Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மாவீரர்களின் வரலாறுகள்
#2
கரும்புலி மேஜர் டாம்போ
<img src='http://img299.imageshack.us/img299/7809/majortampo1jj.gif' border='0' alt='user posted image'>

கா. தயாபரன்
முழங்காவில் மன்னார்.

சோகத்தை வெல்ல வீரத்தை விதைத்தான்

அடர்ந்த காட்டின் நடுவிலிருக்கும் பயிற்சி முகாம். காட்டு மரங்கள் தலை குனிந்து சலசலப்பில்லாமல் சத்தமின்றி நின்றன. பயிற்சி முகாமின் உள்ளே ஓடும் ஒவ்வொரு ஒற்றையடிப்பாதையும் டாம்போவின் காலடியைத் தேடித் தேடி தவித்தன. காணும் ஒவ்வொரு மரமும் - அவற்றின் ஒவ்வொரு அசைவும் அவனின் நினைவையே திரும்பத் திரும்பப் பாடிக்கொண்டிருந்தன.

மரங்களின் மறைவுகளில் தெரிந்தும் தெரியாமலும் அமைக்கப்பட்ட கூடாரங்கள் அவற்றிற்கு நடுவே அழகாக நிற்கும் வட்டவடிவக் காட்டில். காட்டின்சிறிய தடிகளால் அமைக்கப்பட்ட இருக்கைகள். எதைப் பார்த்தாலும் டாம்போவின் கதை சொல்லின.

இந்த முகாமின் அழகையும் - அமைப்பையும் நிர்மாணித்தவனே டாம்போ தான்.

முகாமினுள் தொலைக்காட்சியும் வானொலியும் அவனின் இழப்பின் பின் ஒருநாளும் இயங்கவில்லை. ஆனால்இ அவனிருக்கும் பொழுது அவை ஒரு நாளும் மௌனமாக நின்றதில்லை. போராளிகளின் இழப்புக்களின் போது மட்டும் சோகமாக நின்றுவிடும் அவை. இன்று நிரந்தரமாக மௌனமாகி நின்றன.

முகாமிற்கு அருகா ஓடும் காட்டுப் பாதையின் ஓரமாக நிற்கும் வாகனத்திடம் செல்லுங்கள். அது தன் சோகத்தைச்சொல்லும் டாம்போவின் சாரதியத் திறமையைப் பற்றிச் சொல்லும்.

வாகனங்களைச் செலுத்தும் பொழுது அருகில் இருப்பதே இனிமையானது. காட்டின் ஒவ்வொரு மரத்திற்கும் பாதைகளில் நீட்டிக் கொண்டு நிற்கும் கட்டைகளிற்கும் அழகாகஇ இலகுவாகஇ விலகி விலகி ஓடும் அழகைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.
பயிற்சி முகாமில் - போரளிகள் ஓய்வு நாள் ஒன்றில் ஒன்றாகக் கூடுவார்கள். தங்கள் மனவுணர்வுகளைஇ எதிர்பார்ப்புகளை கலைவடிவங்கள் மூலம் வெளிப்படுத்துவார்கள். சிலாவத்துறை இராணுவ முகாம் தாக்குதல் நடவடிக்கைக்கு ஒரு சில நாட்களுக்கு முன்பு கூடஇ அங்கு ஒரு கலை நிகழ்ச்சி நடந்தது. புதிய போராளிகள் டாம்போவை பாடச் சொன்னார்கள். அவர்களுக்கு நன்றாகத் தெரியும் தலைவரைப் பற்றிப்பாடும் ஒரு பாடலைத்தான் அவன் பாடுவான் என்று. ஆனாலும் அவனின் குரலில் அந்தப் பாடலைக் கேட்க அவர்கள் விரும்பினார்கள். அவனும் பாடினான்.

பிரபாகரன் நினைத்தது நடக்கும் - அவன் புலிப்படை நெருப்பாற்றை நீந்திக் கடக்கும் கவிஞர் காசி அண்ணனின் அந்தப்பாடல் இளைய போராளிகளின் மகிழ்ச்சிக் கூச்சல்களிடையே அவன் குரலில் ஒலித்து ஓயும்.

