12-24-2005, 01:18 PM
<b>தமிழர் தாயகம்- தன்னாட்சி அதிகார சபை- சுயநிர்ணய உரிமையை சிங்களவர் ஏற்க வேண்டும்: சிங்கள அரசியல் ஆய்வாளர் சனிரால் லக்திலக </b>
தமிழர் தாயகக் கோட்பாடு மற்றும் விடுதலைப் புலிகளின் தன்னாட்சி அதிகார சபைஇ சுயநிர்ணய உரிமை ஆகியவற்றை சிங்களவர் ஏற்க வேண்டும் என்று சிங்கள இனத்தைச் சேந்த சட்டத்தரணியும் அரசியல் ஆய்வாளருமான சனிரால் லக்திலக வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர்விற்கு கூட்டாட்சி முறையே சிறந்தது என்பது தொடர்பாக கருத்தரங்கு அநுராதபுரம் சாரானந்த பிரிவேனையில் நடைபெற்றது.
இக்கருத்தரங்கில் சட்டத்தரணியும் அரசியல் ஆய்வாளருமான சனிரால் லக்திலக பேசியதாவது:
தமிழர் தாயகம் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய அம்சம். தனிநாடு கோரிய புலிகள் ஜக்கிய இலங்கைக்குள் தீர்வுகாண முன்வந்துள்ள போது அவர்கள் கோரும் பெயராலேயே நிர்வாகப் பிரதேசம் வழங்கப்பட வேண்டும்.
தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக் கொள்வதென்பது சிங்களவர்களுக்கு கசப்பான விடயமாக இருப்பது கவலைக்குரியது.
<b>பேராதனைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் பேராசிரியர் ஜயந்த செனவிரத்ன: </b>
சிங்கள மக்கள் வாக்களித்தமையால் மட்டும் மகிந்த ராஜபக்ச வெற்றி பெறவில்லை. லட்சக்கணக்கான தமிழர்கள் வாக்களிக்காமையினாலேயே அவர் வெற்றி பெற்றார்.
அவர் எனது சிறந்த நண்பர். நேரடியாகவே இதை நான் அவரிடம் தெரிவித்தேன்.
ஏகாதிபத்தியவாதிகளின் ஆட்சி முறையினாலேயே இனப்பிரச்சினை ஏற்பட்டது. தங்கள் நலனுக்காக இலங்கையரை அவர்கள் இரையாக்கியுள்ளனர். அனைவரையும் வீழ்த்தி தங்கள் ஆதிக்கத்திற்குள் இருந்தவர்களை ஆங்கிலேயர் ஓரினத்தவராக்க முயன்றனர்.
இது ஒரு மிலேச்சத்தனமான செயல். இதனால் பல இனக் குழுக்கள் முகவரி இல்லாமல் போயின. பல இனங்கள் வாழும் நாட்டில் ஒரு இனம் உருவாக முடியாது.
சுதந்திரத்தின் பின்னர் எமது தலைவர்கள் இலங்கையரை ஓரினத்தவராக்கவே அரசியல் யாப்பை உருவாக்கினர்.
இது மிக மோசமான யெல். இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர் தலைவர்கள் இராஜதந்திரிகளாக திகழ்ந்தனர். இலங்கையில் இன்றும் பேராசை பிடித்த அரசியல் தலைவர்களே உள்ளனர்.
<b>சட்டத்தரணி ஜயலத் பண்டார:</b>
அரச தலைவர் தேர்தல் காலத்தில் இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண எதையோ கூறி மக்களை ஏமாற்றியவர்கள் இன்று வேறு எதையோ கூறி வருகின்றனர்.
இப்படிப்பட்ட அரசியல்வாதிகளால் நாட்டில் பிரச்சினைகள் அதிகரித்த வண்ணமே உள்ளன என்றார் அவர்.
கூட்டாட்சி முறைத் தீர்வு தொடர்பாக கருத்துத் தெரிவிக்க இக்கருத்தரங்கில் அனைத்துக் கட்சியினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும்இ இலங்கை கம்யூனிஸ்ட் கட்சிஇ ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவற்றின் பிரதிநிதிகள் மட்டுமே கலந்துகொண்டனர்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பாக சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஜே.வி.பி. ஆகியவற்றைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கவில்லை.
www.puthinam.com

<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>