Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அபாயம்
#6
தமிழர் - முஸ்லிம்கள் ஒற்றுமை
11-12-2003 - உதயன்


இப்போது யுத்தம் இல்லைத்தான்இ என்றாலும் மக்களில் ஒரு பகுதியினர் அச்சம்இ பீதி எதுவுமின்றி நிம்மதியாக வாழக்கூடிய நிலை இல்லை. குறிப்பாகஇ கிழக்கு மாகாண மக்களுக்கு அவர்களிலும் தமிழ்இ முஸ்லிம் மக்களுக்கு அந்தத் துர்ப்பாக்கியம். கிழக்கிலும் திருகோணமலைஇ மூதூர்இ கிண்ணியாப் பகுதிகளில் நிலைமை மோசம்இ அங்கே அடிக்கடி வன்செயல்கள் வெடிக்கின்றன. கோரக் கொலைகள்இ குத்து வெட்டுகள்இ குண்டு வெடிப்புகள் அபரிமிதமாக நடக்கின்றன.

தமிழ்இ முஸ்லிம் மக்களிடையே பன்னெடுங்காலமாக இருந்து வரும் நல்லுறவுஇ அன்னியோன்யம்இ பந்தபாசம்இ சிநேகம் எல்லாவற்றையும் நொடிப்பொழுதில் பொடிப் பொடியாக்கும் வகையிலான அநாகரிக அடாவடித்தனங்கள் அவை. அவற்றைக் கட்டவீழ்த்து விட்டவர்கள் யார்? விடுதலைப் புலிகள் என்று அவர்கள் மீது குற்றஞ்சாட்டினார்கள் ஒரு பகுதியினர்.பாதுகாப்புப் படையினரே அதை மறுத்துவிட்டனர். அவர்களை அந்தக் குற்றச்சாட்டிலிருந்து விடுவித்து விட்டனர். தீய சக்திகள்தான் வன்செயல்களில் ஈடுபடுகின்றன என்று இன்;னொரு பகுதியினர் கூறுகின்றார்கள். தீய சக்திகள் என்றால் அவற்றை அரசும் விடுதலைப் புலிகளும் இனங்காட்ட வேண்டும் என்கிறார் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரான அமைச்சர் ரவூப் ஹக்கீம். சும்மா தீயசக்திகளின் தலையில் போட்டுவிட்டு அரசும் புலிகளும் நழுவ முயற்சி செய்யக்கூடாது என்று அவர் மேலும் கூறுகிறார்.

இந்த நிலையில்தான் ரெலோ முதல்வரான சட்டத்தரணி ஸ்ரீகாந்தாஇ அசம்பாவிதங்களின் பின்னணியில் வெளிநாடு ஒன்று செயற்படுகிறதா என்ற சந்தேகத்தை எழுப்பியிருக்கிறார். இலங்கை விவகாரம் குறித்து இலங்கையின் அரசியல்வாதிகள் இந்தியாவில் தீவிர பிரசாரம் செய்துவரும் இவ் வேளையில் அசம்பாவிதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார். அது பற்றிக் கடந்த சனிக்கிழமை குறிப்பிட்டிருந்தோம்.

இப்போது திருகோணமலைப் பகுதி அசம்பாவிதங்கள் பற்றி திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழர் விடுதலைக் கூட்டணிச் செயலாளர் நாயகமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றக் குழுத்தலைவருமான இரா.சம்பந்தன் காத்திரமான சில கருத்துக்களைத் தெரிவித்திருக்கிறார்.

கிண்ணியாவில் ஏற்பட்ட பதற்றநிலை காரணமாக இடம்பெயர்ந்து ஈச்சந்தீவு விபுலானந்தா வித்தியாலயத்தில் அகதிகளாகத் தஞ்சமடைந்த மக்களைச் சம்பந்தன் எம்.பியும் துரைரத்தினசிங்கம் எம்.பியும் கடந்த ஞாயிற்றுக்கிழமை போய்ப் பார்த்தனர். அகதிகளுக்கு ஆறுதல் கூறித் தெம்பூட்டினார்கள். அப்போது சம்பந்தன் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் பயணத்துக்கு தமிழ் - முஸ்லிம் ஐக்கியம் ஆணி வேர் என்று அறிவுறுத்தினார்.

