Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வாழ்த்துக்கள் சாPஸ்
#1
தொடர்ச்சியாக எழுதிக்கொண்டதால் தொகுப்பாக வாழ்த்துக்கள


கண்மணிக்குள் ஒரு காதல் மூலம் எம் கண்விழிக்குள் நுழைந்த கவிஞனிற்கு வாழ்த்துக்கள்

வசியக்காரியை எம் வசமாக்கியதற்கு நன்றிகள்

காதல் அதை கனியச்செய்யவா நீ பிறந்தாய்
காதல் அதை காவியமாக்கவா நீ ஜெனித்தாய்
காதல் அதன் கரைதேடவா நீ எழுந்தாய்
காதல் அதன் ஆழம் அறியவா நீ வீழ்ந்தாய்

அருமையான வார்த்தைப்பிரயோகம்
அருமையான கற்பனை
அருமையான சங்கிலிக்கேர்வையாய் கவிதைகள்

வாழ்த்துக்கள் சாPஸ்

யாழ் களத்தின் கனத்தை ஏற்றி களத்தில் காதல் வாசம் சேர்த்து எம் மனமெங்கும் மையல்கொண்டுவிட்டீர்கள். தொடருங்கள்
நில்லாமல் வா நிலாவை நான் இரவெங்கும் தேடுகின்றேன். இன்றுவரை ஏமாற்றம்தான்
எங்கு சென்றாள் அந்த கருப்பு நிலா !
எங்கு சென்றாள் அந்த மௌனதேவதை
எங்கு சென்றாள் அந்த கவி தந்த காரிகை

தேடித்தாருங்கள்

இன்னமும் எழுதிக்கொள்ள வாழ்த்துக்களுடன்

நட்புடன்
ந.பரணீதரன்
[b] ?
Reply


Messages In This Thread
வாழ்த்துக்கள் சாPஸ் - by Paranee - 12-13-2003, 08:53 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)