12-25-2005, 01:47 PM
Sukumaran Wrote:புலிகள்.. புளொட்.. ரெலோ.. ஈபிஆர்எல்எப்.. ஈரோஸ்.. போன்ற அமைப்புக்களுக்கு ஏன் ஆயுதப்பயிற்சியளித்தீர்கள் எனவினவ எனக்கும் ஆசை.. ரஜீவைப்போட்டபின்பு அதைப்பற்றி வினவமுடியுமா?[size=18]
இதுக்கு மகா புத்திசாலித் தனம் ஒன்றும் தேவையில்லை. அது தன் தேசநலனுக்காகத் தான் எமக்கு பயிற்சி அளித்தது. ஈழத்தில் ஏதும் குழப்பம் நடந்தால் அங்கு தான் குதித்து தன் செல்வாக்கை நிகழ்த்தலாம் என்று மனப்பால் குடித்து தான் இறங்கியது. அதனால் புலிகள் உண்மையை உணர்ந்து அவர்களுக்கு பணிய மறுத்ததும், பின் புலிகளை ஒரு வழி பண்ணலாம் என்று அரிசி மூட்டை போட்டு இறங்கியதும், அது இயலாமல் போனதால் சண்டை மூண்டதும், துரத்தியடிக்கப்பட்டதும் வரலாறு.
இப்போது ஈழத்தில் தனிநாடு அமைந்தால் எமக்கு ஆபத்து என்று அறிக்கை விடும், இந்தியா அப்போது எம் மீது கரிசனையா கொண்டிருக்கும்? அதுக்குள்ளாகவா வெளிவிவகாரக் கொள்கை மாற்றம் பெற்றிருக்கும்??
ஒரு நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தி விட்டு, குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கலாம் என்பதற்கு மாலைதீவில் புளோட்டை அனுப்பி கலகம் செய்யவிட்டு பின் கதாநாயகனான குதித்தது நல்ல உதாரணம்.
[size=14] ' '

