12-21-2005, 01:06 AM
செங்கை ஆழியனின் பேட்டியொன்றில் படித்த ஞாபகம். செங்கை ஆழியனின் வாடைக்காற்று நாவல் பிறகு இலங்கையில் படமாக வெளியானது. இன்நாவலினை தென்னிந்தியாவிலும் திரைப்படமாக தயாரிக்க செங்கை ஆழியன் மேயர் சுந்தரராஜனை அணுகியதாகவும், அன்நாவலினைப்படித்த மேயர் சுந்தரராஜன் தான் உதவுவதாகவும் சொன்னார். சில மாதங்களுக்குப்பிறகு பாரதிராஜாவின் 'கல்லுக்குள் ஈரம்' என்ற திரைப்படம் வெளியானது. இப்படத்தின் கதையும் வாடைக்காற்றின் ஒன்றாக உள்ளதினால், பணபலம் உள்ள தமிழ் நாட்டுச்சினிமாவிற்கு முன்னால் ஒன்றும் செய்யமுடியாது என்று கவலையுடன் செங்கை ஆழியன் அப்பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்