முகாமின் நடுவே நிற்கும் பெரிய மரத்தின் நிழலின் கீழ்த்தான் கலை நிகழ்ச்சிகள் நடப்பது வழமை. அந்த மரத்திற்கும் டாம்போவைப்பற்றி அவனின் மனவுணர்வுகளைப்பற்றிநன்றாகவே தெரியும். அதன் அடிவேரில் இருந்துதான் அவன் தோழன் ஒருவனுக்கு தன் துயரம் நிறைந்த குடும்பப் பின்னணியைக் கூறினான். தயங்கித் தயங்கி வந்த அவனின் சோகமான குரல் இலகுவாக மறக்கக் கூடியதல்ல.

எங்கள் வீட்டில் மூன்று ஆண்களுக்கு பின்தான் கடைசித் தங்கச்சி பிறந்தாள். நான்தான் மூத்த பிள்ளை. எங்களுக்குச் சின்ன வயதாக இருக்கும்பொழுதே அப்பாவிற்கு இயலாமல் போய்விட்டது. அம்மாதான் கூலி வேலை செய்து கஷ்டப்பட்டு எங்களை வளர்த்தா. நான் வளர்ந்ததும் அம்மாவின் சுமையைப் பகிர்ந்து கொள்ளத் தொடங்கினேன்.

என்னைவிட தம்பிகளும் - தங்கையும் படிக்க வேண்டுமென்று நினைத்தேன். நாங்கள் எல்லோரும் ஒரு கூட்டின் பறவைகள் போல் பாசம் நிறைந்தவர்களாக இருந்தோம்.

எனது தேசத்தில் நிகழ்ந்தவைகள் என்னை ஒரு போராளியாக மாறச் சொன்னது. குடும்பத்தின் நிலையோ தடுத்தது. ஆனாலும் நான் மண்ணுக்காக வாழ்வதென முடிவெடுத்தேன். 1986இன் நடுப்பகுதியில் இயக்கத்தில் இணைந்து கொண்டேன்.

அதன் பின்பும் சில தடவைகள் வீட்டிற்கு சென்றேன். ஆனால் அண்மையில்தான் என் வீட்டில் வேதனை நிறைந்த சம்பவம் ஒன்று நிகழ்ந்தது.


தம்பிக்கும் தங்கச்சிக்கும் இடையே சின்னதொரு பிரச்சனை அம்மா தம்பிக்கு அடித்து விட்டா. தன்னால் அண்ணனுக்கு அடி விழுந்து விட்டதே என்ற வேதனையில் என் தங்கை அறிவீனமாகத் தன் உயிரை அழித்துக் கொண்டாள். சொல்லிக் கொண்டிருந்த டாம்போ மௌனமானான். சத்தமற்ற அந்தக் கணங்களில் தன்னைத் திடப்படுத்திக் கொண்டே தொடர்ந்தான்.

அதன் பின்பு கடலில் பயணம் சென்ற என் தம்பியை கடற்படை பிடித்ததாகச் சொன்னார்கள். எங்கள் தேசத்தில் கைது செய்யப்படுபவர்கள் காணாமல் போனதொன்றும் அதிசயமில்லைத்தானே.

என் மூன்றாவது தம்பியை அம்மாவே அழைத்து வந்து இயக்கத்தில் சேர்ப்பித்ததாகக் கேள்விப்பட்டேன். அவனும் இந்தப் பயிற்சி முகாமில்தான் ஓடித்திரிகின்றான்.

இப்போதெல்லாம் வீட்டில் எனது அம்மாவும் - அப்பாவும் தனியாக ஏக்கத்தோடு ஏதோவொரு எதிர்பார்ப்போடு இருப்பார்கள் என நினைக்கின்றேன்.
எனச் சொல்லி முடித்தான்.

டாம்போ மென்மையான இரக்கம் நிறைந்த சுபாவமுடையவன். உண்மையில் சொல்லப்போனால் அவன் ஒவ்வொரு போராளியையும் தன் சகோதரர்களாக நினைத்துத்தான் பழகினான்.

இந்தியப்படை இம்மண்ணை ஆக்கிரமித்திருந்த நேரம் ஒருமுறை இவன் காலில் காயமடைந்திருந்தான். அந்நேரம் வைத்தியத்திற்காக தமிழ் நாட்டிற்கு அனுப்பப்பட்டான். ஒரு நிலையில்இ தமிழ் நாட்டில் வைத்து எமது போராளிகள் கைது செய்யப்பட்ட பொழுது டாம்போவும் கைது செய்யப்பட்டான். காலப்போக்கில் தமிழீழத்திலிருந்த இந்தியச் சிறைகளிற்கு அவர்கள் மாற்றப்பட்டார்கள்.

