12-23-2005, 06:22 PM
Sukumaran Wrote:ஆம் நானும் ஏற்றுக்கொள்ளுகின்றேன்.. வருமானம் படுத்துவிடும்..
<span style='font-size:25pt;line-height:100%'>யாருடைய வருமானம்? </span>
தற்போது கொடுக்கப்பட்டுள்ள கொடுக்கப்பட்டுக்கொண்டிருக்கின்ற கொடுக்கப்படப்போகின்ற விலையைவிட அதிகமான வருமானமா?
தற்போது வரும் செய்திகளின் பிரகாரம் வருமானம் இல்லாமல் பொதுஉடைமையைவைத்தா போராடுகின்றீர்கள்..?
அல்லது உயர்மட்டத்தின் பிள்ளைகள் சொந்தக்காரர்கள் எல்லோரும் எந்தவிதஆதாயமுமின்றி அவர்களது பகுதியிலிருந்தா போராடுகின்றார்கள்?
அத்தனைபேரும் கனடா அவுஸ்திரேலியா சுவிற்ஸலாந்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தாய்லாந்த சிங்கப்பூர் என்று எத்தனையோ நாடுகளில் அத்தனை பாஷைகளையும் படித்து சுகபோகம் அனுபவிக்கின்றார்கள்..
உங்களில் எத்தனைபேர் இலங்கையில் இருக்கின்றீர்கள்..
சரி இலங்கைத் தீவில் இல்லை என்றபடியால் போராட்டத்திற்கு ஆதரவாக இருக்கக் கூடது. போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேணும் என்று காரணம் கூற வருகிறீர்களா?
ஒரு நாட்டின் தூதுவர்கள் பிற நாட்டில் உள்ளார்கள். தனியே ஒருவர் என்றில்லை அந்த அரசாங்கததை பல நிலையில் பிரதிநிதித்துவப்படுத்தும் பலவகையானவர்கள் வெளிநாடுகளில் தாய் நாட்டிற்காக சேவை செய்கிறார்கள். ஆனால் நாட்டில் ஒரு அவலம் அனர்த்தம் வரும் பொழுது அல்லது நாடு ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் இவர்கள் எல்லோரும் தங்கியிருக்கும் அந்தந்த நாட்டிலிருந்து தான் தமது பங்களிப்புகளை காலத்தின் தேவைக் கேற்ப நல்குறார்கள். அதைவிட்டுட்டு எல்லோரும் தாய்நாட்டுக்கு ஓடிப்போக வேண்டும் இல்லாவிட்டால் அவர்கள் தமது தாய் நாட்டிற்கு சேவை செய்யும் அருகதை அற்றவர்களாகிவிடுவார்களா?
இஸ்ரேலின் போராட்டத்தில் கூட புலம் பெயர்ந்த யூதர்களின் பங்களிப்பு முக்கியமானது என்பது வரலாறு. புலம்பெயர்ந்திருந்த யூதர் தாம் போராட்டத்தை ஆதரிக்கும் அருகதை அற்றவர்கள் என்ற நிலைப்பாட்டோடு இருக்கவில்லையே.

