Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
13905 :இன்னுமொரு "தூக்கு மேடைக்குறிப்பு"
#1
<b>13905</b> :<b><i>இன்னுமொரு "தூக்கு மேடைக்குறிப்பு"</i></b>

"நான் அனுபவசாலியான படைப்பாளியோ,தொழில்முறைப் படைப்பாளியோ கிடையாது..
எனது சிறுகதைகளனைத்துமே எனது தாயகத்தில் எங்கோ ஒரு பகுதியில் நிகழ்ந்தவற்றின் பிரதிபலிப்பே.."
என்று "சிலவார்த்தைகள்" இடம்பெற்றிருப்பது "<b>13905"</b>
என்ற நூலில்...
நூலாசிரியர் <b>ம.தி.சாந்தன்</b>...

ராஜிவ் என்ற தனிமனித சாவுக்காக தூக்குத்தண்டணை பெற்ற மூவரிலொருவர்...20 சிறுகதைகளைக் கொண்ட இந் நூலை "<b>அர்ச்சுனா பதிப்பகம்" சூன் 2005</b> இல் வெளியிட்டிருக்கிறது...அண்மையில் இங்கு நூலகத்தில் பார்த்தேன்;படித்தறிந்தேன்...

தலைப்பிட்ட மாதிரி, இது இன்னுமொரு "தூக்குமேடைக் குறிப்பு" ( ஜூலியஸ் பூஸிக்" இனது முனையது)த்தான்....
மிக்க அறிவு முதிர்ச்சியோடு பல கருத்துக்கள்,நிகழ்வுகள் "கதைகள்" ஆக பேசப் படுகின்றன...
நாம் வெளியில் இருந்தும் எவ்வளவு "பின்" நிற்கிறோம் என்பதை நமக்குணர்த்தும் கதைகள்...
கரவெட்டி முதல் நோர்வே என கதைப் பரப்புகள் விரிகின்றன,,,
அலட்டல் இல்லாத அமைதியான, ஆனால் அழமான கருத்துகள் பார்வைகள் சிந்தனைகள் என "13905" மூலம்"ம.தி.சாந்தன்" நமக்கு "இன்னும்" உயர்கிறார்....
அவருக்கு வாழ்த்து சொல்ல எனக்குத் தகுதி இல்லவேஇல்லை...
"
"
Reply


Messages In This Thread
13905 :இன்னுமொரு &quot;தூக்கு மேடைக்குறிப்பு&quot; - by மேகநாதன் - 12-24-2005, 08:49 AM
[No subject] - by RaMa - 12-27-2005, 05:16 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)