12-21-2005, 01:27 PM
<b>வரலாற்றில் இடம்பெறும் தவறுகளை நேர்மையான முறையில் சுட்டிக் காட்டுவது வரவேற்கத் தக்கதே. தவறைத் தவறென ஏற்றுக் கொள்ளும் போதுதான் அங்கு சரியானதொரு தீர்விற்கு வழி கோலுகின்றோம். ஒருவர் தனது நடுநிலைமையான கருத்தை இங்கு வைக்கும் போது அவரைத் துரோகி என்றோ அல்லது தாய் நாட்டையே காட்டிக் கொடுப்பவன் என்றோ சொல்வது தவறு. அவரது கருத்தில் தவறுகள் இருந்தால் அதைக் கௌரவமாகச் சுட்டிக் காட்டலாம். இங்கு வானம்பாடியினால் தரப்பட்டவை ஏற்கனவே வேறு இடங்களிலும் என்னால் வாசிக்கப் பட்டிருக்கின்றன. உண்மையில் வேண்டாத உயிரிழப்புகளை இந்தியா தடுக்க வேண்டுமாயின் ஐ.நாவுடன் இணைந்து காஷ்மீர் மக்களிடம் ஒரு நியாயமான வாக்கெடுப்பை நடாத்தி அவர்கள் இந்தியாவுடனா அல்லது பாகிஸ்தானுடனா இணைய விரும்புகின்றார்கள் என்பதை அவர்களே தீர்மானிக்க விடுவதே புத்திசாலித்தனம். இந்தியாவின் ஒரு நலன் விரும்பியாகவே எனது இந்தக் கருத்தை இங்கே முன்வைக்கின்றேனே தவிர இந்தியாவின் உள்விடயங்களில் கருத்துக் கூறுபவனாக அல்ல.</b>

