12-21-2005, 12:32 AM
<b>பாரதிராஜாவின் அலைகள் ஓய்வதில்லை </b>
- சின்னராசு
<img src='http://www.vikatan.com/cinema/2005/dec/19alaigal3.jpg' border='0' alt='user posted image'>
பாரதிராஜாவின் கல்லுக்குள் ஈரமும், அதனை அடுத்து வந்த நிழல்களும் வெற்றிப் படங்களாக அமையாததால், அப்படி ஒரு சந்தர்ப்பத்திற்காகவே காத்திருந்தவர்கள் போல, பலர் பாரதிராஜாவை தன் மனம் போன போக்கில் விமர்சனம் செய்தார்கள். குறிப்பாக அதில் சில பத்திரிகைகாரர்கள் இருந்தார்கள்.
இயக்குனர் பாக்யராஜ் தனது குரு பாரதிராஜாவிடம் இருந்து, விலகி சென்ற பின், சுவரில்லாத சித்திரங்கள், ஒரு கை ஓசை, இன்று போய் நாளை வா, மௌன கீதங்கள் ஆகிய வெற்றிப்படங்களைத் தந்த நிலையில் பாரதிராஜா தந்த வெற்றிப் படங்கள் எல்லாம் பாக்யராஜின் துணையினால்தான் சாதிக்க முடிந்ததாக ஒரு கருத்தை பரப்ப ஆரம்பித்தார்கள்.
அந்த சமயம் ஒரு பத்திரிகையில் வாசகர் ஒருவர் இது சம்பந்தமாக கேள்வி ஒன்றை கேட்டார்.
பாக்யராஜ் எழுதாவிட்டால் பாரதிராஜா வெற்றி பெறமாட்டார் போலிருக்கிறதே? என்பதே அவர் கேள்வி.
அதற்கு பதிலளித்த பத்திரிகை ஆசிரியர், பாக்கியை ஏன் விட்டு விட்டீர்கள் என கேட்டிருந்தார்.
அதாவது பாக்யராஜின் கதை வசனம் மட்டுமல்ல. அவருடைய சிறந்த ட்ரிட்மெண்டுகள் ஆங்காங்கே காட்சிகளில் கையாளுகிற பாக்யராஜின் இந்த யுக்திகள் எல்லாமே சேர்ந்த உழைப்புதான் பாரதிராஜாவுக்கு புகழைத் தந்திருக்கிறது என்ற பொருள்பட அந்தப் பத்திரிகை ஆசிரியர் தன் பதிலை தந்திருந்தார்.
அதற்கு முன் பாரதிராஜா வரிசையாக வெற்றிகளை பெற்றுவந்த நேரம் இவரைப் போல இன்னொருவர் உண்டா என்று எழுதிய பத்திரிகைகளே இப்போழுது அவர் இன்னொருவர் சரக்கை வைத்துத்தான் சாதனையாளர் போல காட்டி வந்திருக்கிறார் என ஏளனப்படுத்தின.
பாரதிராஜா உண்மையிலேயே திறமை வாய்ந்த கலைஞர் என்பதால் இம்மாதிரியான ஏளனங்களுக்கு வாயினால் பதில் சொல்லிக்கொண்டு தனக்குதானே வக்காலத்து வாங்க அவர் முன்வரவில்லை. அடுத்து பிரமிக்க வைக்கிற மாதிரி ஒரு படத்தை தராமல் இவர்களுக்குப் பதிலுக்குப் பதில் என்று பேசிக் கொண்டிருப்பது வீண் என்று எண்ணினார்.
எனவே நிழல்களை அடுத்து ஒரு பொழுது போக்கு படமாக கமல், மாதவி, வி.கே.ராமசாமி போன்ற முன்னணி நடிகர்களை வைத்து டிக் டிக் டிக் படத்தை தரப்போவதாக விளம்பரம் செய்திருந்த அவர், டிக் டிக் டிக் படத்தின் வேலைகளை சற்றுத் தள்ளிப்போட்டு விட்டு கடற்கரையோர கிராமியக் கதை ஒன்றை அடுத்து படமாக்குவதற்கு தீவிரமாக சிந்தித்தார்.
