12-22-2005, 08:11 PM
உரும்பிராயிலும் வீடுவீடாகச் சென்று பலரைச் சுடடுக்கொன்றார்கள். எமக்குத் தெரிந்த நண்பர் ஒருவரின் தாய், தாயின் தாயார் (வயது எண்பது, கண் பார்வை தெரியாமல் படுக்கையிலே இருந்தவர்), வீட்டில் நின்ற இன்னும் சில பெண்கள் அத்தனைபேரையும் சுட்டுக் கொன்றார்கள்.
இன்னும் ஒரு நண்பரின் அண்ணரின் பிள்ளைகள் மூவர்( 16, 18, 20 வயதினர்) அனைவரையும் அதிகாலை 4 மணியளவில் சென்று எழும்பி வெளியே வரும்படி கூறினார்கள். அவர் அரைத்து}க்கத்துடன் வெளியே வந்தபோது அவ்விடத்தில் வைத்து ஈவிரக்கமில்லாமல் சுட்டுக்கொன்றனர். தாயார் தப்பிவிட்டார். வெளியுூரில் இருந்த தந்தையார் இதனை அறிந்து சென்றபோது அனைவரையும் புதைத்துவிட்டார்கள். தந்தையார் பிள்ளைகளின் முகங்களையாவது பார்க்கவேண்டும் என்று அவர்களது வளவிற்குள்ளேயே புதைத்திருந்த புதைகுழிகளைத் தோண்டி அழுகிய நிலையில் இருந்த அவர்களின் முகங்களைப் பார்த்தார். பிள்ளைகள் அனைவரையும் இழந்த அந்தத் தாயையும், தந்தையையும் இப்போது எண்ணினாலும் கண்களில் ஆறு ஓடும்.
இப்படி எத்தனையோ அநியாயங்களை இந்திய இராணுவம் செய்தது.
இவர்கள் தாங்கள் இப்படிச்செய்தோம் என்பதை ஒத்துக்கொண்டால்தானே மன்னிப்புக்கேட்பதற்கு.
ஓர் எழுச்சிப்பாடல் ஒன்றில் "இங்குள்ள பேய்களும் செய்யமுடியாத காரியங்களை இந்திய இராணுவம் செய்தது" என்ற கருத்துப்பட ஓர் அடி வருகின்றது. இந்தக் கட்டுரையை வாசித்ததும் அது அடிக்கடி மனதில் வருகின்றது.