Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
உயிர் காத்த லண்டன் "வெண்புறாக்கள்"!
#1
ஆழிப்பேரழை கோரத்தாண்டவம் ஆடி இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. அந்த நேரத்தில் லண்டனில் தமிழர் புனர்வாழ்வு கழகம் தடைசெய்யப்பட்டிருந்தது. புனர்வாழ்வுக் கழகத்திற்கான செயற்பாடுகள் ஓரிரவரால் காட்டிக்கொடுக்கப்பட்டு முடக்கப்பட்ட சூழ்நிலையில் தான் தனது வரலாற்றுப்பணியை "வெண்புறா நிறுவனம்" ஆரம்பித்திருந்தது. பல பல தடைகள், குழிபறிப்புக்கள், காட்டிக்கொடுப்புக்கள், பொய்ப்பிரச்சாரங்களுக்கு மத்தியில் "டாக்டர் மூர்த்தி" எனும் ஓர் தன்னலமற்ற அற்புதமனிதனின் தலைமையில் தொடங்கியது.

ஆழிப்பேரழை அழிவுகளின் விபரங்கள் வெளிவர முன்பே "ஐ.பி.சி, ரி.ரி.என்" ஊடாக வென்புறாக்கள், எம்மிலுள்ள மரத்த இரும்பு இதயங்களைக் கூட தட்டித் திறந்தார்கள். சுனாமியால் பாதிக்கப்பட்ட மிகப்பெரிய நாடுகளே என்ன செய்வதென்று திகைத்து நின்றபோது, "எமக்கு நாமே துணை, மாற்றானை நம்பி ஏமாற வேண்டாம்" என்ற கொள்கையுடன் புலத்தில் அவசர நிவாரணத்திற்காக மிகப்பெரிய களத்தை திறந்தது. வீதி வீதியாய் எமது சிறார்கள் உண்டியல்களுடன், வியாபார ஸ்தாபனங்கள் தோறும் நிவாரண உண்டியல்கள்,... என்று ஒரு புறமும், மறுபுறம் கோடிக்கணக்காக நிதியை அள்ளியும் வழங்கினார்கள்.

உலகே! உன் கண்கள் திறக்குமட்டும் நாம் பொருத்திருக்கமுடியாது என்று எம்மக்களையெல்லாம் ஒண்றிணைத்து இரவு பகல்களாக பணியாற்றியதை நன்றியுடன் நினைவு கூருகிறோம். பாரிய பிராந்திய வல்லரசே தனக்கேற்பட்ட அழிவுகளுக்கு நிவாரணப் பணிகளே சீராக ஆரம்பிக்கமுடியாத நிலையிலும், எம்தேசத்தில் சிரான நெறிப்படுத்துதலில் ஆரம்பக்கட்ட தற்காலிக நிவாரணங்கள்/குடியமர்த்துதல்கள் பூர்த்திடைந்ததற்கு பின்புலமாக இருந்ததில் முக்கியமான அமைப்பு "வெண்புறா நிறுவனமே"!!!

அக்காலகட்டங்களில் இரவு, பகல், உணவுகளை மறந்து உன்னத சேவையாற்றிய அத்தனை தொண்டர்களுக்கும் நன்றிகள். வெண்புறாவின் செயற்பாடுகளை ஒருங்கிணைத்து அளப்பரிய பணியை இன்றுவரை பாரிய நெருக்கடிகளுக்குள் ஆற்றும் "டாக்டர் மூர்த்தி" எனும் தேசப்பற்றாளனுக்கு எமது நன்றிகள்!!!
" "
Reply


Messages In This Thread
உயிர் காத்த லண்டன் "வெண்புறாக்கள்"! - by cannon - 12-26-2005, 07:21 PM
[No subject] - by ஜெயதேவன் - 12-26-2005, 11:21 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)