வவுனியா நகரத்தின் மத்தியில் பலத்த பாதுகாப்புடன் சிறை வைக்கப்பட்டிருந்த புலிப்படை போராளிகள் சிறையை உடைத்துத் தப்பி வந்தார்கள். டாம்போவும் அச்சிறையுடைப்பின் போது தப்பி வந்தான். அதன் பின்பு இந்தியப் படை இந்த மண்ணில் இருக்கையிலும் அவர்கள் சென்ற பின்பும் டாம்போ போராட்டத்தின் வளர்ச்சிக்காகக் கடுமையாக உழைத்தான்.

கரும்புலிகளைப் பற்றி அவர்களின் உறுதியைஇ ஒப்பற்ற தியாகத்தைப்பற்றி எல்லாம் பெரிதாக மதித்துக் கதைக்கும் டாம்போ ஒன்றில் மட்டும் உறுதியாக இருந்தான்.

இந்த மண்ணின்ர விடுதலைக்காக யாராவது ஒருவர் மரணிப்பதாக இருந்தால் முதலில் அது நானாக இருக்க வேண்டும். என்றுதான் நான் விரும்புகின்றேன். மன்னார் மண்ணில் கரும்புலித் தாக்குதல் என்றால் அதனை நான்தான் செய்வேன் என்று தெளிவாகச் சொல்வான்.

அவனின் விருப்பமும் நிறைவேறும் நாள் வந்தது. சிலாவத்துறை இராணுவ முகாம் மீது கரும்புலித் தாக்குதல் நடாத்துவது எனத் தீர்மானிக்கப்பட்டது.

டாம்போவின் வேண்டுதல் ஏற்கப்பட்டது. தன் மரணத்தின் நாளை உறுதிப்படுத்திக் கொண்டான். முகாம் தாக்குதலிற்குரிய தயாரிப்புகளில் அவனும் கலந்து கொண்டான். இடையில் ஒருநாள் தன் கிராமத்திற்குச் சென்றான்.

தன் தாயையும் தந்தையையும் சந்தித்தான். திடீரென அம்மாவை அணைத்துக் கொஞ்சினான். தன் மகனின் விசித்திரமான நடவடிக்கையைப் பார்த்து தாய் சிரித்தாள். தன் சிரித்த முகத்தின் இறுதித் தோற்றத்தை அவர்களுக்குக் காட்டிவிட்டு அவன் திரும்பினான்.

வேலைகளின் நடுவேதான் நேசித்த போராளிகளையும் இடை இடையே சந்தித்தான். தாக்குதலுக்கு இரண்டு நாட்களுக்கு முன் பயிற்சி முகாமிற்கு வந்தான்.

புதிய போராளிகளிடம் நான் கரும்புலியாகச் செல்கிறேன் எனக் கூறினான். டாம்போ அண்ணை பகிடி விடுகிறார் என எல்லோரும் சிரித்தார்கள். அவனும் சிரித்தான். இரவு துப்பாக்கியை எடுத்துக்கொண்டு வேட்டைக்கு சென்றான். எல்லாம் வழமைபோலவே நடந்தது. இவன்தான் கரும்புலியாகச் செல்கின்றான் என்று சொன்னால் எவருமே நம்பமாட்டார்கள்.

விடிந்ததும் தன் தம்பியை அழைத்துஇ நான் போறன் வருவனோ தெரியாது என்றான் டாம்போ. அவனது தம்பிக்கு எதுவுமே விளங்கவில்லை. தன் அண்ணனை மரியாதையுடன் பார்த்தபடியே விலகி நின்றான்.

சிரித்தபடியே டாம்போ வெளியேறினான். முகாமின் வாசலிற்குச் சென்றவன் திரும்பி முகாமை நீண்ட நேரம் பார்த்தான்.

போராளிகளிற்கு சிலர் கைகளைக் காட்டினர். கையை அசைத்தபடியே அவன் தொடர்ந்து நடந்தான்.

