12-25-2005, 02:24 PM
<b>வன்முறையில் பதிலளிக்க தூண்டுகின்ற படைகள்</b>
1983இல் தமிழர்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்பட்ட திட்டமிட்ட பௌத்த, சிங்களப் பேரினவாதத்தின் கொடூர வன்முறைகளே தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தில் பெரும் வளர்ச்சியை பாய்ச்சலை ஏற்படுத்தின என்ற யதார்த்தத்தைச் சிங்கள சமூகம் இன்னும் கூடப் புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை.
ஐம்பதுகளின் பிற்பகுதியில் தனிச்சிங்களச் சட்டம் மூலம் தமிழ்மொழியும் இனமும் இந்த நாட்டில் மூன்றாம் தர நிலைக்குத் தள்ளப்பட்டபோது அதற்கு எதிராக அகிம்சை வழியில் சாத்வீக முறையில் குந்துமறியல் செய்த தமிழ்த் தலைவர்கள் பௌத்த, சிங்களப் பேரினவாதப் படைகளால் நையப்புடைக்கப்பட்டு, நாய்களைப் போல அடித்துவிரட்டப்பட்டனர்.
அதன் விளைவே நான்கு தசாப்த காலத்தின் பின்னர், இராணுவம் ஓடஓட விரட்டப்பட்டுத் தாக்கப்படும் நிலைமையாக உருவாகியிருக்கின்றது.
இவ்வளவு பட்டறிவுக்குப் பின்னரும் அனுபவப் பாடத்துக்குப் பின்னரும் அதே மார்க்கத்தில் தமிழர்களின் உணர்வெழுச்சியை அடக்க முற்படுவது முட்டாள்தனமின்றி வேறென்ன?
யாழ். குடாநாட்டிலும் பிற இடங்களிலும் படைகள் புரியும் அட்டகாசம் அவற்றின் விளைவுகள், அந்த அடாவடித்தனங்களினால் அரச கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் உள்ள தமிழ் இளைஞர்களின் மனதில் நெருப்பாகக் கொதித்து எழும்பும் இன உணர்ச்சி, ஆவேசம் ஆகியவற்றை நோக்கும்போது இத்தூண்டல்களின் பெறுபேறாகக் கிடைக்கப் போகும் எதிர்விளைவுகளின் தாக்கத்தை அரசும் அதன் படைத்தரப்பும் சரிவரப் புரிந்துகொள்ளவில்லை என்பது தெளிவாகின்றது. அதற்குரிய "மேல்மாடி' இல்லை என்றால் என்ன செய்வது? விளைவுகளை எதிர்கொள்வதுதான் சிங்களத்துக்கு ஒரே வழி. பட்டுத்தெளியட்டுமே.
http://sooriyan.com/index.php?option=conte...id=2679&Itemid=
<b>யாழ்ப்பாணத்தில் இருந்து படையினரை விரட்டுவதில் மக்கள் தெளிவாகவுள்ளனர் </b>
"சமாதான காலம் எமது மக்களுக்கு அச்சுறுத்தல் மிகுந்த காலப்பகுதியாக உள்ளது. இதனால்தான் மக்கள் போர்ப் பயிற்சி பெற்று யாழ்ப்பாணத்தை கைப்பற்ற முடிவெடுத்துள்ளார்கள்'' என தமிழீழ கடற்படையின் துணைப் படை கட்டமைப்பிற்கு பொறுப்பாளராக பணியாற்றும் தமிழீழ கடற்படையின் தளபதிகளில் ஒருவரான த. வினாயகம் "கேசரி' க்கு வழங்கிய சிறப்புச் செவ்வியில் கூறியுள்ளார்.
http://sooriyan.com/index.php?option=conte...id=2677&Itemid=