Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நாள்குறிப்பேட்டில் இன்று....
#1
இன்று குளிர் சற்று அதிகமாக
இருந்தது..

குளிர் மட்டுமா
சினோ வேற என்னை மூட
வேலைல கவனமா இருந்தன்..

இந்த வேலையாவது நிரந்தரமாகணும்
அப்ப தான் ஒரு பிரச்சனையாவது
தீரும்..

கை நல்லா விறைக்கதொடங்கீட்டுது
பக்கத்தை பார்த்தன்
வேற்று நாட்டு நண்பனும் என்னைபோலத்தான்
வேலை ல கவனமா இருதான்
பாவம் அவனுக்கும் என்ன கஸ்டமோ..

சின்னல்ல இருக்கும் போது..
அம்மா காலைல தோட்டதுக்கு போகும் போது
என்னை கூட்டி கொண்டே போறதில்லை
பனி தலைல படுமெண்டு
மனுசிக்கு அப்படி ஒரு பாசம் என்னில..

இனிக்கு நான் இப்படி வேலை செய்க்கிறதை
பார்த்தால் மனுசி என்ன கஸ்டப்படும்..

வீட்டு நினைப்பு வந்தவுடன
எனக்கு கைவிறைக்க வில்லை...

அம்மா வீட்டு கஸ்டத்தை நினைக்காமல்
கடைசி காலத்திலயாவது
சந்தோசமா இருக்கவேணும்...

அக்காவின் பிள்ளையாவது மண்ணில
தவழுற நிலை வரகூடாது...

தங்கையெண்டாலும் வேலைக்கு போகமல்
விரும்பினபடி படிக்கணும்...

வெளிநாடு என்று அடகுவைச்ச
எங்கட காணியை மீட்க வேணும்...

நினைக்கும் போது...
எனக்கு வேலை கஸ்டமா இருக்கவில்லை
கையும் விறைக்கேல்ல

நினைப்பில இருந்தது..
வேலைநேரம் முடிஞ்சதை கவனிக்கல
நண்பன் தான் நினைவு படுத்தினான்..

ஏணி ஈரமா இருந்தது
மழை தானே
குளிர் வேற.. கவனமா இறங்கினன்..

" இங்க வந்த பிறகு கொஞ்ச காலத்திலேயே
இவளவு உச்சத்துக்கு வந்திட்டன் "
என்னை போலவே அமைதியில் இருந்த நண்பனை
சிரிக்கவைக்க சொன்னன்..
அவனுக்கு புரியலயோ
இல்ல மனசு சரியில்லையே அதிகம் சிரிக்கல...

அவன்கிட்ட விடைபெற்றுக்கொண்டு
வெளில வந்தன்...

இனிக்கு வெதர் சரி இல்ல
நல்லா இருண்டு இருந்தது...
காரை எடுத்து கொண்டு ரோட்டுக்கு வந்தன்
கார் ஒண்டுமே ஓடவில்லை
எல்லாரும் ஒரே நேரத்தில காரில
வீட்டை போனால்
எப்படித்தான் கார் ஓடும்...

மனசுக்கு இதமா
ஒரு பழைய பாட்டை சுழல விட்டன்...
என்ன மாட மாளிகை இங்க இருந்தாலும்
இந்த பழசு தான்
எண்ட மனுசுக்கு இதமா இருதிச்சு...
எண்ட பழமைவாதத்தை மற்றவை கேட்ட கூடாதே
யன்னை இறுக்க மூடினன்...

காரை ஒருக்கால் உறுமினன்...
அது ஒண்டுமில்லை
பாட்டில என்னை மறந்து
பழைய நண்பர்களோட ஊர் சுத்தின
நினைப்பில எண்ட இளமை துடிப்பை
கார்ல காட்டி போட்டன்...

இப்பவும் எனக்கு இளமைதுடிப்பு
இருக்குத்தான்...
ஆனால் இன் வறுமை கஸ்டங்களுக்கை
புதைஞ்சு இருக்கு...

இப்படி எனக்குள்ளேயே வாதம் பண்ணி கொண்டு
வீட்டை நெருங்க இருண்டு போச்சு...
போகும் போதும் இப்படித்தானே இருந்தது...
ம்ம்..... நாளைக்கு போகும் போதும்
இப்படித்தான் இருக்கும்...


பிளாட்டுக்குள்ள வந்தன்
யாரையுமே காணல...

ஊர்ல என்றால்
ஊரே ஒரு குடும்பம் மாதிரி தானே...

இங்க பக்கத்து விட்டில இருக்கிறவனை
பத்து மாதமா பாக்கேலாது...
ம்ம்ம்... இதுதானே
நாகரீகமான வாழ்க்கையாம்...

மனசுக்குள்ள அலட்டி கொண்டு
வீட்டு கதவை திறந்தன்...
வீடு இருட்ட இருந்தது

நான் என்ன சம்சாரியா
வீட்டை வர மனுசி சிரிச்ச முகத்தோட
என்ன வரவேற்க..

எனக்கு ஆசை இல்லாமல் இல்லை
ஆனால் எண்ட நிலமைக்கு
ஒரு பத்து வருசத்துக்கு
வீடு இருட்டா இருந்தாலும் பறவாய் இல்லை
இப்படியே இருந்தால் தான்
வீட்டு கஸ்டத்தை சரிப்படுத்தி
அதுகளிண்ட முகத்தில
ஒரு சிரிப்பை பார்க்கலாம்...

