Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
டக்ளஸ் மீது கூட்டமைப்பினர் பாய்ச்சல்!
#1
டக்ளஸ் மீது கூட்டமைப்பினர் பாய்ச்சல்! இனவாதிகளுக்கு செருப்புத்தூக்கு பவன்இ தமிழ்மக்களைக் காட்டிக் கொடுக்கும்துரோகி திட்டித்தீர்த்தார் கஜேந்திரன் எம்.பி.
கடந்த புதனன்று நாடாளுமன்றில் இடம்பெற்ற 2006ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரனைப் பேசவிடாமல் கூச்சல்போட்டு குறிக்கீடு செய்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா. அவரைப் பார்த்துப் பதிலுக்கு மிக மோசமான வார்த்தைகளினால் திட்டித்தீர்த்தார் கஜேந்திரன் எம்.பி.
""தமிழ் மக்களை இனவாதிகளுக்குக் காட்டிக்கொடுக்கும் உனக்கு எம்மைப் பேசவிடாமல் குறுக்கீடு செய்வதற்கு என்ன தகுதி இருக்கின்றது?'' என்றும் ஏசினார் கஜேந்திரன்.
சபையில் இருந்த தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஈழவேந்தன்இ சிவநேசன் ஆகியோரும் கஜேந்திரனுக்கு ஆதரவாக தொடர்ந்தும் சத்த மிட்டவாறு ஏசத்தொடங்கியதால் அமைதியாக அடங்கிப்போனார் அமைச்சர் டக்ளஸ்.
இந்தக் களேபரத்தில் சபை ஒரே கூச்சலால் இரண்டுபட்டது.
நேற்றுமுன்தினம் நாடாளுமன்றில் இடம்பெற்ற 2006ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் மீதான குழுநிலை விவாதத் தில் கலந்துகொண்டு உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் யாழ்.புங்குடுதீவில் இளம் பெண் ஒருவர் கடற்படையினரால் பாலியல் வல்லலுறவுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலைசெய்யப்பட்டமை பற்றியும் அதனைத் தொடர்ந்து படையினர் யாழ். பல் கலைக்கழக மாணவர்கள் மற்றும் பேராசிரியர் மீது மேற்கொண்ட தாக்குதல் பற்றியும் கார சாரமாகக் கண்டித்து உரையாற்றிக் கொண்டிருந்தார்.
அப்போது ஆளுங்கட்சியின் முன் வரிசை ஆசனத்தில் அமர்ந்திருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாஇ கஜேந்திரனைப் பேச விடாமல் குறுக்கீடுசெய்தார். கஜேந்திரன் கூறுவது பொய் எனப் பொருள்படும் வார்த் தைகளை அவர் பிரயோகித்தார்.
தமிழ் உணர்வுடன் ஆவேசமாகப் பேசிக் கொண்டிருந்த கஜேந்திரன்இ டக்ளஸின் குறுக் கீட்டால் மேலும் ஆவேசமடைந்தார்.
அந்த ஆவேசத்தில் டக்ளஸ் தேவானந்தாவை வாயில் வந்தவாறு ஏசித்தள்ளினார் கஜேந்திரன்.
"இனவாதிகளுக்கு செருப்புத்தூக்கு பவன்'இ "தமிழ்மக்களைக் காட்டிக் கொடுக்கும்துரோகி' போன்ற சொற்பதங்கள் தாராளமாகப் பிரயோகிக்கப்பட்டன.
கஜேந்திரனுடன் இணைந்து அவரின் பின்வரிசையில் அமர்ந்திருந்த சிவநேசன் மற்றும் ஈழவேந்தன் ஆகியோரும் பலத்த சத்தத்துடன் அமைச்சர் டக்ளஸுக்கு எதிராகச் சொற்போர் தொடுத்தனர்.
ஆளுங்கட்சியில் எவரும் அமைச்சர் டக் ளஸுக்கு ஆதரவாக அவருடன் இணைய வில்லை. அமைதியாக நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். ஜே.வி.பியினர் சபையில் இருந்தும்கூட அவர்களும் கூச்சல் போடாமல் குழப்பம் செய்யாமல் அமைதி யாகப் பார்த்துக்கொண்டிருந்தனர்.
கஜேந்திரன் உரையாற்றி முடிந்ததன் பின்பும் கூட டக்ளஸுக்கு எதிரான தமது வசை பாடலைத் தமிழ்த் தேசிய கூட்டமைப் பினர் நிறுத்தவில்லை.
இதனால்இ கஜேந்திரனைஅடுத்து உரை யாற்ற வேண்டிய அமைச்சர் டியூ. குணசேகர வால் உரையாற்ற முடியாமல்போனது.
ஒரு சில நிமிடங்கள் கழித்தே சபையில் அமைதி நிலவியது. அதன்பிறகே அமைச்சர் டீயூ. குணசேகர உரையாற்றினார்.
இந்தப் பிரச்சினைகளுக்கு மத்தியில் சபையில் இருந்த தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவ நாதன் கிஷோர் இந்தச் சண்டையில் கலந்து கொள்ளாமல் அமைதியாகவே காணப் பட்டார்.
அதன் பிறகு டக்ளஸ் தேவானந்தா ஆச னத்தைவிட்டு எழுந்து சென்று ஒவ்வொரு அமைச்சரிடமும் ஏதோ கூறினார்.
முதலில் பிரதமர் ரட்ணசிறி விக்கிரம நாயக்காவின் காதில் ஏதோ ஓதினார் அவர். அதன்பின் அமைச்சர் டிலான் பெரேராவிடம் போய் ஏதோ உரைத்தார்.
அதனையடுத்து எதிர்வரிசையில் அமைர்ந்திருந்த ஜே.வி.பி.யின் நாடாளு மன்ற உறுப்பினர் ராமலிங்கம் சந்திரசேகர னும் டக்ளஸின் அருகே வந்து அவரின் காதோடு காதாக எதையோ கூறினார்.
அதன்பின் சிறுது நேரம் சபையில் இருந்து விட்டு வெளியேறிப்போய்விட்டார் அமைச்சர் டக்ளஸ தேவானந்தா.

லங்காசிறி
Reply


Messages In This Thread
டக்ளஸ் மீது கூட்டமைப்பினர் பாய்ச்சல்! - by நர்மதா - 12-24-2005, 10:44 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)