12-26-2005, 05:47 PM
ஆம் இப்படித்தான் ஐரோப்பாவில் பல பெற்றோர் கனணி அறிவில்லாமல் பணம் சேர்ப்பதில் மட்டும் குறியாக இருக்கிறார்கள் அத்துடன் வீட்டில் கனணி 1 இருந்தால் தான் கவுரவம் எனவும் அதில் முக்கியமாக இணைய இணைப்பு இருக்கவேண்டும் என நினைத்து தொடர்பு எடுத்துக்கொடுக்கிறார்கள் ஆனால் அதை தன்னுடைய பிள்ளை எதற்கு பயன்படுத்துகிறது என பார்க்கமாட்டார்கள். எங்காவது விசேடங்கள் நடக்கும் இடங்களில் கூடி இருந்து கதைக்கும் போது தன்னுடையவீட்டிலும் கணனி ூ இணையத்தொடர்பு இருக்கிறது என பெருமையாக சில பெற்றோர் இப்போது கூட கதைக்கிறார்கள் என்பது தான் வேதனையான விடயம்

