Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஏன் தயக்கம்?
#7
நன்றி...........

[quote]நானும் பலசமயங்களில் பலதை இளந்ததுண்டு.
எங்கே பார்ப்போம் இனியாவது மனவலிமையோடு நினைப்பதை முடிக்கின்றேனா என.

[size=15]இப்படிக் கூட சந்தேகம் கூடாது.
முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை.

மற்றவருக்கு உள்ள திறமைகள் நமக்குள் இல்லாமல் இருக்கலாம்.
ஆனால்
நமக்குள் இருக்கும் திறமைகள் மற்றவர்களுக்கு இருக்காது.

முதலில் நமக்குள் இருக்கும் திறமையை புரிந்து கொண்டால்
நம்மால் நடைபோட முடியும்.

ஒன்றை மட்டும் சொல்வேன்.
எவர் ஒருவர் ஒருவரது மனதை தளும்படிக்க வார்த்தைகளைக் கொட்டுகிறாரோ
அவரை கொஞ்சம் தள்ளியே வையுங்கள்.

நல்லவையை விட கெடுதல்கள்
மனதை உறுத்துவது அதிகம்.

ஒருவரோடு இன்னொருவரை ஒப்பிட்டுப் பார்க்கப் போகக் கூடாது.

உதாரணமாக எனக்கு கவிதை வராது.
ஆனால்
என்னால் ஓரளவு கதை எழுத முடியும்.
நான் ஏன் கவிதைக்குள் போய் காலத்தை விரயமாக்க வேண்டும்.
இன்னொருவரது கவிதையை ஆசையோடு படிக்கலாம்.
என்னால் கவிதை எழுத முடியவில்லையே என அவர் மேல் காழ்புணர்ச்சி கொள்ளத் தேவையில்லை.

இது முதலில் கோபத்தையும் எரிச்சலையும்
பின்னர் மனஅழுத்தத்தையும்
இறுதியில் தாழ்வு மனப்பான்மையும் கொண்டு செல்லும்.

எனவே நமது திறமைகளை
நாம்தான் கண்டு பிடிக்க வேண்டும்.
அடுத்து
கண்டுபிடித்த
நமக்குள் இருக்கும் திறமையை நாம்தான் வளர்க்க வேண்டும்.
பின்னர் <b>நமது வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது.</b>
Reply


Messages In This Thread
ஏன் தயக்கம்? - by AJeevan - 12-21-2005, 12:55 AM
[No subject] - by Selvamuthu - 12-21-2005, 01:17 AM
[No subject] - by Mathuran - 12-21-2005, 01:35 AM
[No subject] - by RaMa - 12-21-2005, 06:46 AM
[No subject] - by MUGATHTHAR - 12-21-2005, 08:05 AM
[No subject] - by hari - 12-21-2005, 09:17 AM
[No subject] - by AJeevan - 12-21-2005, 11:30 AM
[No subject] - by Rasikai - 12-21-2005, 03:48 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)