12-15-2003, 09:44 AM
டிசம்பர் 15, 2003
8 அடி குழியில் பதுங்கியிருந்த சதாம் ஹூசேன்: ஒத்துழைக்க மறுக்கிறார்
பாக்தாத்:
ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேன் அவரது சொந்த ஊரான திக்ரித்தில் அமெரிக்கா படையினரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்தி வரும் அதிகாரிகளுக்கு அவர் பதில் சொல்ல மறுத்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
பூமிக்கு அடியில் எட்டு அடி பள்ளத்தில் ஆறு அடியே அகலம் கொண்ட ஒரு பள்ளத்தில் அவர் பதுங்கியிருந்தபோது அமெரிக்கப் படையினர் சுற்றி வளைத்துப் பிடித்தனர். அப்போது சதாம் உசேனும் எந்த வித எதிர்ப்பும் காட்டவில்லை என்று அமெரிக்கப் படையினர் தெரிவித்தனர்.
அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கொடுத்த தகவலின்பேரிலேயே அவர் கைது செய்யப்பட்டதாக அமெரிக்கப் படைகள் தெரிவித்துள்ளன.
தாடி, அழுக்கு உடைகளுடன் இருந்த அவரை மரபணு சோதனை மூலம் சதாம் உசேன்தான் என்பதை உறுதிப்படுத்தினர். அவர் இப்போது பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரி பால் பிரெமர் தெரிவித்துள்ளார்.
ஈராக்கில் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டு அவர் மீதான குற்றங்கள் குறித்து ஜெனீவா ஒப்பந்தப்படி, சர்வதேச போர்க் குற்ற விதிமுறைகளின் கீழ்÷ வழக்கு நடைபெறும் என அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் டொனால்ட் ரம்ஸ்பீல்ட் கூறியுள்ளார்.
இதற்கிடையே பிடிபட்ட சதாமை இப்போது பாக்தாத் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து அமெரிக்கப் படைகள் விசாரித்து வருகின்றன.
விசாரணைகளுக்கு அவர் சரியாக ஒத்துழைப்பு வழங்கவில்லை என அமெரிக்காவின் டைம்ஸ் வார இதழ் கூறியுள்ளது. விரைவில் வெளிவர உள்ள அந்த இதழில் சதாமுடன் விசாரணை நடத்தும் அதிகாரிகளின் பேட்டி இடம் பெறவுள்ளது.
இது குறித்து டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
பெரும்பாலான கேள்விகளுக்கு சதாம் நேரடியாக பதில் தரவில்லை. தங்களிடம் அணு ஆயுதங்களே இல்லை என்று கூறிவிட்ட சதாம், ஆயுதம் இருப்பதாக அமெரிக்கா தானாகவே கனவு கண்டு கொண்டு தாக்கியதாகக் கூறியுள்ளார்.
பிடிபட்டதால் வருத்தமா என்ற கேள்விக்கு, என் மக்கள் உங்களிடம் அடிமைப்பட்டுக் கிடப்பதால் வருத்தப்படுகிறேன் என்று பதில் தந்திருக்கிறார்.
அதே போல குடிக்கத் தண்ணீர் கொடுத்தபோது, இதைக் குடித்தால் நான் பாத்ரூம் செல்ல வேண்டும். என் மக்கள் உங்களிடம் அடிமையாகக் கிடக்கும்போது நான் உங்கள் பாத்ரூமை பயன்படுத்த வேண்டியிருக்கிறதே என சம்மந்தம் இல்லாமல் பதில் தந்துள்ளார்.
பல நேரங்களில் கேள்விகளுக்கு தொடர்பில்லாத பதில்களையே தந்து வருகிறார்.
என் தனிமையை, அதிபரின் தனிப்பட்ட உரிமைகளில் தலையிடுவதை நான் விரும்பவில்லை. இதனால் தான் ஐ.நா. அணு ஆயுத பார்வையாளர்களை நான் என் நாட்டுக்குள் அனுமதிக்க முதலில் மறுத்தேன் என்றும் கூறியுள்ளார் சதாம்.
Thanks thatstamil.com

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>