Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இலங்கை VS இந்தியா
#37
<b>3 ஆவது டெஸ்டில் 259 ஓட்டங்களால் இந்திய அணி வெற்றி </b>
<img src='http://www.thinakkural.com/New%20web%20site/web/2005/December/23/sp21.jpg' border='0' alt='user posted image'>

இந்திய அணி தொடரைக் கைப்பற்றியது
இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியிலும் வென்றதன் மூலம் இந்திய அணி 2-0 என்னும் ரீதியில் இந்தத் தொடரைக் கைப்பற்றியுள்ளது.
இப்போட்டியில் இந்திய அணி 259 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
இந்தியாவில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட இந்தத் தொடரின் முதலாவது போட்டி மழையினால் பாதிக்கப்பட்டதோடு, டெல்லியில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்திய அணி 188 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
மூன்றாவது போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை அஹமதாபாத்தில் ஆரம்பமாகியது. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 97 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சற்றுத் தடுமாறியபோதும், 6 ஆவது விக்கெட்டுக்காக லக்ஷ்மனுடன் ஜோடி சேர்ந்த தோனி 49 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்து அணியை வலுவடையச் செய்தார்.
இதன் பின் ஜோடி சேர்ந்த லக்ஷ்மனும், பதானும் இணைந்து நிதானமாகத் துடுப்பெடுத்தாடி 7 ஆவது விக்கெட் இணைப்பாட்டமாக 125 ஓட்டங்களைப் பெற்றனர்.

இறுதியில் இந்திய அணி அதன் முதல் இனிங்ஸில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 398 ஓட்டங்களைப் பெற்றது. இதில் லக்ஷ்மன் 104 ஓட்டங்களையும், பதான் 82 ஓட்டங்களையும் குவித்தனர். இலங்கை அணி சார்பாக பந்துவீச்சில் மலிங்க மற்றும் முரளிதரன் ஆகிய இருவரும் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இந்தப் போட்டியில் வெற்றிபெற்றால் தான் தொடரைக் சமப்படுத்தவாவது முடியுமென்ற இக்கட்டான சூழ்நிலையில் முதல் இனிங்ஸில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கை அணி வீரர்கள் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்ததுடன், டில்சான் மட்டுமே அரைச் சதத்தை (65 ஓட்டங்கள்). முடிவில் இலங்கை அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 206 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

இந்திய அணி சார்பாக பந்துவீச்சில் ஹர்பஜன் சிங்க 62 ஓட்டங்களைக் கொடுத்து 7 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.
இதனையடுத்து 192 ஓட்டங்கள் முன்னிலையில் இருந்த இந்திய அணி தனது 2 ஆவது இனிங்ஸை ஆரம்பித்தது.

9 விக்கெட்டுகளை இழந்து 316 ஓட்டங்கங்களைப் பெற்ற வேளையில் தனது ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது. இதில் யுவராஜ்சிங் 79 ஓட்டங்களையும், ஹர்பஜன்சிங் ஆட்டமிழக்காது 40 ஓட்டங்களையும் பெற்றனர். இலங்கை அணிசார்பாக பந்துவீச்சில் முரளிதரன் மற்றும் பண்டார ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

509 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு தனது 2 ஆவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இலங்கை அணி அனில் கும்ப்ளேயின் பந்து வீச்சில் தடுமாறி இறுதியில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 249 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டது.
இதில் மஹேல ஜயவர்தன 57 ஓட்டங்களையும், டில்சான் 65 ஓட்டங்களையும் குவித்தனர். இந்திய அணி சார்பாக பந்துவீச்சில் கும்ப்ளே 5 விக்கெட்டுகளையும், ஹர்பஜன்சிங் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இறுதியில் இந்திய அணி 259 ஓட்டங்களால் இறுதிப்போட்டியிலும் வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்றியது. ஆட்டநாயகனாக பத்து விக்கெட்டுகளைக் கைப்பற்றிய <b>ஹர்பஜன் சிங் </b>தெரிவு செய்யப்பட்டார்.

thinakkural
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by kavithan - 10-26-2005, 12:26 AM
[No subject] - by Rasikai - 10-26-2005, 09:32 PM
[No subject] - by RaMa - 10-27-2005, 04:57 AM
[No subject] - by இவோன் - 10-27-2005, 06:03 AM
[No subject] - by SUNDHAL - 10-27-2005, 10:39 AM
[No subject] - by Birundan - 10-27-2005, 10:51 AM
[No subject] - by MUGATHTHAR - 10-28-2005, 02:07 PM
[No subject] - by Danklas - 10-28-2005, 02:19 PM
[No subject] - by adithadi - 10-28-2005, 02:34 PM
[No subject] - by Danklas - 10-28-2005, 02:42 PM
[No subject] - by kuruvikal - 10-28-2005, 06:00 PM
[No subject] - by Danklas - 10-28-2005, 11:29 PM
[No subject] - by kuruvikal - 10-28-2005, 11:57 PM
[No subject] - by MUGATHTHAR - 10-31-2005, 12:23 PM
[No subject] - by Rasikai - 10-31-2005, 07:50 PM
[No subject] - by adithadi - 11-01-2005, 04:18 AM
[No subject] - by வியாசன் - 11-03-2005, 03:15 PM
[No subject] - by MUGATHTHAR - 11-03-2005, 03:37 PM
[No subject] - by kuruvikal - 11-03-2005, 10:03 PM
[No subject] - by Birundan - 11-04-2005, 01:01 AM
[No subject] - by MUGATHTHAR - 11-06-2005, 07:16 PM
[No subject] - by kuruvikal - 11-07-2005, 06:58 PM
[No subject] - by MUGATHTHAR - 11-09-2005, 11:27 AM
[No subject] - by kuruvikal - 11-09-2005, 12:04 PM
[No subject] - by Danklas - 11-09-2005, 12:08 PM
[No subject] - by வியாசன் - 11-12-2005, 11:52 AM
[No subject] - by kuruvikal - 11-12-2005, 11:58 AM
[No subject] - by MUGATHTHAR - 11-12-2005, 01:40 PM
[No subject] - by MUGATHTHAR - 12-07-2005, 11:31 AM
[No subject] - by MUGATHTHAR - 12-14-2005, 09:10 AM
[No subject] - by தூயவன் - 12-15-2005, 07:12 AM
[No subject] - by Luckylook - 12-15-2005, 12:38 PM
[No subject] - by நர்மதா - 12-20-2005, 10:46 AM
[No subject] - by kuruvikal - 12-21-2005, 09:04 AM
[No subject] - by Danklas - 12-22-2005, 10:07 AM
[No subject] - by MUGATHTHAR - 12-24-2005, 06:04 AM
[No subject] - by MUGATHTHAR - 12-27-2005, 06:31 AM
[No subject] - by MUGATHTHAR - 01-04-2006, 06:50 AM
[No subject] - by MUGATHTHAR - 01-05-2006, 08:34 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)