Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கண்காணிப்புக் குழு பணிகள் நிறுத்தம்
#2
யாழில் போர் நிறுத்த கண்காணிப்புக் குழு பணிகள் நிறுத்தம்
[சனிக்கிழமை, 24 டிசெம்பர் 2005, 17:13 ஈழம்] [ம.சேரமான்]
யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா இராணுவ வன்முறைகளும் அதற்கான எதிர்வினைகளும் அதிகரித்து வரும் நிலையில் இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினர் தமது பணிகளை இடை நிறுத்தியுள்ளனர்.


கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை ஊடகவியலாளர்களிடம் கண்காணிப்புக் குழுத் தலைவர் ஹொக்ரூப் ஹொக்லெண்ட் கூறியதாவது:

யாழில் எமது பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் வரை பணிகளை இடைநிறுத்த யாழ். கண்காணிப்புக் குழுவினருக்கு அறிவுறுத்தியுள்ளோம்.

கடந்த வியாழக்கிழமை முதல் யாழில் கண்காணிப்புக் குழுவினர் தமது பணிகளை இடை நிறுத்தியுள்ளனர்.

டிசம்பர் 19 ஆம் நாள் யாழ்ப்பாண மாணவர்கள் அரச படையினர் மீது கற்களை மட்டும் வீசவில்லை. கண்காணிப்புக் குழு அலுவலகத்துக்குள்ளும் வலுக்கட்டாயமாக உள்நுழைய முயன்றனர்.

அதை அமைதியான ஊர்வலம் என்று அழைக்க முடியாது. அது மிகவும் மோசமானது.

யாழ்ப்பாணத்தில் நடைபெறும் அனைத்து ஆர்ப்பாட்டங்களுக்கும் சில இளைஞர்கள்தான் முன்னிலை வகிக்கின்றனர். அவர்களை இராணுவம் அடையாளம் கண்டு உடனே கைது செய்ய வேண்டும்.

வடக்கு - கிழக்கில் சிறிலங்கா அரச படையினர் அமைதியற்ற சூழலை உருவாக்கி உள்ளனர். அவர்கள் கண்காணிப்புக் குழுவினரது பாதுகாப்பிலும் அக்கறை கொள்ளவில்லை.

கண்காணிப்புக் குழுவினர் மீதும் கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. எமது வாகனத் தொடரணி தாக்கப்பட்டது.

வடக்கு - கிழக்கு நிலைமையானது யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை ஆபத்துக்குள்ளாக்கி இருக்கிறது. படையினர் அமைதிக்கு எதிராக உள்ளனர். அவர்கள் அமைதி போதும் போதும் என்று கூறுகின்றனர்.

பேசாலை தாக்குதல் வன்மையான கண்டனத்துக்குரியது.

எமது கண்காணிப்புக் குழுவினரது பாதுகாப்புக்கு சர்வதேச நாடுகளினது உதவியை கோரமாட்டோம். சிறிலங்கா அரச படையினரால் 100 வீதம் எமக்கு பாதுகாப்பு அளிக்க முடியும்.

தற்போதைய நிலைமைகளைச் சீராக்க விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் மேல்நிலை அளவிலும் கீழ்நிலை அளவிலும் உடனடியாக பேச்சுகள் நடத்தப்பட வேண்டும்.

அண்மைய படையினர் மீதான தாக்குதல்களுக்கு யார் காரணம் உறுதியான ஆதாரங்கள் இன்றி முடிவுக்கு வர இயலாது என்றார் ஹொக்ரூப் ஹொக்லெண்ட்.


Puthinam


<b>Truce monitors in Sri Lanka stop function, cites lack of security</b>
http://www.irna.ir/en/news/view/menu-234/0...47619173108.htm

<b>Truce monitors stop work in Jaffna citing insecurity</b>

http://www.hindustantimes.com/news/7598_15...00500020002.htm
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
யாழில் போர் நிறுத்த கண்காணிப்புக் குழு பணிகள் நிறுத்தம் - by Vaanampaadi - 12-24-2005, 06:00 PM
[No subject] - by kurukaalapoovan - 12-25-2005, 10:42 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)