12-21-2005, 04:24 PM
புலிகளின் சர்வதேச நிதிப் பிரிவுத் தலைவர் லண்டனில் புலிகளால் சுட்டுக் கொலை எனும் தலைப்பில் சிறீலங்காவிலிருந்து வெளிவரும் லங்காதீப பத்திரிகையின் செய்தி தினக்குரல் பகுதியல் காணக் கிடைத்தது.
இதுபோன்ற பொய்யான செய்திகளை இலங்கை தமிழ் பத்திரிகைகளிலும் வந்துள்ளதாக குடும்பத்தினர் கூறினர்.
கொலை தொடர்பான விசாரணைகள் தற்போது இன்டர்போல் வசம் கையளிக்கப்பட்டுள்ளது.
டக்ளஸின் உடலை இலங்கை வவுனியாவுக்கு கொண்டு செல்ல இன்னும் லண்டன் போலீசார் அனுமதியளிக்கவில்லை.
இருப்பினும் நெருங்கிய சிலருக்கு உடலை பார்வையிட அனுமதியளித்த போது அதைவிட கூடுதலானவர்கள் வைத்தியசாலைக்கு போய் அசெளரியங்களை அங்கு உண்டாக்கியதால் யாரையும் அனுமதிப்பதில்லை எனும் முடிவுக்கு போலீசார் வந்துள்ளனர்.
தவிர
இலங்கையின் பத்திரிகைகளில் வந்த செய்திகள் காரணமாக உடலை வவுனியாவுக்கு கொண்டு செல்வதை விட லண்டனிலேயே ஈமக்கிரிகைகளை செய்யலாம் எனும் நிலைக்கு குடும்பத்தினர் தள்ளப்பட்டுள்ளனர்.
பெற்றோர்களுக்கு லண்டன் வர போலீசார் அனுமதிக்கலாம் எனத் தெரிகிறது.
<b>இதோ அந்த தவறான செய்தி</b>:
http://www.thinakural.com/New%20web%20site...20/Shinhala.htm

Quote:புலிகளின் சர்வதேச நிதிப் பிரிவுத் தலைவர் லண்டனில் புலிகளால் சுட்டுக் கொலை
விடுதலைப்புலிகள் அமைப்பின் சர்வதேச நிதிப் பிரிவின் தலைவர் எனத் தெரிவிக்கப்படும் யோகராஜா டக்ளஸ் எனப்படும் நபர் லண்டன் நகரில் இனம் தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இந்தச் சூட்டுக் கொலைச்சம்பவம் கடந்த 12 ஆம் திகதி நிகழ்ந்துள்ளதாகவும், கொலை செய்யப்பட்ட யோகராஜா டக்ளஸ் 28 வயதுடைய நபர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவல் ஷ்ரீலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவின் செய்தி வட்டாரம் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.
மேற்படி யோகராஜா புலிகள் இயக்கத்தின் சர்வதேச நிதிப் பிரிவின் தலைவராக கடந்த எட்டு வருடங்களுக்கு மேலாக செயற்பட்டு உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் விடுதலைப்புலிகள் அமைப்புக்குக் கிடைத்து வந்த உதவி நிதிகளை நிர்வகிக்கும் நிதித் தலைவர் பொறுப்பிலிருந்து வந்தார் எனவும், மேலும் இவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், புலிகள் இயக்க புலனாய்வுப் பிரிவின் தலைவர் பொட்டுஅம்மான் மற்றும் புலிகள் இயக்க பேச்சாளர் அன்டன் பாலசிங்கம் ஆகியோருடன் மிக நெருங்கிய தொடர்பும் நட்பும் கொண்டவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயினும், இவர் புலிகள் இயக்கத்தின் சர்வதேச நிதி நிர்வாக விடயத்தில் செய்துள்ள மோசடி காரணமாகவே புலிகள் இயக்க உறுப்பினர்கள் அடங்கிய குழு ஒன்றினால் சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளதாக இராணுவப் புலனாய்வுத் துறை குறிப்பிட்டுள்ளது.
மேற்படி யோகராஜா டக்ளஸ் வவுனியா பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். சுட்டுக் கொல்லப்பட்டிருக்கும் இவரது உடலை ஈமக்கிரியைகளுக்காக ஷ்ரீலங்காவுக்கு எடுத்து வருவதற்கான ஏற்பாடுகளை அவருடைய உறவினர்கள் செய்திருந்தார்கள் எனத் தகவல் கிடைத்துள்ளதாக இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். மேலும் இந்தக் கொலை சம்பந்தப்பட்ட மேலதிக விசாரணைகளை புலனாய்வுத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
-லங்காதீப:17.12.2005-
http://www.thinakural.com/New%20web%20site...20/Shinhala.htm