Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இராணுவம்-புலிகள் பேச்சு தேவையில்லை: மகிந்த ராஜபக்ச
#1
இராணுவம்-புலிகள் பேச்சு தேவையில்லை: மகிந்த ராஜபக்ச
[வியாழக்கிழமை, 22 டிசெம்பர் 2005, 06:46 ஈழம்] [ச.விமலராஜா]
சிறிலங்கா இராணுவமும் தமிழீழ விடுதலைப் புலிகளும் பேச்சுகள் நடத்த வேண்டிய தேவையில்லை என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.


தம்மைச் சந்தித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம் மகிந்த ராஜபக்ச இதைத் தெரிவித்துள்ளார்.

சமாதானப் பேச்சுவார்த்தையினை தொடங்க தாம் தயார் என்றும் கிளிநொச்சிக்கு சென்று விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனை சந்தித்துப்பே தயார் அதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒத்துழைக்க வேண்டும் என்றும் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மேலும் புலிகளும் இராணுவத்தினருடன் பேச வேண்டிய அவசியமில்லை. அரசியல்வாதிகளான நாம் அது குறித்து பேச்சு நடத்துவோம் என்றும் மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.

இச்சந்திப்பில் பங்கேற்ற சிறிலங்கா இராணுவ தளபதி பொன்சேகா தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற அமைதிப் பேரணியில் மூன்றாவது சக்தி ஒன்று தலையிட்டு வன்முறையில் ஈடுபட்டதால் இராணுவம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க நேரிட்டது என்றும் மூன்றாவது சக்திக்கு எதிராக சிறிலங்கா இராணுவம் என்ன நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன என்றும் விளக்கியுள்ளார்.

ஆனால் பொன்சேகாவின் இந்தக் கருத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நிராகரித்தனர்.


puthinam
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
இராணுவம்-புலிகள் பேச்சு தேவையில்லை: மகிந்த ராஜபக்ச - by Vaanampaadi - 12-22-2005, 11:27 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)