Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ்க் கட்சிகள் ஒருங்கிணைப்பு முயற்சியை இந்தியா மீண்டும்
#1
தமிழ்க் கட்சிகள் ஒருங்கிணைப்பு முயற்சியை இந்தியா மீண்டும் தோற்கடித்து விட்டதா?


நாட்டின் புதிய ஜனாதிபதியாக மகிந்த ராஜபக்‌ஷ பதவியேற்றுள்ள நிலையில் தென்னிலங்கை அரசியலில் மிக மோசமாக அதிகரித்துள்ள சிறுபான்மை சமூகங்களுக்கு எதிரான கடும் போக்குகளுக்கு மத்தியில் ஒன்றுபட்டு ஒற்றுமையாக செயற்பட வேண்டிய தமிழ்இ முஸ்லிம் அரசியல் தலைமைகள் தங்களது தனிப்பட்ட சுயநலன்கள்இ விருப்பு வெறுப்புகளுக்காக பிளவுபட்டு நிற்கின்ற செயற்பாடுகளுக்கு அப்பாலும் சமூகரீதியாக எழுந்துள்ள அரசியல் எழுச்சி காரணமாக ஏதோவொரு நிலையை முன்னெடுக்க வேண்டிய தேவையும் கடப்பாடும் எழுந்துள்ளதையும் அவதானிக்க முடிகின்றது.

இந்த நிலைமைகளின் வெளிப்பாடாகவே பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒன்றுபட்டுச் செயற்படுவதென்ற ஒருமித்த நிலைப்பாட்டை எடுத்துள்ளதுடன் அதனை முன்னெடுத்துச் செல்வதற்காக பாராளுமன்ற பிரதிநிதிகளை உள்ளடக்கிய குழுவொன்றையும் நியமித்துள்ளனர்.

கடந்த காலங்களிலும் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக எழும் எந்தவொரு சிறு சிறு பிரச்சினைகள் தொடர்பிலும் மிக மோசமாக முரண்பட்டு நிற்கின்ற போக்கொன்றை வெளியே காட்டிக் கொண்டாலும் அவ்வாறான நேரங்களில் ஒன்றுபட்டு செயற்படுகின்ற போக்கொன்றையே முஸ்லிம் அரசியல் தலைமைகள் முன்னெடுத்து வந்தமை வரலாறு.

இது இலங்கையில் சிங்கள பௌத்த இனவாத மேலாதிக்க அரசியல் போக்கில் மிகவும் வரவேற்கக் கூடிய ஒரு நிலைப்பாடாகும். எனினும் இந்த நிலைப்பாடு தமிழர் அரசியல் போக்கில் இன்னமும் உருவாக்கப்படாதது மிகவும் கவலை கொள்ளத் தக்கதாகும்.

எனினும் மிதவாத தமிழர் அரசியல் போக்கில் பிளவுபட்டிருந்த தமிழ் அரசியல் தலைமைகளை ஓரணியில் இணைக்கும் முயற்சியில் வெற்றிகொண்டவர் அமரர் எஸ்.ஜே.வி.செல்வநாயகம். அதன் வெளிப்பாடாகவே இலங்கை தமிழரசுக் கட்சி பலம் பொருந்திய அரசியல் சக்தியாக தோற்றம் பெற்றது.

பின்னைய காலங்களில் மிதவாத தமிழர் அரசியல் போராட்டங்கள் சிங்கள பௌத்த பேரினவாத அரசுகளால் நிராகரிக்கப்பட்டு அரச படைகளாலும் சிங்கள இனவாதிகளாலும் அடக்கியொடுக்கப்பட்டு நசுக்கப்பட்ட நிலையில் தோற்றம் பெற்ற தமிழ் இளைஞர்களின் ஆயுதப் போராட்டம் பெரும் பேரெழுச்சியொன்றை தோற்றுவித்தது.

ஆரம்ப காலங்களில் புரிந்துணர்வுடனும் ஒற்றுமையுடனும் செயற்பட்ட விடுதலைப் போராட்ட அமைப்புகள் பின்னர் அனைவரையும் அரவணைத்த இந்தியாவின் சதிவலைக்குள் சிக்குண்டு சகோதரப் படுகொலைகளில் ஈடுபட்டன. இந்த வரலாறு தமிழர் போராட்டத்தில் மிகவும் கசப்பான மறக்கப்பட முடியாத அத்தியாயம் என்பதை எவரும் மறுக்க முடியாது.

இந்தியாவின் சதிவலைக்குள் சிக்குண்டால் ஈழத்தமிழர் போராட்டம் எவ்வாறு அழித்தொழிக்கப்பட்டு நசுக்கப்படுமென்பதற்கு தகுந்த ஆதாரங்களுடன் 1983 களின் பிற்பகுதியில் தமிழீழ மக்கள் விடுதலை கழக (புளொட்)த்தின் அரசியல் பொறுப்பாளராகவிருந்த சந்ததியார் எழுதிய ஹவங்கம் தந்த பாடம்' எமக்கெல்லோருக்கும் இன்னமும் ஒரு படிப்பினையாகும்.

ஈழத்தமிழர் போராட்ட அமைப்புகளை கொண்டே ஈழத்தமிழர்களை ஆயிரக் கணக்கில் கொன்றொழித்த வரலாற்றுப் பதிவுகள் 1987 பிற்பகுதி தொடக்கம் 1990 களின் முற்பகுதி வரை எம்மிடையே நிறையவேயுள்ளன.