லைட்டை போட்டன்...

நிறைய கடிதங்கள் வாசலில்
விழுந்து கிடந்தது...

எல்லாம் ஒஃபீஸ் கடிதங்கள் தான்...
இவங்களுக்கு என்ன வேலை
சப்பாத்தாலேயே கடிதங்களை ஒதுக்கினன்...

அட... சிவப்பு நீல கரையோட ஒரு கடிதம்...
குனிஞ்சு எடுத்தன்..
எண்ட செல்லத்தின்ட கையெழுத்து...

ஏனோ மனசில ஏதோ
சொல்ல முடியாத உணர்வு...
கடிதாசியை படிக்க ஆரம்பிச்சன்...

செல்லத்திண்ட எழுத்தை பார்க்கவே
எனக்கு கண் கலங்கீட்டுது....
வரும் போது சின்னனா இருந்தவள்..
இப்பவும் தோள்ல
தொங்கின நினைப்புத்தான் வருது...
இப்ப பெரிய மனுசி ஆகி இருப்பள்

கடிதாசி எழுத்திலேயே
அவள் முகத்தை பார்த்தபடி
வாசிக்க ஆரம்பிச்சன்...

அன்பு அண்ணா...

எப்படி இருக்கிற..
நான் அம்மா அக்கா அத்தான்
எல்லோருமே நலம்.

அக்காக்கு த்தான் இப்ப ஏலாது
வேலைக்கு போறது இல்லை...
மாதம் நெருங்குது தானே...
அதுதான் அக்கா அடம்பிடிச்சும்
அம்மா பேசி மறிச்சுப்போட்டா..

அத்தான் அடிக்கடி வாறவர்....
அத்தானை பிழை சொல்லமுடியாது அண்ணா..
அவர் நல்லவர்..
அவர்ட அம்மாதான்
பாவம் அவரும் என்ன செய்வார்...
ரண்டு பக்கத்தையும் சமாளிக்கிறார்...

நீ அனுப்பின காசில
ஒரு சைக்கிள் எடுத்தனான் அண்ணா..
உன் கிட்ட சைக்கிள் கேட்டதுக்கு
அம்மா என்னை பேசினவா...

அம்மா இப்பவும் சாப்பிடும் போது
உன் கதை கதைப்பா....
கடைசியா கண் கலங்கிடும்..
அத்தான் இருந்தால்
வேறு கதையை மாத்தி
அம்மவை சிரிக்க வைப்பார்...

அப்புறம் அண்ணா...
வானதி அக்கா லீவில வந்து நிற்கும் போது
வீட்டை வந்தவா...
அம்மாக்கு பெருசா பிடிக்கல..
இருந்தாலும் சாப்பிட்டு போக சொல்லி கேட்க..
இதுதான் சாட்டு என்று சாப்பிட்டு தான் போனவா..

என்கிட்ட தனியா வந்து உன்னை பற்றி கேட்டவா..
நீ கடைசியா அனுப்பின போட்டோவை
அம்மாக்கு தெரியாமல் எடுத்து கொண்டு போனவா..

சொன்னால் உனக்கு பிடிக்குமோ தெரியல..
அவாவின் கொஸ்டல் விலாசத்துக்கு
ஒரு கடிதம் போடேன்..

வேறு என்ன அண்ணா
நீ சுகமா இருக்கணும் என்று
கும்பிடுறன் அண்ணா...

இப்படிக்கு அன்பு தங்கை

கடிதத்தை வாசிக்க
ஊர் நிழல் தான் என் முன்னால ஆடிச்சுது...

மனசு கனத்து போச்சு
ஒண்டும் செய்யவும் மனம் வரல...

குசினிக்கு போய் பிரிஜை திறந்து
நேற்றையான் புட்டை சூடாக்கி
பசியை குறைத்துக்கொண்டன்...
பசி மட்டும் தான் குறைஞ்சுது..

ஆயிரம் மனிதருடன் கூட நடப்பினும்
இந்த தனிமை குறையவில்லை...

வாகன இரைச்சல் மட்டும் தான்
மனித நிசப்தம் குறைய வில்லை...

எனக்காக உருகிப்போகும்
என் தாய் மீது கொண்ட பாசம் குறையவில்லை...

எப்போதும் சிட்டாய் பறக்கும்
என் தங்கையின் பேச்சொலி காதுகளில் குறையவில்லை..

எப்போதும் சோகமாக
என் சகோதரியின் கண்ணீர் குறையவில்லை...

எப்போ எங்கோ கண்ணால் பேசிய
என் காதலியின் காதல் குறையவில்லை...

பலவிதமான போராட்டங்களுடன்
சோபாவில் சரிந்தேன்..
மீண்டும் எலாரம் அடிக்கும் வரை...

( முற்றும்)
Reply


Messages In This Thread
நாள்குறிப்பேட்டில் இன்று.... - by Vishnu - 12-25-2005, 10:13 PM
[No subject] - by Selvamuthu - 12-25-2005, 11:43 PM
[No subject] - by Rasikai - 12-26-2005, 04:09 AM
[No subject] - by Mathan - 12-26-2005, 05:00 AM
[No subject] - by shobana - 12-26-2005, 11:54 AM
[No subject] - by tamilini - 12-26-2005, 01:11 PM
[No subject] - by RaMa - 12-27-2005, 05:25 AM
[No subject] - by SUNDHAL - 12-27-2005, 11:08 AM
[No subject] - by தூயா - 12-27-2005, 12:54 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)