இந்தப் புதிய படத்திலும் முழுக்க முழுக்க புதுமுகங்களையே பங்கேற்க வைக்க விரும்பினார். ஒரு நாள் சென்னையில் ஒரு சாலை வழியே அவர் காரில் வந்து கொண்டிருக்கும் பொழுது நடிகர் முத்துராமன் வீட்டை கடந்து செல்லப் போகும் சமயம் அங்கே வீட்டு காம்ப்பவுண்ட்டுக்குள் ஒரு இளைஞன் பந்து விளையாடிக் கொண்டிருப்பதை கவனித்தார். முரளி என்ற பெயருடைய அந்த இளைஞன் நடிகர் முத்துராமனின் புதல்வர் தான்.
அடுத்து முத்துராமனை சந்தித்து, அவர் மகனை தனது படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கவைக்க விரும்புவதாக கூறியபோது, முத்துராமனுக்கே தனது பையனால் இவர் எதிர்ப்பார்க்கிற மாதிரி நடிப்பை தர முடியுமா என்ற சந்தேகம் எல்லாம் ஏற்பட்டது.
<img src='http://www.vikatan.com/cinema/2005/dec/19alaigal2.jpg' border='0' alt='user posted image'>
நடிகர் முத்துராமனின் புதல்வர் முரளி என்ற பெயரை பாரதிராஜா தனது படத்திற்காக கார்த்திக் என்று மாற்றி அலைகள் ஓய்வதில்லை என்ற பிரமிக்கத்தக்க வெற்றிப் படத்தை தந்த பிறகு, படத்தைப் பார்த்த முத்துராமன் வியப்பில் ஆழ்ந்தவராய் தன் கருத்துக்களை வெளியிட்டார்.
எனது மகனிடம் இப்படி ஒரு நடிப்பாற்றல் இருந்ததை நான் அறிந்திருக்கவே இல்லை. இயக்குனர் பாரதிராஜாதான் அவனிடம் உள்ள திறமையை கண்டுணர்ந்து அதனை வெளிக் கொணர்ந்தார் என கூறினார்.
அலைகள் ஓய்வதில்லை படத்தில், கார்த்திக், ராதா, முக்கிய வேடங்களில் நடித்தார்கள். மற்றும் சில இளைஞர்களை புதுமுகங்களாக கார்த்திக்கின் நண்பர்களாக நடிக்க வைத்தார். அதுவரை திரைப் பட உலகில் ஒரு வினியோகஸ்தரராக அறிமுகமாகி இருந்த தியாகராஜனை (பிரசாந்தின் தந்தை) வித்தியாசமான வில்லன் வேடத்தில் நடிக்க வைத்தார். அவருக்கு மனைவியாக அதுவரை எல்லா படங்களிலும் நடனக்காட்சிகளில் மட்டும் தோன்றிவந்த சில்க் ஸ்மிதாவை வித்தியாசமான பாத்திரத்தில் நடிக்க வைத்தார். ஸ்ரீரஞ்சனி, பண்டரிபாய் மாதிரி உருக்கமான தாய் வேடத்தில் விசுவாக வரும் கார்த்திக்கின் அம்மாவாக கமலா காமேஷை நடிக்க வைத்தார்.
அலைகள் ஓய்வதில்லை படத்தின் கதை வசனம் எழுதுபவர்களை தனது தனித்துவமான யுக்திகளுக்கேற்ப கதையையும், வசனத்தையும் அமைக்கச் செய்து காட்சிக்குக் காட்சி பாரதிராஜாவின் ட்ரிட்மெண்டே படத்தில் முதலிடம் வகிப்பதாக தயாரித்து அனைவரையும் அசத்தி காட்டினார்.
முன்பு கேள்வி & பதில் மூலம் பாரதிராஜாவை ஏளனம் செய்ய முயன்ற பத்திரிகை ஆசிரியரும் அடேயப்பா பாரதிராஜா என்று மூக்கின்மேல் விரல் வைத்தது போல விமர்சனம் செய்தார். அலைகள் ஓய்வதில்லை படத்தின் ஒரு காட்சியை தனியாக குறிப்பிட்டு இன்னொரு பத்திரிகையாளர் பாரதிராஜா எவ்வளவு பெரிய கலைஞர் என வியப்பை வெளிப்படுத்தினார். அந்த காட்சி இதுதான்.
