12-26-2005, 02:48 PM
நண்பர்களே நான் ஏன் இந்த குப்பைக்குழிக்குச் செல்லும் இணைப்பை இங்கு பிரசுரித்தேன் என்றால் தற்போதய தாய் தந்தையர்களும் எதிகால தாய் தந்தையரும் இது போன்ற இணையங்களை கருத்திலெடுக்கவேண்டும். அண்மையில் எமது நகரத்தில் சில குடும்பங்கள் தங்கள் பிள்ளைகளின் படிப்பு தேவைக்கென இணைய நுளைவு வசதியை புதிகாக தங்களுக்கு பெற்றுக்கொண்டனர். ஓரிடத்தில் ஒரு சிறிய பெண்பிள்ளை இணைய தொடர்பு கிடைத்தவுடன் அண்ணா சற்று பொறுங்கள் என்று எனக்கு கூறிவிட்டு இந்த இணைய குப்பைக்குள் சடுதியாகச் சென்றார். அதனை அவருடடைய தாய் தந்தையர்களும் வேடிக்கை பார்த்தனர். தமது பிள்ளைக்கும் குறிப்பிடத்தக்க கணனி அறிவு இருக்கிறது என்று பிள்ளையை புகழ்ந்தாரே தவிர அது எந்த பக்கத்தை பார்த்தது என கவனிக்க தவறி விட்டனர். இதேபோல் இன்னொரு குடும்பத்தில் இவ்வாறு செயும் போது தந்தையார் சொன்னார் தம்பி மகளுக்கு படிப்பு தேவைக்கு MSN Mseesger தேவைப்படுகுதாம் அதனைவும் போட்டுவிடும் என்று எனக்குச் சொன்னார். நானும் வியப்புடன் போட்டு விட்டேன். பின்னர் 3 மாதம் கழித்து கணனியில் ஏற்பட்ட தவறை சரிசெய்ய சென்ற போது சொன்னால் நம்பமாட்டீர்கள் 185 சினேகிதருடைய பெயர்களை அந்த சிறுமி தனது நண்பர்கள் பட்டியலில் இணைத்துள்ளார். இதில் குறிப்பிடக்கூடியது என்னவென்றால் அந்த 185 பெயரில் யாரும் பெண்பிள்ளைகள் கிடையாது.இது ஒருபுறமிருக்க தன்னை அரை / முழு நிர்வாணமாக ஜேர்மன்-தமிழ் தோழியருடன் சேர்ந்து ஒளிப்படம் பிடித்து அதனை மின்னஞ்சல் மூலமாக தனது நண்பர்கள் சிலருக்கு அனுப்பியுள்ளார். இதனை நான் குறித்த பிள்ளையின் தந்தைக்கு காண்பித்தேன். அவர் தான் பிழை விட்டுவிட்டேன் என தனது தலையில் அடித்து அழுதார்.
அதைவிட MSN தூதுவரில் தனது நண்பர்கள் சிலருடன் காம வார்த்தைகள் ததும்ப அரட்டையடித்துள்ளார். அவர்களில் வயதுக்கு வந்த தமிழ் இளைஞர்களே அதிகம் அவர்கள் தங்கள் படங்களையும் MSN மூலம் இவருக்கு அனுப்பி வைத்துள்ளனர். அவருடைய MSN தூதுவரில் நோர்வேயில் வசிக்கும் பிரபல ஊடகவிலயாளர் (யார் என்று தெரியும் தானே) ஒருவரது மின்னஞ்சல் முகவரியும் இருக்கிறது. அவரும் மிக கேவலமாக அரட்டையடித்துள்ளார். தனக்கு 20 வயது எனவும் தான் பிரித்தானியாவில் இருக்கிறேன் என்றும் தனது வழமையான படத்தையும் அனுப்பியிருக்கிறார்.
இவற்றைப்பறி தாய் தந்தையருக்கு விளங்கப்படித்தினேன். அவர்கள் உடனடியாக தங்கள் இணைய இணைப்பை துண்டித்துவிடுமாறு கூறிவிட்டனர். ஆனால் இணைய வழங்குனர் 2 வருட உடன்பாட்டில் இணைய நுளைவு வழங்கப்பட்டபடியால் இரண்டு வருடம் கழித்து தான் அவர்கள் நிற்பாட்டுவார்கள் என கூறிவிட்டனர். ஒருவர் பிள்ளைக்குப் பயந்து Modem மில் இணைப்பை ஏற்படுத்தும் இடத்தில் பொலுத்தீன் பையை சிறிதாக நுளைத்து தொடர்பு இலாதபடி செய்துள்ளார். ஏனெனில் நேரடியாக நிறுத்தினால் பிள்ளை தம்முடன் கோபித்துக்கொண்டு வீட்டைவிட்டுப் போய்விடும் என்ற பயத்தினால் இப்படி பயந்து வாழ்கின்றனர்.