Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புலிகளுடனான இணைத் தலைமை நாடுகளின் சந்திப்பை தடுக்க
#1
புலிகளுடனான இணைத் தலைமை நாடுகளின் சந்திப்பை தடுக்கப் போராடிய சிறிலங்கா!

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனை இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் இணைத் தலைமை நாடுகளின் தூதர்கள் சந்தித்துள்ளது சிறிலங்கா அரசாங்கத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


கடந்த 4 ஆண்டு யுத்த நிறுத்த ஒப்பந்த காலத்தில் விடுதலைப் புலிகளுடன் இணைத் தலைமை நாடுகள் மேற்கொள்ளும் முதலாவது சந்திப்பு இது.

இந்தச் சந்திப்பைத் தடுக்கும் வகையில் கடந்த வெள்ளிக்கிழமை இணைத் தலைமை நாடுகளின் தூதுவர்களை சிறிலங்கா பிரதமர் ரட்ணசிறீ விக்கிரமநாயக்கஇ வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோர் சந்தித்துள்ளனர்.

பேசாலையில் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதல் உள்ளிட்ட சம்பவங்களைச் சுட்டிக்காட்டி சிறிலங்கா அரச தரப்பினர் தற்போதைய பதற்றமான சூழலில் விடுதலைப் புலிகளுடனான சந்திப்பைத் தவிர்க்கலாம் என்று யோசனை தெரிவித்துள்ளனர்.

ஆனால் இந்த யோசனையை இணைத் தலைமை நாடுகளின் பிரதிநிதிகள் நிராகரித்துள்ளனர். தங்களது நாடுகளின் அரச தலைவர்கள்இ விடுதலைப் புலிகளுடனான சந்திப்பை விரும்புவதாகவும் யுத்த நிறுத்த ஒப்பந்தம் முறிவடையும் நிலையில் இருப்பது தொடர்பாக விடுதலைப் புலிகளுடன் தாங்கள் பேச்சு நடத்த வேண்டியுள்ளது என்றும் இணைத் தலைமை நாடுகளின் பிரதிநிதிகள் பதிலளித்துள்ளனர்.

இணைத் தலைமை நாடுகளின் குழுவில் உள்ள அமெரிக்கா தனது பிரதிநிதியை கிளிநொச்சிக்கு அனுப்பாமைக்கு சிறிலங்கா அரசாங்கத்தின் அழுத்தமும் காரணமாக இருக்கக் கூடும் என்றும் கொழும்பு அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

தமது எதிர்ப்பின் வெளிப்பாடாகவே இணைத் தலைமை நாடுகளின் தூதுவர்கள் பயணம் மேற்கொள்ள விமானப்படை விமானத்தை அரசாங்கம் மறுத்துள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றன.

கிளிநொச்சியிலிருந்து கொழும்பு திரும்பிய இணைத் தலைமை நாடுகள் விடுதலைப் புலிகளுடனான பேச்சு விவரங்களை சிறிலங்கா அரச அதிகாரிகளைச் சந்தித்து விளக்கினர்.

2000 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் தாங்களாக முன்வந்து யுத்த நிறுத்தத்தை அறிவித்த நாள் டிசம்பர் 24 என்பது குறிப்பிடத்தக்கது.

புதினம்
Reply


Messages In This Thread
புலிகளுடனான இணைத் தலைமை நாடுகளின் சந்திப்பை தடுக்க - by நர்மதா - 12-25-2005, 11:58 AM
[No subject] - by vasisutha - 12-25-2005, 03:38 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)