12-23-2005, 01:50 PM
அண்ணா நாரதரே.. உங்களுடைய தொடுப்பை பொறுமையாக வாசித்து நீங்கள் கேட்ட கேள்விகளுக்கு பொறுமையாகப்பதிலளித்திருந்தேன்.. அதை நான் ஒருபொழுதும் பொய்யென்ற சொல்லவில்லை..
தற்போது எனது கருத்துக்களுக்கான ஆதாரத்தை முன்வைத்திருக்கிறேன்.. ஆகையால் தயைசெய்து எனது கருத்துக்கான ஆதாரத்தை கருத்திலெடுத்து வாசித்து நான் முரணாக எழுதியிருந்தால் சுட்டிக்காட்டுங்கள்..
தற்போது எனது கருத்துக்களுக்கான ஆதாரத்தை முன்வைத்திருக்கிறேன்.. ஆகையால் தயைசெய்து எனது கருத்துக்கான ஆதாரத்தை கருத்திலெடுத்து வாசித்து நான் முரணாக எழுதியிருந்தால் சுட்டிக்காட்டுங்கள்..
narathar Wrote:சுகுமாரன்,
உமக்கு சில கேள்விகள்,
தமிழ்த்தலைவர்கள் செல்வனாயகம் முதல் அமிர்தலிங்கம் வரை காந்திய வழியில் போராடி எதனைப் பெற்றுத் தந்துள்ளனர். நீர் உமது கருத்தாக இப்பொழுது என்னத்தைச் சொல்ல வருகிறீர்.என்பதை வெளிப்படயாக எழுதவவும்.காந்திய வழியில் ஊர்வலாமாகச் சென்ற யாழ்த் துணை வேந்தர் முதலானோர் எவ்வாறு இராணுவத்தால் அடிது விரட்டப்பட்டனர் என்பது எல்லாரும் அறிந்த இன்றும் நிதர்சனமான செய்தி.
உமக்கு ஏற்கனவே பல இணைப்புக்களை வழங்கி விட்டேன்,எவ்வாறு வெள்ளயருக்கு வசதியான சமரசப் போக்குடய காந்தியை வெள்ளயர் இந்தியாவின் தந்தை ஆக்கினர் என்பதை.இன்று இந்தியாவிலேயே சரித்திர ஆசிரியர்கள் இவ்வாறு வெள்ளயராலும், அவர் தம் அடிவருடிகளாலும் எழுதப் பட்ட இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றை ஆதாரங்களுடன் திருத்தி எழுதி இருந்தனர்.முக்கியமாக அன்றய பிரித்தானியப் பாராளுமன்றத்தில் தாம் இந்தியாவில் இருந்து வெளியேறுவதற்கான பிருத்தானிய பிரதமரின் பேச்சையும் அங்கு நடை பெற்ற விவாதத்தின் தமிழ் மொழி பெயர்ப்பையும் போட்டிருந்தேன்.
அதற்குப் பதில் அழிகாமல் இப்போது திருப்பியும் வரலாற்றுப் பொய்களை இங்கே இட்டு உள்ளீர்.உமது நோக்கம் தான் என்ன?
ஒரு பொய்யைத் திருப்பித் திருப்பி எழுதுவதால் அது மெய் ஆகி விடுமா?
8

