12-12-2003, 04:12 PM
அற்புத காதல் கவிதை. ஓரிடத்தில் கோபக்கனல் எழுந்தாலும் காதல் வாழ்வது இதனால் தானோ. யாருமே இதுவரை காதலை( காதலியை) அழகு செய்திராத பதிய வாற்தைகள்.நல்லொரு அற்புத கவிஞன் . யாழ் களத்திற்குத்தான் அத்தனை பெருமையும்.என்மனதில் இடம்பிடித்துக்கொண்ட வாற்தைப்படிமங்களை தொகுத்தெடுத்துள்ளேன். பாராட்டுக்கள்.
sharish Wrote:[b][size=18]வசியக்காரி..பகுதி-7
காலங்கள்...
எவ்வளவுதான் கடந்துபோனாலும்
என்றும் என்
கல்லறைக்குள்ளிருந்து
ஒரு குரல்
கேட்டுக்கொண்டே இருக்கும்
""நான் உன்னைக் காதலிக்கிறேன்""
யாராவது
என் கல்லறையைக்காட்டி
இவன் ஏன் இறந்தான்
எனக்கேட்டால்....
காதலியே...
நீ
அவர்களின்
அறியாமையை விளக்கு...
இவன் இறக்கவில்லை
என்னைக்
காதலித்துக்கொண்டிருக்கிறான்...!!!
போகிறேன்
என்று என்னிடம் சொல்லாதே...!
போய் வருகிறேன்
என்றும்
என்னிடம் சொல்லாதே....!
நீ வரும்போது
யார்
உயிரோடு இருப்பார்களோ...
அவர்களிடம்
சொல்லிவிட்டுப் போ...!!!
நான்
ஒரு பாடகனாக
இருந்திருந்தால்
நீ பிரிந்த மறுகணமே
பாடுவதை நிறுத்தியிருப்பேன்...!
ஆனால்
நான்
ஒரு கவிஞனாயிற்றே
கவலையை போக்க...
வேறு வழிதெரியவில்லை
அதனால்தான்
எழுதுகிறேன்...!
சொல்லாமலே செல்கிறாய்
என்னை
கண்டுகொள்ளவில்லை...!
நில்லாமலே
மழையில் நனைந்து
அழுதுகொண்டே அலைகிறேன்
உன்னைப்போல்...
யாருமே
கண்டுகொள்ளவில்லை..!
மூங்கில்காடு
தானாகத் தீப்பிடித்து எரிகிறது
நீ
புல்லாங்குளல் வாசிக்க
வராததால்..!
பெய்த மழை...
மேல்நோக்கி எழுகிறது
நனைய...
நீ வராததால்...!
(இன்னும் வரும்..)
த.சரீஷ்
10.12.2003 (பாரீஸ்)
[b]Nalayiny Thamaraichselvan