19ஆம் திகதி காலை நேரம் டாம்போ தன் நண்பன் ஒருவனுடன் இருந்தான். தாக்குதலில் தனக்கு வழங்கப்பட்ட கடமையைப்பற்றி அவன் நண்பன் சொல்லிக் கொண்டிருந்தான். டாம்போ மகிழ்ச்சியாகக் கேட்டுக் கொண்டிருந்தான். அவனிற்காக அந்த நண்பன் சோகமாக இருந்தான்.

தன் நண்பனிடம் இப்படி ஒரு சா ஒருதருக்கும் வராது என உறுதியாகச் சொன்னான் டாம்போ. இரவு வரும்வரை அவர்கள் காத்திருந்தார்கள்.

அன்று எல்லாப் போராளிகளிற்கும் தன் கையாலேயே உணவு தரவேண்டும் என டாம்போ நினைத்தான் போலும். பகலுணவை தன் தோழர்களுக்கெல்லாம் எடுத்துக் கொடுத்தான். அவர்கள் சாப்பிடுவதை ரசித்தபடியே பார்த்துக் கொண்டிருந்தான். போராளிகளின் கண்கள் கலங்கியிருந்தன. அன்று எவருமே முழுமையாகச் சாப்பிடவில்லை.

டாம்போ தனிமையாய் இருக்கும் பொழுது அந்த போராளி நண்பன் அருகில் வந்தான். வெடிமருந்து வண்டியை விட்டவுடன் இறங்கி ஓடி வந்து விடு என்று மெதுவாகச் சொன்னான்.

நான் திரும்பி வரமாட்டேன்இ என்னால் முடிந்தளவு உள்ளே சென்று முகாமின் சுவரோடு மோதுவதுதான் எனது நோக்கம் என்றான் டாம்போ. அவனின் உணர்வகளை அந்த நண்பன் விளங்கிக் கொண்டான். அவன் அதன்பின் மௌனமாகிப் போனான்.

இரவு வந்தது..

சிலாவத்துறை இராணுவ முகாம் மீதான தாக்குதல் ஆரம்பமானது. சில மணித்துளிகளில் உதவி அரசாங்க அதிபர் விடுதியில் இருந்த சிறிய இராணுவமுகாம் புலிகளிடம் வீழ்ச்சியடைந்தது.

அந்தப் பக்கமாக இருந்த கொண்டச்சி வீதியால்தான் வெடிமருந்து நிரப்பப்பட்ட வண்டி இராணுவ முகாமினுள் செல்வதெனத் தீர்மானிக்கப்பட்டது.

வண்டி செல்வதற்காக போராளிகள் வீதியை செப்பனிட்டுக் கொண்டிருந்தார்கள்இ அந்த இடை நேரத்திலும் டாம்போ தாக்குதலின் பொழுது காயமடைந்த போராளிகளைத் தூக்கி வருவதிலும்இ சிகிச்சையளிப்பதிலும் ஈடுபட்டிருந்தான்.

வண்டி செல்வதற்குரிய நேரம் வந்தது.

டாம்போ வெடிமருந்து வண்டியின் அருகில் வந்தான். பக்கத்தில் நின்ற தோழனை இறுக அணைத்து முத்தமிட்டான்.

நானும் கொஞ்சத்தூரம் வாறன் என்றான் அத்தோழன்.

வேண்டாம் ஏதும் தவறென்றாலும் ஏன் வீணா எல்வோரும் சாவான் என்று சொல்லியபடியே வண்டியில் ஏறி இயக்கினான் டாம்போ. வண்டியின் அருகில் ஓடிவந்தபடியே விட்டு விட்டு ஓடி வரலாம்தானே என்று தயங்கித் தயங்கிக் கேட்டான் அந்தத் தோழன்.


சரி பார்ப்போம் டாம்பொவின் இறுதி வார்த்தைகள் இவைதான்.

வெடிமருந்து வண்டி உறுமிக் கொண்டு இராணுவ முகாமை தேடி ஓடியது. அந்த வண்டியை நோக்கி இராணுவத்தினரின் முழு ஆயுதங்களும் குறிவைத்து இயங்கின. குறித்த இலக்கிற்கு முன்பே அந்த வண்டி வெடித்துச் சிதறியது.

