12-20-2005, 06:23 PM
யாழ். வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் வைத்து சிறீலங்கா இராணுவத்தினன் ஒருவர் உயர்பாதுகாப்புவலய மக்கள்படையால் கத்திகுத்திற்கு இலக்கியுள்ளார். இன்று காலை 10.00 மணியளவில் நடைபெற்ற இச்சம்பவத்தில் அஜத் குமார என்ற இராணுவத்தினனே படுகாய மடைந்துள்ளார். இவர் தற்போது பலாலி இராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதேவேளை மணற்காடு, குடத்தனைப் பகுதிகளில் சிறீலங்கா கடற்படையினர் தேடுதல்களை நடாத்தியுள்ளனர். வீடு வீடாகச் சென்று கடற்படையினர் மேற்கொண்ட இந்த தேடுதலினால், அப்பகுதி மக்கள் பல்வேறு துன்புறுத்தல்களிற்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