இந்தியா எமது அயல்நாடுஇ சமூக பொருளாதாரஇ கலைஇ கலாசாரஇ மதரீதியான சகல பண்பாடுகளுடனும் ஒன்றிணைந்து போனவர்கள். எனினும்இ தமிழர் அரசியல் போக்கில் தொடர்ச்சியான விரோதமான செயற்பாடுகளை முன்னெடுத்து சிங்கள அரசியல் தலைமைகளுக்கு துணைபோகும் செயற்பாடுகளே இன்னமும் முன்னெடுக்கப்பட்டு வருவதையே காண்கிறோம்.

பிரிட்டிஷ் காலனியாதிக்க வாதிகளிடமிருந்து இலங்கையின் அரசியல் அதிகாரம் சிங்கள பௌத்த பேரினவாத அரசியல் தலைமைகளிடம் கையளிக்கப்பட்டதற்கு பின்னர் தமிழர் அரசியல் செல்வாக்கை இல்லாதொழிக்க எடுக்கப்பட்ட முதல் முயற்சியான இந்தியப் பிரஜைகளின் வாக்குரிமையை இல்லாதொழிக்கும் திட்டத்தை சக்திமிக்க இந்தியா நினைத்திருந்தால் தடுத்திருக்கலாம். ஆனால் மௌனமாகவே பார்த்துக் கொண்டிருந்தது.

சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தம் கூட இந்தியத் தமிழர்களுக்கு எதிரான துரோகத் தனங்கள் என்றே கடந்தவாரம் மேலக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன் ஒரு பொதுக் கூட்டமொன்றில் பகிரங்கமாக தெரிந்திருந்தார்.

இந்த நிலைமைகளுக்கு அப்பால் தமிழர் தாயகப் பிரதேசத்தில் பிளவுபட்டுப் போயிருந்த மிதவாத அரசியல் கட்சியான தமிழரசுக் கட்சி மற்றும் ஆயுதப் போராட்டத்திலிருந்து விடுபட்டு ஜனநாயக அரசியல் நீரோட்டத்திற்குள் நுழைந்த தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ)இ ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி மற்றும் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் என்பன இணைந்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்ற பெயரில் விடுதலைப் புலிகளுடன் உடன்பட்டு வடக்குஇ கிழக்கில் 22 பாராளுமன்ற பிரதிநிதிகளுடன் மிகப்பலம் பொருந்திய அரசியல் சக்தியாக தோற்றம் பெற்றுள்ளனர்.

இந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் வடக்குஇ கிழக்குக்கு வெளியேயுள்ள பலம் பொருந்திய அரசியல் கட்சிகளான மலையக மக்கள் முன்னணிஇ மேலக மக்கள் முன்னணி என்பன நெருங்கிச் செயற்பட்ட போதிலும் மற்றொரு பிரதான கட்சியான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சற்று ஒதுங்கி நின்றே செயற்பட்டது.

எனினும்இ கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தோல்வியடைந்ததையடுத்து பெரும் நெருக்கடியான நிலைக்கு தள்ளப்பட்ட இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகம் தொண்டமான்இ விடுதலைப் புலிகளுடன் கலந்துரையாடி அனைத்து தமிழ்க் கட்சிகளையும் ஒன்றிணைத்து பொது அரசியல் சக்தியொன்றை உருவாக்கப் போவதாக அறிவித்தார்.

இதனையடுத்து மலையக மக்கள் முன்னணியின் தலைவர் சந்திரசேகரனை சந்தித்து நீண்ட நேரம் உரையாடிய பின்னர் வன்னிக்குச் சென்று விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனை சந்தித்து இது தொடர்பாக கலந்துரையாடினார்.

ஆறுமுகம் தொண்டமான் வன்னி சென்று விடுதலைப் புலிகளை சந்திப்பதை தடுப்பதற்கு இந்தியத் தூதரகம் பல்வேறு முயற்சிகளை கடுமையாக கையாண்ட போதிலும் அது கைகூடாத நிலையில் வன்னி விஜயத்திற்குப் பின்னர் இந்திய இல்லத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவுடன் சந்திப்பு ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்திய இல்லத்தில் நடைபெற்ற தனிப்பட்ட அந்த சந்திப்பில் ஆறுமுகம் தொண்டமான் எதிர் கொண்ட தனிப்பட்ட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் உடனடி நிவாரணம் வழங்கப்பட்டதையடுத்து மறுநாளே இந்தியா சென்றுவிட்டார்.

அதுமட்டுமன்றி ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவின் இந்திய விஜயத்திற்கான குழுவில் இணைந்து கொள்ளவும் அவர் இணக்கம் தெரிவித்துள்ளார்.

எனவே இலங்கையின் பலம் பொருந்திய அனைத்து தமிழர் அரசியல் தலைமைகளும் ஒன்றுபடும் முயற்சியை இந்தியா மீண்டுமொரு தடவை தோற்கடித்துவிட்டதா என்பதை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகம் தொண்டமான் தான் எதிர்கால சமூகத்திற்கு எடுத்துக்கூற வேண்டும்.

தினக்குரல்
Reply


Messages In This Thread
தமிழ்க் கட்சிகள் ஒருங்கிணைப்பு முயற்சியை இந்தியா மீண்டும் - by நர்மதா - 12-25-2005, 11:49 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)