Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இந்தியாவையும் கறிவேப்பிலை போன்றே பயன்படுத்தவேண்டும்
#1
இந்தியாவையும் கறிவேப்பிலை போன்றே பயன்படுத்தவேண்டும்
அளவுக்கு மீறி சர்வதேசத் தலையீட்டுக்கு
இடங்கொடாதீர் என்கின்றது ஜே.வி.பி.
நிமல் ரட்நாயக்கா நாடாளுமன்றில் உரை
தமிழீழ விடுதலைப் புலிகள் சர்வதேச நாடுகளில் இருந்து நிதி பெறுவதைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
எமது நாட்டைப் பிரித்துக் கொடுப்பதற் காக எம்மை சுற்றிச் சுற்றிவரும் சர்வதேச நாடுகளைத் தவிர்க்கவேண்டும். எமது பிரச் சினைகளை நாமே தீர்த்துக்கொள்ளும் நிலைக்கு வரவேண்டும்.
இந்தியாவாக இருந்தாலும் தேவைக்கு அதிகமாக பயன்படுத்தக் கூடாது. இந்தியா வைக் கறிவேப்பிலைபோல் பயன்படுத்தவேண்டும். தேவை முடிந்ததும் ஒதுக்கிவிட வேண்டும்.
எமது தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண நாம் இப்போது இந்தியõவை அணுகு கிறோம். இந்தியாவையும் நாம் அளவோடு தான் பயன்படுத்த வேண்டும்.
எமது பிரச்சினையில் அதிகம் மூக்கை நுழைக்க இந்தியாவை அனுமதிக்கக்கூடாது. கறிவேப்பிலையைப்போல் பயன்படுத்திவிட்டு வீசிவிட வேண்டும்.
எமது நாட்டின் பிரச்சினைக்கு இந்தி யாவை மாத்திரமன்று, சர்வதேச நாடுகளின தும் ஆலோசனைகளைப் பெறுவது தப் பில்லை.
இவ்வாறு நேற்று முன்தினம் நாடாளுமன்றில் வரவு செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் ரட்நாயக்க கூறினார்.
அவர் அங்கு மேலும் கூறியதாவது:
புலிகள் இயக்கத்திற்கு பல சர்வதேச நாடுகளிடமிருந்து நிதி கிடைக்கின்றது. அண்மையில் பிரான்ஸில் இருந்து புலிகள் பத்துக்கோடி யூரோ நிதியைப் பெற்றுள்ளனர். எனப் பிரான்ஸ் தெரிவித்துள்ளது. இதுமாத்திர மின்றி பல நாடுகளில் புலிகள் இவ்வாறு பணத்தைப் பெற்றுவருகின்றனர்.
இதைத் தடுத்து நிறுத்துவதற்கான நட வடிக்கைகளை வெளிநாட்டமைச்சு சர்வதேச மட்டத்தில் மேற்கொள்ளவேண்டும்.
சர்வதேச மட்டத்தில் புலிகள் பலமடைந் துள்ளனர் எனப் புதிய இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இதை வெளிநாட்டமைச்சு கருத்திகொண்டு செயற் பட வேண்டும்.
அதேபோல், எமது நாட்டின் இந்த யுத் தப் பிரச்சினையை நாமாகவே தீர்த்து கொள்ளும் நிலையை உருவாக்க வேண் டும்.
எமது பிரச்சினையை நாம் சர்வதேச மயப்படுத்தக்கூடாது.
சர்வதேச நாடுகள் எமது பிரச்சினையைத் தீர்த்து வைப்பதாகக் கூறிக்கொண்டு எம்மிடம் வருகின்றன. அவை எமது நாட்டை இரண்டாகப் பிரித்து வைப்பதற்காகவே செயற்படு கின்றன.
சூடானைப் பாருங்கள். சூடானின் பிரச் சினை சர்வதேச மயப்படுத்தப்பட்டதன் காரண மாக அது வட சூடான் என்றும் கிழக்கு சூடான் என்றும் இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
எதியோப்பியாவும் இதே நிலைக்குத்தான் தள்ளப்பட்டுள்ளது. சைப்பிரஸும் இதில் இருந்து தப்பவில்லை.
இவ்வாறான உதாணரங்களை வைத்துப் பார்த்தால், இந்த நாடுகள் எமது நாட்டுப் பிரச்சினையில் அளவுக்கு அதிகமாகக் கவ னம் செலுத்துவது நாட்டை இரண்டாகப் பிரிக் கத்தான் என்பது தெளிவாகும்.
அந்த ஆலோசனைகளை ஆராய்ந்து பார்த்து செயற்படாமல் ஆராய்வுக்கு அப் பால் சென்று செயற்பட முனைவதே தப்பு.
சர்வதேச நாடுகளின் இந்த மாதிரியான சதித்திட்டங்களில் நாம் என்றும் சிக்கிவிடக் கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.


uthayan
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
இந்தியாவையும் கறிவேப்பிலை போன்றே பயன்படுத்தவேண்டும் - by Vaanampaadi - 12-24-2005, 08:00 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)