12-23-2005, 05:04 PM
சுகுமாரன் மற்றும்வசம்பு
நீங்கள் கூறுவது மிகவும் சரி
இலங்கை சுதந்திரம் பெற்ற காலத்தில் தமிழர்களுக்குத் தலைவர்களாக இருந்தவர்களைப் பற்றி நிறைய விமர்சனங்கள் உண்டு என்றாலும் நீங்கள் சொல்லும் அவர்கள் அகிம்சையில் நம்பிக்கையுள்ளவர்கள் என்ற கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.அவர்களது போராட்டம் லங்கை இனவாத அரசால் எப்படி எதிர்கொள்ளப்பட்டது என்று படித்திருக்கிறீர்களா
தந்தை செல்வா முதலான தலைவர்கள் காலைமுகத்திடலில் சத்தியாக்கிரகப் போராட்டம் நடத்தியபோது சிங்கள அரசு குண்டர்களையும்காவல்துறையையும் ஏவிவிட்டு அவர்களைத் தாக்கியது.
இரத்தக் காயங்களுடன் அவர்கள் பாராளுமன்றம் போனபோது சிங்கள இனவாதத் தலைவர்கள் தமிழ்த் தலைவர்களுடைய காயங்களை விழுப்புண்கள் என்று எள்ளி நகையாடினார்கள்.
இப்போது உங்களிடமொரு கேள்வி.காந்தி மீது இந்தியாவில் வெள்ளையர்கள் ஒரு சிறு துரும்பையாவது எடுத்துப் போட்டிருப்பார்களா.காந்திமீது சிறு இரத்தக் காயம் ஏற்பட்டதை உங்களால் ஆதாரத்துடன் கூற முடியுமா இல்லை.ஏனென்றால் காந்தியின் போராட்டத்தைப் பொறுத்தளவில் ஆங்கிலேய அரசு கனவான் தனமாக நடந்துகொண்டது.(இதை நான் படித்ததன் அடிப்படையில் எழுதுகிறேன் தவறாக இருந்தால் குறிப்பிடுங்கள்)
அவ்வப்போது சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டவர்கள் தாக்கப்பட்ட போதும் காந்தி மீது சிறு கீறல் கூட விழாமல் நடந்துகொண்டார்கள்.ஆனால் சிங்கள அரசு அப்படி நடக்கவில்லை.
தங்களுக்கு முன்பிருந்த தமிழ்த்தலைவர்கள் காட்டுமிராண்டித்தனமாக தாக்கப்பட்டதைத் தொடர்ந்து பின்னால் வந்த இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தை தெரிவு செய்தார்கள்.
அதேபோன்று ஈழப்போராட்டமும் எடுத்த எடுப்பில் தனிநாடு என்ற கோரிக்கையை முன்வைக்கவில்லை.அரசியல் யாப்புச் சீர்திருத்தத்திலிருந்து சமஷ்டி,கூடாட்சி என்று பல்வேறு கோரிக்கைகளின் தோல்வியைத் தொடர்ந்து ஈழமே இறுதித்தீர்வு என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது.
காந்தீய வழியில் எனக்கு மரியாதை உண்டு ஆனால் அது இலங்கையில் செல்லுபடியாகும் என்ற நம்பிக்கையில்லை

\" \"