இரா.சம்பந்தன் மேலும் கூறுகையில்-
"தமிழ்இ முஸ்லிம் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த சில சக்திகள் முயற்சி செய்கின்றன. தமிழ் பேசும் மக்களுக்குக் கௌரவமான தீர்வு கிடைப்பதை சிஹல உறுமயக் கட்சி விரும்பவில்லை. தமிழ் பேசும் மக்களின் கைகளுக்கு அதிகாரம் வருவதை அந்தக் கட்சி அடியோடு விரும்பவில்லை. அதிகாரம் கிடைப்பதைக் குழப்பிவிடும் சிஹல உறுமயஇ ஜே.வி.பி. போன்ற கட்சிகளின் முயற்சிக்கு தமிழ் பேசும் இனத்தைச் சேர்ந்த எவரும் உடந்தையாக இருக்கமுடியாது" - என்றார். வன்செயல்களால் தனியாகத் தமிழர்களோஇ முஸ்லிம்களோ அல்லர்இ இரு இனத்தவர்களுமே பாதிக்கப்படுவதால் இருசாராரும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.

இனவாரியாக கிழக்கு மாகாண மக்கள் எண்ணிக்கையையும் சம்பந்தன் எடுத்துக்காட்டி ஓர் எச்சரிக்கை விடுத்தார். "1981 இன் உத்தியோகபூர்வ ஆள் கணக்கெடுப்பின்படி கிழக்கு மாகாண மக்களில் 75 சதவீதமானோர் தமிழ் பேசும் மக்கள். அதாவதுஇ 42 சதவீதம் தமிழர்கள். 32 சதவீதம் முஸ்லிம்கள். இவர்கள் தவிரச் சிங்களவர்கள் 25 சதவீதம். இந்தநிலையில்இ தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் பிரிந்து வாழவே கூடாது|| - இப்படி அவர் கூறினார்.

அரசுகளின் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களால் சிங்கள மக்களின் விகிதாசாரம் அதிகரித்துள்ள போதிலும் கூட்டாக தமிழ் - முஸ்லிம் மக்களே அங்கு பெரும்பான்மையினர். திருகோணமலை மாவட்டத்தைப் பொறுத்தவரையில் தமிழ்இ முஸ்லிம்இ சிங்களம் ஆகிய மூன்று இனத்தவர்களின் விகிதாசாரத்திலும் அதிக ஏற்றத்தாழ்வு இல்லை. தமிழ்இ முஸ்லிம் மக்கள் ஒன்றுபட்டு நின்றால் ஆட்சி அதிகாரம் சிங்கள மக்கள் கையில் இருந்தாலும் அவர்களால் தாம் நினைத்தபடி எல்லாம் செய்யமுடியாது. திருகோணமலை புதிய சந்தை கட்டிமுடிந்து வருடக் கணக்காகியும் கட்டடம் இன்னும் திறக்கப்படாமல் இருப்பதை தமிழ்இ முஸ்லிம் மக்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.

தமிழர்களையும் முஸ்லிம்களையும் பிரித்துவைத்து அவர்களிடையே பரஸ்பர சந்தேகத்தையும் பகையையும் ஏற்படுத்த முனைந்திருக்கும் உள்ளுர் சக்திகளுக்கு வெளிச் சக்திகள் உற்சாகமும் உதவியும் அளித்தால் எப்படி இருக்கும்? வன்செயல்கள் ஓயுமா? சமாதானம் ஏற்படுமா? சமூக ஒற்றுமை மலருமா? நல்வாழ்வு கிட்டுமா? அனைவரும் சிந்திக்க வேண்டிய விடயம் இது.

நன்றி: உதயன்
Reply


Messages In This Thread
அபாயம் - by sethu - 12-02-2003, 09:27 PM
[No subject] - by anpagam - 12-03-2003, 12:05 AM
[No subject] - by anpagam - 12-03-2003, 12:17 AM
[No subject] - by anpagam - 12-07-2003, 01:12 PM
[No subject] - by anpagam - 12-09-2003, 01:09 PM
[No subject] - by anpagam - 12-13-2003, 12:10 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)