12-25-2005, 01:35 PM
Sukumaran Wrote:இங்கு கொடுக்கப்பட்ட தலைப்பு காந்தீயமும் இந்திய சுதந்திர போராட்டமும்.. அதை கவனத்திலெடுத்து உங்களது பதில்களை எழுதுங்கள்..
தெடங்கப்பட்ட கருத்திலிருந்து விலகியிருந்தாலும் எழுதியிருக்கும் கருத்துக்களுக்குப் பதில் எழுதவேண்டிய கடமையின்நிமித்தம் இயன்றவரை பதில்தர முயற்சிக்கின்றேன்..
தூயவன் அண்ணா நீங்கள் பண்டாரநாயக்காவின் மகள் ரணில் என பலவிதமான கதைகள் சொல்லுகின்றீர்கள்.. 8 இலட்சம் தமிழ்மக்கள் தலைநகரிலும் தலைநகரை அண்டிய பகுதிகளிலும் புலம்பாமல் இருக்கும்போது உங்கள் கருத்து வேடிக்கையாகவிருக்கின்றது..
நீங்கள் ஒரு தமிழராகப்பிறந்து சிங்களமொழியில் படித்து வேதனையுற்றிருந்தால் எழுதுங்கள் மேற்கொண்டு கருத்தாடலாம்..
அண்ணா.. தலைநகரிலும் தலைநகரை அண்டியபகுதியிலும் வசிக்கும் தமிழர்களுக்கு நீங்கள் சொல்லும் செய்திதான் என்ன?
[size=18]
வணக்கம்
காந்தியவழி என்பதை ஈழவிடுதலைப் போராட்டத்தோடு சேர்த்து கதைத்து கொச்சைப்படுத்தியது நீர் தான். காந்தியவாதிகளைத் தீர்க்கதரிசிகள் என்றும், விண்ணாதி விண்ணர் என்றும் மார்தட்டியபோது தான் நாம் பதில் எழுதினோம். ஆனால் நீர் இப்போது தலைப்பை நோக்கி கதைக்குமாறு அறிவுரை சொல்லுவது மகா வேடிக்கை.
பண்டாநாயக்காவினைப் பற்றி சொல்லவெளிக்கிட்டதை புரியாத விதம், பரிதாபமாகத் தான் இருக்கின்றது. இப்போது இலங்கையில் உள்ள கல்வித்திட்டத்தை பற்றி ஏதும் தெரியுமா உமக்கு? அங்கு இப்போது விருப்பத்துக்குரிய பாடத்திட்டமாக சிங்களவருக்கு தமிழும், தமிழருக்கு சிங்களமும் படிப்பிக்கப்படுவதை நீர் அறிவீரா?
தந்தை, செய்த தப்பை மகள் திருத்தி கொள்ள முனைந்தார். இது சமத்துவம். ஏனென்றால் கட்டாயத் திணிப்பு கிடையாது. அவ்வாறே ரணில் முன்பு போல ஆங்கிலத்தில் கற்க விரும்புவர்கள் ஆங்கிலத்தில் கற்கலாம் என்றும் கொண்டு வந்திருக்கின்றார். இது பழையனவற்றை திருத்தி கொள்ளும் முறை.
ஆனால் அப்போது எமக்கு காய்ச்சல் தான் இருந்தது. ஆனால் இப்போது அது கூடி கடுமையாகி விட்டபோது இப்போது தான் காய்சலுக்கே மருந்து தந்தால் பிரச்சனை தீருமா??
கொழும்பிலுள்ள 8லட்சம் தமிழ்மக்கள் பற்றி கதைத்தீர். ஏற்றுக் கொள்கின்றேன். அங்கே திணிப்பு ஏதும் மேற்கொள்ளவில்லையே. அவர்கள் தொழிலுக்காக சிங்களம் படிப்பதில் தப்பு இல்லை. உமக்கொன்று தெரியுமா? அங்கே எம் தமிழ்மக்கள் காரணமாக சிங்களவர் தமிழ்படிக்கவேண்டியிருப்பதும், பலர் இப்போது தமிழ் தெரிந்தவர்களாக இருப்பதும். இது காலம் கடந்த திருத்தம்!!
எனது படிப்பை பற்றி சொல்கின்றீர். நான் கொழும்பில் தான் 5 ஆண்டுகளுக்கு மேலாக கல்வியைத் தொடர்ந்தேன் என்று உமக்கு சொல்லிக் கொள்கின்றேன்.
நீர் உமது விவாதம் உம்மால் கொண்டு செல்லமுடியாவிடியாவிட்டால் எட்டாம் ஆண்டைப் பற்றி கதைத்து தப்பிக் கொள்ளும் முறைமையைக் கைக்கொள்கின்றீர்.
[size=14] ' '

