆயுதம் தமிழர் கைகளுக்கு எட்டிய எப்படி????????? ... குழம்பட்டும்........
என்னடா தம்பி அவங்களே குழம்பிப் போய் இருக்கிறாங்கள் போதாததுக்கு. தடைசெய்யப் பட்ட ஆயுதம் எண்டுறாங்கள். என்னப்பு நடக்குது.?
தடை செய்யப்பட்ட ஆயுதம் தடைசெய்யப் பட்டவையால பாவிக்கிறது எண்டு கதைவிடுகிறாங்களோ இல்லை உண்மையாத்தான் சொல்லுறாங்களோ.? உந்த ஆயுதங்களை ஆமிக்காறர் வைச்சிருக்கினம் எண்டது சரி. புலிகள் பாவிக்கினம் எண்டு கதைவிட்டு கொண்டு எங்கயாவது சனத்துக்கு மேல அடிச்சுப் போட்டு அதைப் புலிகள்தான் அடிச்சவை எண்டு கதைவிடப் போறாங்கள் அப்பு கவனம் சொல்லிப் போட்டன்.
சிங்களவன் நரியனோ இல்லையோ அவையோட நிக்கிற எங்கட ஆக்கள் நரியள். உதுதான் அப்பு எங்கட கவலையே.!

