Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சதாம்.
#20
சதாம் கைது செய்யப்பட்டது பற்றி வந்த செய்திகள் உண்மையானவைதான் என்பது தற்போது தெளிவாகவுள்ளது. அனால் சதாம் கைது செய்யப்ப்பட்டமை அமரிக்காவிற்கு எந்த விதத்திலும் நன்மை அளிக்கப்போவதில்லை. இது ஒரு விளம்பரமாக இரக்குமே தவிர, அமரிக்கப்படைகள் மீதான கொரில்லா தாக்குதல்களை இது நிறுத்தப்போவதில்லை. அமரிக்கா மீது தற்போது தாக்குதல்களை நடாத்தி வரும் குழுக்களில் இரண்டு குழுக்களை தவிர சுமார் 15 அல்லது 16 குழுக்கள் தனிச்சையாக இயங்குபவை. இந்த குழுக்களில் பெரும்பான்மையானவை சதாமுக்கு எதிரானவை. எனவே சதாமின் கைது இவர்களுக்கு எதையும் செய்யப்போவதில்லை. அண்மையில் நடைபெந்ந தாக்தல்களின் அழுத்தங்களால்தான் ஈராக்கில் ஒரு தற்காலிக அரசை அமைக்க அமரிக்கா முன்வந்துள்ளது. இந்த கமிட்டியில் ஈராக்கியர்களின் பங்களிகப்பு அதிகமாக்கப்பட்டமைக்கு அண்மைய தாக்குதல்அழுத்தமே முக்கிய காரணங்கள். சதாம் நதியன் முன் நிறுத்தப்பட வேண்டிய ஒரு மனிதன். பல்லாயிரக்கணக்கான குர்திஸ் மற்றும் சியாற் முஸ்லீம்களை கொன்று குவித்த ஒரு மனிதன் நீதியின் மன் நிறுத்தப்பட வேண்டும். அமிரிக்கப் படைகளின் வெளியேற்ப் போராட்டத்தை சதாம் ஒரு போதும் நடாத்தவில்லை. சதாமின் பாத் கட்சி அமைப்பை சேர்ந்த இன்னுமொரு தலையே இந்த அமிரக்க எதிர்பு யுத்தத்தை தலை தாங்கி சௌ;கிறது. ஆனால் இந்த பாத் அமைப்பை விட அமரிக்க எதிர்ப்பு குழுக்கள் பல ஈihக் முழுவதும் பலமாக தற்போது முளை விட்டு வருகின்றனர். அண்மையில் ஈராக்கில் உள்ள அமரிக்க நிர்வாகம் ஈராக்கின் புதிய இராணுவத்திற்கு வளைத்துப் பிடித்து ஒரு 700 பேரை சேர்த்தனர், ஆனால் சில மாதங்களுக்குள் இதில் 300 பேர் சொல்லாமல் கொள்ளாமல் ஓடி விட்டனர். காரணம் ஒன்று பயம் இரண்டு குறைந்த சம்பளம். ஈராக்கில் உள்ள அமரிக்க துருப்பகள் தற்போது இந்த கொரில்லா தாக்குதலால் பயத்தில் இருப்பதால் மக்களை கடுமையாக நடாத்துகின்றனர். இதன் விளைவு தான் கூடிய கொரில்லா தாக்குதல்கள். சதாம் ஈராக்கிற்காக ஒரு போதும் சண்டை பிடிக்கவில்லை, மாறாக தனது பதவியை தக்கவைக்க உளவுப்படையை பலமாக்கி தனது சொந்த மக்களையே கொன்று குவித்தவர். இவர் தண்டிக்கபட வேண்டியவர் என இந்த கொரில்லா அமைப்புகளே கருத்து வெளியிட்டுள்ளது. ஆனால் சதாம் கைது தமது தாக்குதலை தடைசெய்யப்பேவதில்லை என்றும், அமிரக்க படைகள் வெளியேறும் வரை தாம் போராடப் போவதாகவும் இந்த அமைப்புகள் தெரிவித்துள்ளன. அமரிக்காவை பெறுத்தவரை வைத்த காலை எடுக்க முடியாத நிலை. அனால் சதாம கைதை சாட்டக வைத்து அமரிக்க தனது இழப்புகளை குறைக்க அடுத்த வருட மத்தியில் வெளியேறலாம் என எதிர் பாரக்கப்படுகிறது. ஆனால் அங்கு தனக்கு சார்பான ஒரு அரசை அமைக்காது வெளியேறுவது இந்த யுத்தத்தின் தேவையையே கேள்விக்குள்ளாக்கும். தனது நலன்களை குறிப்பாக எண்ணை வழத்தை கொள்ளையடிக்கும் நோக்குடன் ஈராக்கில் கால் பதித்த அமரிக்க இன்று இருதலைக் கொள்ளி எறும்பு நிiலையில். அனால் இதன்; காரண கார்தா சதாம் அல்ல. மாறக சதாம் கைது ஈராக் நாட்டிற்கு கடைத்த ஒரு சிறு சுதந்திரமே, ஆனால் அமரிக்க படைகள் வெளியேற்றமே அவர்களி;ன் நிரந்தர சுதந்திரமாகும். சதாம் நிரந்தரமாக கூண்டுக்குள் அடைக்கப்பட வேண்டிய ஒரு நபர்.
Reply


Messages In This Thread
சதாம். - by nalayiny - 12-14-2003, 12:57 PM
[No subject] - by nalayiny - 12-14-2003, 01:02 PM
[No subject] - by Paranee - 12-14-2003, 01:03 PM
[No subject] - by nalayiny - 12-14-2003, 01:14 PM
[No subject] - by Paranee - 12-14-2003, 01:22 PM
[No subject] - by anpagam - 12-14-2003, 04:07 PM
[No subject] - by yarl - 12-14-2003, 09:32 PM
[No subject] - by anpagam - 12-14-2003, 09:45 PM
[No subject] - by yarl - 12-14-2003, 09:53 PM
[No subject] - by vasisutha - 12-14-2003, 09:54 PM
[No subject] - by anpagam - 12-14-2003, 10:00 PM
[No subject] - by yarl - 12-14-2003, 10:09 PM
[No subject] - by anpagam - 12-14-2003, 10:40 PM
[No subject] - by shanmuhi - 12-14-2003, 10:53 PM
[No subject] - by anpagam - 12-14-2003, 11:06 PM
[No subject] - by Ilango - 12-14-2003, 11:22 PM
[No subject] - by kuruvikal - 12-14-2003, 11:37 PM
[No subject] - by Mathivathanan - 12-15-2003, 09:32 AM
[No subject] - by kuruvikal - 12-15-2003, 09:44 AM
[No subject] - by mohamed - 12-15-2003, 10:33 AM
[No subject] - by Paranee - 12-15-2003, 03:07 PM
[No subject] - by shanthy - 12-15-2003, 04:01 PM
[No subject] - by anpagam - 12-15-2003, 04:08 PM
[No subject] - by Paranee - 12-16-2003, 09:36 AM
[No subject] - by Paranee - 12-16-2003, 09:39 AM
[No subject] - by Mathivathanan - 12-16-2003, 10:27 AM
[No subject] - by mohamed - 12-16-2003, 10:51 AM
[No subject] - by mohamed - 12-16-2003, 11:02 AM
[No subject] - by sethu - 12-16-2003, 11:21 AM
[No subject] - by anpagam - 12-21-2003, 12:40 PM
[No subject] - by anpagam - 12-22-2003, 02:26 PM
[No subject] - by ganesh - 01-08-2004, 08:30 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)