Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நடவடிக்கை எடுப்பதாக பிரதிப் பாதுகாப்பமைச்சர் உறுதியளிப்பு
#1
யாழ். பல்கலைக்கழகத்துக்கு அருகிலுள்ள 2 இராணுவ நிலைகளை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக பிரதிப் பாதுகாப்பமைச்சர் உறுதியளிப்பு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு அருகேயுள்ள இரு இராணுவ நிலைகளையும் அங்கிருந்து அகற்றுவது தொடர்பாக, தான் கூடிய கவனம் செலுத்துவதாக பிரதமரும் பாதுகாப்பு பிரதி அமைச்சருமான இரட்ணசிறி விக்கிரமநாயக்க தமிழ்க் கூட்டமைப்பினருக்கு உறுதியளித்துள்ளார்.

குடாநாட்டில் இராணுவத்தினர் மேற்கொண்ட காட்டுமிராண்டித்தனமான செயற்பாடுகளை கண்டித்து தமிழ்க் கூட்டமைப்பினர் பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை கூச்சல் குழப்பங்களில் ஈடுபட்டதையடுத்து, இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்திலேயே அவர் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக சபையில் சம்பந்தன் எம்.பி. சிறுவிளக்கமொன்றை அளித்தார். அதில்-

இன்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், குடாநாட்டு சம்பவங்கள் தொடர்பாக ஜனாதிபதியுடன் பேசுவதாகவும், நடந்த சம்பவங்கள் தொடர்பில், தான் மிகவும் கவலையடைந்துள்ளதாகவும் பிரதமரும் பிரதிப் பாதுகாப்பு அமைச்சருமான இரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்தார்.

அதேவேளை, யாழ். பல்கலைக்கழகத்துக்கு அருகேயுள்ள இரண்டு இராணுவ நிலைகளையும் அங்கிருந்து அகற்றுவது தொடர்பில், தான் கூடியளவு கவனம் செலுத்துவதாகவும் எம்மிடம் அவர் உறுதியளித்துள்ளார்.

இது விரைவில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென்பதே எமது எதிர்பார்ப்பாகுமென சம்பந்தன் தெரிவித்தார்.

Thinakural
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
நடவடிக்கை எடுப்பதாக பிரதிப் பாதுகாப்பமைச்சர் உறுதியளிப்பு - by Vaanampaadi - 12-21-2005, 11:15 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)