ஒளிப்பிழம்புடன் கரும்புகையொன்று வானில் எழுந்து கலந்தது. கடற்கரைகளில்இ வயல் வெளிகளில் - தூரத்துக்காட்டின் ஓரங்களில் நின்ற போராளிகளின் நெஞ்சங்களை வெடியோசை பாரமாக அழுத்தியது. அவர்கள் நேசித்த டாம்போவின் வீரமரணச்செய்தியை அந்தச் சப்தம் காதோடு வந்து சொல்லிச் சென்றது.
Reply


Messages In This Thread
[No subject] - by நர்மதா - 12-23-2005, 10:24 PM
[No subject] - by நர்மதா - 12-23-2005, 10:24 PM
[No subject] - by நர்மதா - 12-23-2005, 10:29 PM
[No subject] - by Selvamuthu - 12-24-2005, 12:09 AM
[No subject] - by வர்ணன் - 12-25-2005, 04:35 AM
[No subject] - by RaMa - 12-25-2005, 05:34 AM
[No subject] - by நர்மதா - 01-07-2006, 12:53 PM
[No subject] - by தூயவன் - 01-07-2006, 02:41 PM
[No subject] - by நர்மதா - 01-07-2006, 02:49 PM
[No subject] - by நர்மதா - 01-08-2006, 03:43 PM
[No subject] - by தூயவன் - 01-08-2006, 03:47 PM
[No subject] - by Rasikai - 01-09-2006, 07:24 PM
[No subject] - by kurukaalapoovan - 01-09-2006, 08:30 PM
[No subject] - by வர்ணன் - 01-10-2006, 12:43 AM
[No subject] - by இராவணன் - 01-10-2006, 01:28 AM
[No subject] - by kurukaalapoovan - 01-10-2006, 07:41 AM
[No subject] - by நர்மதா - 01-10-2006, 10:57 AM
[No subject] - by nallavan - 01-10-2006, 12:32 PM
[No subject] - by nallavan - 01-10-2006, 12:40 PM
[No subject] - by RaMa - 01-11-2006, 05:09 AM
[No subject] - by வர்ணன் - 01-12-2006, 06:51 AM
[No subject] - by நர்மதா - 01-12-2006, 10:50 AM
[No subject] - by மேகநாதன் - 01-12-2006, 12:37 PM
[No subject] - by நர்மதா - 01-12-2006, 03:38 PM
[No subject] - by நர்மதா - 01-16-2006, 10:59 AM
[No subject] - by sinnappu - 01-16-2006, 11:05 AM
[No subject] - by வர்ணன் - 01-16-2006, 11:27 AM
[No subject] - by நர்மதா - 01-18-2006, 07:41 PM
[No subject] - by kurukaalapoovan - 01-18-2006, 08:30 PM
[No subject] - by மேகநாதன் - 01-19-2006, 05:20 AM
[No subject] - by நர்மதா - 01-19-2006, 12:08 PM
[No subject] - by நர்மதா - 01-19-2006, 12:11 PM
[No subject] - by நர்மதா - 01-20-2006, 01:19 AM
[No subject] - by வர்ணன் - 01-20-2006, 05:48 AM
[No subject] - by RaMa - 01-20-2006, 06:23 AM
[No subject] - by தூயா - 01-20-2006, 06:32 AM
[No subject] - by Vishnu - 01-20-2006, 01:44 PM
[No subject] - by நர்மதா - 01-20-2006, 07:46 PM
[No subject] - by நர்மதா - 02-01-2006, 02:23 PM
[No subject] - by நர்மதா - 02-13-2006, 04:59 PM
[No subject] - by Niththila - 02-13-2006, 05:22 PM
[No subject] - by நர்மதா - 02-16-2006, 12:23 PM
[No subject] - by அருவி - 02-16-2006, 12:26 PM
[No subject] - by நர்மதா - 02-28-2006, 08:33 PM
[No subject] - by வர்ணன் - 03-01-2006, 02:13 AM
[No subject] - by Jenany - 03-02-2006, 02:33 PM
[No subject] - by I.V.Sasi - 03-04-2006, 12:04 AM
[No subject] - by நர்மதா - 03-12-2006, 04:16 PM
[No subject] - by மகேசன் - 03-13-2006, 09:56 AM
[No subject] - by வர்ணன் - 03-14-2006, 03:25 AM
[No subject] - by DV THAMILAN - 03-14-2006, 04:19 AM
[No subject] - by RaMa - 03-18-2006, 04:35 AM
[No subject] - by அனிதா - 03-19-2006, 08:19 PM
[No subject] - by நர்மதா - 04-15-2006, 01:15 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)