12-14-2003, 11:37 PM
இப்ப கேள்வி பிடிப்பட்டது சதாமோ அல்லது சதாமின் டுப்பிளிகற்றா...கைத்துப்பாக்கி இருந்தும் சுட்டுக் கொள்ளவில்லையாம்...இவர்களிடம் பிடிப்பட்டால் என்னாகும் என்று உண்மையான சதாம் தெரியாமலா பிடிபட்டிருப்பார்... அவருடைய பிள்ளைகளே பிடிபடாமல் இறக்கும் போது இவர் மட்டும் ஏன் பிடிப்பட்டார்...?! அதன் பின்னணி என்ன...?! சதாம் பிடிபட்ட பின்னும் பக்தாத்தில் வன்முறை தொடர்கிறது....!
அப்போ சதாம் இல்லாமலே வேறு எவரேனும் அமெரிக்கப்படைகளை ஆட்டிப்படைக்கும் தகுதியுடனே இருக்கின்றார்களா...???? அப்படி இருந்தால் அவர்கள் தான் அமெரிக்காவின் தற்போதைய எதிரிகள்...! அல்லது இது அமெரிக்க படையினருக்கு ஊக்கமருந்து கொடுக்கும் திட்டமா....?!
கொஞ்சம் பொறுத்திருப்போமே....உண்மை தெளிவாகும் வரை....!
=====================================
சதாம் உசேன் கைது செய்யப்பட்டார்!
ஞாயிறு, 14 டிசம்பர் 2003
அமெரிக்கப் படைகளிடம் ஈராக் வீழ்ந்ததையடுத்து கடந்த 8 மாதங்களாக தலைமறைவாக இருந்து வந்த ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேனை அமெரிக்கப் படைகள் கைது செய்துவிட்டன!
சதாமின் சொந்த ஊர் என்று கூறப்படும் திக்ரித் அருகே உள்ள ஒரு இடத்தில் காகித கடை ஒன்றில் அமைக்கப்பட்டிருந்த ரகசிய பதுங்கு குழியில் அமர்ந்திருந்த சதாமை அமெரிக்கப் படைகள் நேற்று இரவு ஈராக் நேரப்படி 8 மணியளவில் கைது செய்ததாக அமெரிக்க தளபதி பாக்தாத்தில் இன்று அறிவித்தார்.
தலை கலைந்து, தாடி வளர்ந்து காணப்பட்ட சதாம் உசேனுக்கு மருத்துவ சோதனை செய்வது போன்ற படக்காட்சியை அமெரிக்கா எடுத்து தொலைக்காட்சியின் வாயிலாக ஒளிபரப்பியது.
பிடிபட்டவர் சதாம் உசேன்தான் என்பதனை திசு ஆராய்ச்சியின் மூலம் உறுதி செய்ததாக ஈராக்கின் ஆட்சியாளராக அமர்த்தப்பட்டுள்ள பால் ப்ரீமர் செய்தியாளர்களிடம் கூறினார். சதாம் உசேனுடன் மேலும் இருவர் கைது செய்யப்பட்டதாகவும், கூறிய அமெரிக்க தளபதி, அவர்கள் யார் என்பதை தெரிவிக்க மறுத்துவிட்டார்.
சதாம் உசேன் மீது போர் குற்ற வழக்கு தொடரப்பட்டு வெளிப்படையான விசாரணை நடத்தப்படும் என்று கூறிய அமெரிக்க நிர்வாகி பால் ப்ரீமர், தற்பொழுது சதாம் உசேன் எங்கே வைக்கப்பட்டிருக்கின்றார் என்கின்ற தகவலை தெரிவிக்க மறுத்துவிட்டார்.
தாங்கள் நடத்திய விசாரணையின்போது எதையும் மறைக்காமல் சதாம் உசேன் சுதந்திரமாக பதிலளித்ததாக அமெரிக்க தளபதி தெரிவித்தார்.
----------------------------
Thanks webulagam.com

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>