12-24-2005, 06:06 AM
தூயவன் Wrote:தரப்டுத்தல் தனிச்சிங்களச் சட்டம்.. சிங்கள மொழித்திணிப்பு.. உங்களது ஆரம்ப வன்முறை.. தமிழ் மாணவா பேரவை.. பிரபாகரனது முதற்கொலை... காவல்துறை அதிகாரிகளின் கொலை.. இப்படி தற்ஸ்ரமிழ் இணையத்தளத்தில் தொடர்ச்சியாகக்கொட்டியது நினைவில்லையா? கனடாவிலிருந்து ஒரு அன்பர் தொடராக எழுதியிருந்தார்..அத்தொடரை புத்தகமாக வெளியிட உதவிகோரியது வரை அத்தனையையும் படித்திருக்கிறேன்..
மேலும் சில விடயங்களை இவ் நபர் மறைப்பதை சுட்டிக்காட்ட வேண்டும். கல்லோயக் குடியேற்றம், மகாவலி கங்கை அபிவிருத்தி என்று தமிழர் நிலப்பரப்பை ஆக்கிரமித்தது கூட இப் பிரச்சனைகளுக்கு காரணம் என்பதை மறைப்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
இதை விட தொழில்ரீதியில் சென்ற தமிழ்மக்களை "நாய்" என்றும்"கள்ளத் தோணிகள்" என்றும் வசை பாடும் போது அதை சகிர்த்துக் கொண்டு, சிங்களவர்களின் காலடியில் கிடக்கவேண்டும் என்று நினைக்கின்றாரா?
எனவே எவ்வித யதார்த்ததுக்கு உதவாத விவாதியாக தன்னை காட்டிக் கொள்ள இவர் விரும்புகி;ன்றார் என்பது தான் புலப்படுகின்றது
[size=14] ' '