கதாநாயகி மேரியாக வரும் ராதாவும், அவளுடைய தோழிகளும் கடற்கரை ஈர மணலில் கண்ணாம்பூச்சி ஆட்டம் விளையாடிக் கொண்டிருப்பார்கள். மற்ற பெண்களெல்லாம் ஒளிந்து கொள்ள அதுவரை கண்கள் மூடப்பட்டு நிற்கும் பெண் மறைந்து கொண்ட தோழிகளை தேடுவதற்கு புறப்படும்போது, ஈரமணல் வழியே கால்தடம் எங்கே எல்லாம் போய் இருக்கிறதோ அங்கெல்லாம் ஓடி தோழிகளை கண்டுபிடிப்பாள். இதை மறைந்து இருந்து கவனிக்கிறார் கார்த்திக்! அடுத்து ராதாவின் கண்களை மூடச் செய்துவிட்டு தோழிகள் மறைந்து கொண்ட சமயம், ராதா கண்களை திறந்து அவர்களை தேடி புறப்படுகிறார். இந்த சந்தர்ப்பத்தை கார்த்திக் பயன்படுத்தி ராதா தோழிகளை தேடப் புறப்படும் முன் ஈர மணலில் தனது கால் தடங்களை பதித்து அங்குள்ள மறைவான பகுதியில் போய் கால் தடம் முடிவது மாதிரி செய்து ஒளிந்துகொள்வார்.
அந்த புதிய கால் தடம் ராதாவுக்கு ஒளிந்து இருக்கும் தனது தோழிகளை காட்டித் தரும் என்ற நம்பிக்கையில் வேகமாக அதை தொடர்ந்து கார்த்திக் மறைந்து இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்து விடுகிறார். அப்படி ஒரு இருட்டுப் பகுதியில் கார்த்திக் எதிரே சற்றும் எதிர்பாராமல் ராதா தனியே மாட்டிக் கொண்டு திகைக்கிற அந்த இடம் ரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்தி அரங்கமே கைத் தட்டலில் அதிரும்.
<img src='http://www.vikatan.com/cinema/2005/dec/19alaigal1.jpg' border='0' alt='user posted image'>
இந்தக் காட்சியில் கதாசிரியருக்கோ, வசனகத்தாவுக்கோ என்ன வேலை? இது முழுக்க முழுக்க இயக்குனரின் வேலை அல்லவா!
இந்தக் காட்சியை பார்த்துத்தான் அந்த குறிப்பிட்ட பத்திரிக்கை வியந்து பாராட்டியது.
பாரதிராஜா தனது படங்களில் கிராமப் புறங்களில் பெரியவர்கள், சிறியவர்கள் பழக்க வழக்கங்களை எல்லாம் அறிந்து அதை காட்சிகளாக படங்களில் புகுத்துவதுண்டு.
அலைகள் ஓய்வதில்லை படத்திலும் அப்படி ஒரு நுணுக்கமான காட்சி உண்டு. வீட்டிலே சிறைப்பட்ட ராதா அடுத்த நாள் பட்டணத்துப் பள்ளிக்கு செல்லப் போகிறாள் என்பதை அறிந்த கார்த்திக் தனது நண்பர்கள் துணையோடு காதலியை அவள் வீட்டு மாடியிலே தனியே வந்து சந்திப்பார்.
அப்போழுது ராதாவிடம் அவள் நாளை படிப்புக்காக வெளியில் புறப்படுவதை தடுக்க ஒரு யோசனை சொல்வார். அதாவது வெங்காயத்தை கக்கத்துக்குள் வைத்துக் கொண்டால் அதன் சூட்டில் தானாகவே காய்ச்சல் வந்துவிடும் என்ற யோசனைதான் அது. இதுவெல்லாம் கிராமப்புற இளைஞர்களுக்கு தெரிந்த விஷயம். பள்ளிக்கு மட்டம்தட்ட கிராமங்களில் இதை கையாள்வது உண்டு. படத்தின் காட்சிக்கேற்ப பாரதிராஜா இந்த விஷயத்தை அருமையாகப் பயன்படுத்தியிருந்தார்.
முதலில் ராதாவின் கக்கங்களில் வெங்காயத்தை வைக்கின்ற கார்த்திக் அடுத்து தனது கக்கங்களிலும் வெங்காயத்தை வைத்துக் கொள்வார்.
அதைக் கண்டு வியந்த ராதா, உனக்கெதுக்கு காய்ச்சல்? என்று கேட்பாள்.
அப்போது கார்த்திக், நீ வேறு நான் வேறா? உனக்குள்ள துன்பம் எனக்கு வேண்டாமா? என்று பொருள்பட பதில் அளிப்பது நம்மை மெய்சிலிர்க்கச் செய்யும்.
அதேபோல அந்தப் படத்தில் ஒவ்வொரு வசனங்களையும் பாரதிராஜா தன் சிந்தனைக்கேற்ப புதுமையாக எழுத வைத்திருந்தார்.
ஒரு கட்டத்தில் ராதாவின் அண்ணன் தனது தங்கையின் காதலை தெரிந்துகொண்டு அவளை நையப் புடைத்துவிடுவார். அண்ணன் கொடுத்த அடியில் உடம்பெல்லாம் புண்ணாகிப் போய் ராதா இருப்பார். அந்த சமயம் ராதாவின் அண்ணி சில்க் சுமிதா தன் மைத்துணி பெயரில் உள்ள பரிவினால், ஏண்டி இதெல்லாம் உனக்கு வலிக்கலியா? உங்க அண்ணன் குணம் தெரிஞ்சும் ஏன் இப்படி நடந்துக்கறே? என்று கேட்பார்.
அதற்கு ராதா, அண்ணி நாங்க காதலிக்கும் போதே இப்படி எல்லாம் நடக்கும். இந்த வேதனை எல்லாம் தாங்க துணிவு இருந்தால்தான் காதலிக்கலாம் என்பதை தெரிந்துகொண்டே நாங்கள் காதலிக்க ஆரம்பித்ததால் இந்த அடியெல்லாம் வேதனையை தரவில்லை என்பார். இந்தப் படத்தின் உச்சக்கட்ட காட்சி முற்றிலும் மாறுதலான புதுமை நிறைந்த காட்சி.
வீட்டைவிட்டு வெளியேறிய இளங் காதலர்களை கண்டுபிடித்து கண்டம் துண்டமாக வெட்டியெறியப் போவதாக தியாகராஜன் சூளுரைப்பதுடன் ஊராரையும் தன் பக்கம் சேர்த்துக் கொண்டு ஊரெல்லாம் அவர்களை தேடி அலைவார்.
அதிகாலை விடியும் நேரம் கடற்கரை பாறையில் அவர்கள் இருப்பதை அறிந்து அங்கே ஊராரோடு அவர்களை நெருங்கி வருவார்.
கார்த்திக்கின் நண்பர்களான இளைஞர்கள் எல்லாம் தியாகராஜனையும் ஊராரையும் தடுக்க முயன்று அடிபட்டு அங்கங்கே விழுந்து விடுவார்கள். அதற்கு மேல் தியாகராஜன் கோபத்துடன் கார்த்திக்கையும், ராதாவையும் நெருங்கி தன் கையில் உள்ள கோடாரியால் அவர்கள் தலையை பிளக்க ஓங்கும் போது, சர்ச்சில் உள்ள பாதர் வந்து அவன் கையை பிடித்து தடுத்துவிடுவார்.
இதற்குமேல் தியாகராஜனுக்கும் & பாதருக்கும் வாக்கு வாதம் நிகழும். நான் என் மதத்தை விட்டுக்கொடுக்க முடியாது. என் மதத்தை சேர்ந்த என்னோடு உடன் பிறாந்த தங்கை இன்னொரு மதத்துக்காரனை அதிலும் வேறு ஜாதிக்காரனை மணந்து கொள்வதற்கு சம்மதிக்க முடியாது என் கூறுவார்.
அந்த நேரம் யாரும் எதிர்பாராத வண்ணம் கார்த்திக் தனது மதத்தையும், ஜாதியையும் குறிக்கும் பூணூலை அறுத்து கையிலே எடுப்பார். அதே நேரம் ராதா தான் அணிந்திருந்த சிலுவை டாலர் தொங்கும் சங்கிலியை கையில் அறுத்து அவரும் அதை ஏந்திக்கொண்டு நிற்பார்.
அப்போழுது கார்த்திக்கும் & ராதாவும் நாங்கள் இப்பொழுது எந்த மதமும் இல்லை. எந்த ஜாதியும் இல்லை. எங்களை வாழவிடுங்கள் என கேட்பார்கள்.
<b>மிக துணிச்சலான இந்த உச்சக்கட்ட காட்சியை அந்த சமயம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் பார்த்து வியந்து மிகவும் பாராட்டியதாக கூறுவார்கள். </b>
இந்த படம் வெளிவந்த பிறகு பாரதிராஜாவின் அசாதாரண திறமைகளை எல்லோருமே புரிந்து கொண்டதால் இனி இவரை ஏளனம் செய்ய நினைத்தால் அதன்மூலம் நமது அறியாமையே வெளிப்படும் என்பதை உணர ஆரம்பித்தார்கள்.
-Vikadan